பெரா மாவட்டம்
மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரா மாவட்டம் (ஆங்கிலம்: Bera District; மலாய்: Daerah Bera; சீனம்: 百乐县; ஜாவி: ﺮﺍ}}); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம்.

இந்த மாவட்டத்தின் மேற்கில் நெகிரி செம்பிலான் மாநிலம்; தெற்கில் ஜொகூர்; மாநிலம்; எல்லைகளாக உள்ளன. 2,241 கி.மீ² பரப்பளவு கொண்டது. மலேசியப் புகழ் பெரா ஏரி இந்த மாநிலத்தில்தான் உள்ளது.
மலேசியாவின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இந்த மாவட்டத்தின் பெரா தொகுதியைச் சேர்ந்தவர். இவர் 2021 ஆகஸ்டு மாதம் 21-ஆம் தேதி முதல், நாட்டின் 9-ஆவது பிரதமராகப் பதவி வகித்து வருகின்றார்.[2]
Remove ads
சொற்பிறப்பியல்
மலேசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான பெரா ஏரி (Lake Bera) இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. 1994 நவம்பர் மாதம் முதல் ராம்சர் உடன்படிக்கையின் கீழ் அந்த ஏரி பாதுகாக்கப் பட்டு வருகிறது.[3]
அந்த ஏரியின் பெயரே இந்த மாவட்டத்திற்கும் வைக்கப்பட்டது. பெரா ஏரிப் பகுதியில் செமலை (Semelai) எனும் ஒராங் அஸ்லி பழங்குடியினர் வாழ்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, பெரா எனும் பெயர் ரெபா (Reba) எனப்படும் ஒரு வகை கடல் பாசியில் இருந்து பெறப்பட்டது. பெரா ஏரியில் அந்த வகையான கடல்வாழ் பாசிகள் உள்ளன.[4]
Remove ads
பொது

பெரா மாவட்டத்தின் தலைநகரம் பெரா. இந்த நகரம் முன்பு தெமர்லோ மாவட்டத்தில் இருந்தது. 1992-ஆம் ஆண்டு பெரா மாவட்டம் உருவாக்கப் பட்டது. அதன் பின்னர் பெரா நகரம் இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆனது.
பகாங் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியியில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தின் வடக்கில் தெமர்லோ மாவட்டம் மற்றும் மாரான் மாவட்டம் உள்ளன. கிழக்கில் ரொம்பின் மாவட்டம் மேற்கில் பெந்தோங் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செம்போல் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
முக்கிம்கள்
பெரா மாவட்டத்தில் இரண்டு முக்கிம்கள் எனும் துணை மாவட்டங்கள் உள்ளன.
- பண்டார் பெரா (165,094 ஹெக்டேர்)
- திரியாங் (56,350 ஹெக்டேர்)
தெற்கில் இருந்து, மலேசிய இரயில் சேவையின் நகரிடை இயங்கும் ஊர்தி (KTM Intercity) இந்த மாவட்டத்தின் வழியாக பகாங் மாநிலத்திற்குள் நுழைகின்றது. கெமாயான்; கெராயோங்; மெங்காராக் நிலையங்களில் நின்று செல்கின்றது.
Remove ads
முக்கிய நகரங்கள்
பெரா மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்:
- பண்டார் பெரா
- திரியாங்
- மெங்குவாங்
- கெமாயான்
- கெராயோங்
- மெங்காராக்
மக்கள்தொகையியல்
பின்வருபவை 2010-ஆம் ஆண்டு மலேசிய புள்ளியியல் துறையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்.
Remove ads
பெரா மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்
பெரா மாவட்டத்தில் (Bera District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 73 மாணவர்கள் பயில்கிறார்கள். 31 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads