மர்மரா பிராந்தியம்

துருக்கிய நாட்டின் ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia

மர்மரா பிராந்தியம்map
Remove ads


துருக்கியின் மர்மரா பிராந்தியம் (Marmara Region), துருக்கி நாட்டின் 7 புவியியல் பிராந்தியங்களில் ஒன்றாகும். இப்பிராந்தியம் துருக்கியின் வடமேற்கில் உள்ள மர்மரா கடலைச் சுற்றி அமைந்துள்ளது. இப்பிராந்தியம் துருக்கியின் 7 பிராந்தியங்களில் இது இரண்டாவது சிறிய மாகாணம் ஆகும். ஆனால் மக்கள்தொகை அடர்த்தியில் முதலிடத்தில் உள்ளது. இப்பிராந்தியத்தில் 11 மாகாணங்கள் உள்ளது. இதன் பெரிய நகரம் இஸ்தான்புல் ஆகும். பிற முக்கிய நகரங்கள் பூர்சா, இஸ்மித், பாலிகேசிர், தெகிர்தாக், சானாகலே மற்றும் எடிர்னே ஆகும். 67,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை சனவரி 2022ல் 2,70,50,405 ஆகும். துருக்கியில் இப்பிராந்தியமே மக்கள் தொகை மற்றும் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் உள்ளது. மேலும் இது ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களை இணைக்கிறது.

விரைவான உண்மைகள் துருக்கியின் மர்மரா பிராந்தியம் Marmara Bölgesi, நாடு ...
Remove ads

அமைவிடம்

மர்மரா பிராந்தியத்தின் மேற்கில் ஏஜியன் கடல் மற்றும் கிரேக்கமும், வடக்கில் பல்கேரியா மற்றும் கருங்கடலும், கிழக்கில் கருங்கடல் பிராந்தியம், மற்றும் தெற்கில் ஏஜியன் பிராந்தியம் எல்லைகளாக உள்ளது.

மர்மரா பிராந்திய மாகாணங்கள்

  1. பலகேசீர் மாகாணம்
  2. பிலெசிக் மாகாணம்
  3. பர்சா மாகாணம்
  4. கனக்கலே மாகாணம்
  5. எடிர்னே மாகாணம்
  6. இஸ்தான்புல் மாகாணம்
  7. கோர்க்லாரெலி மாகாணம்
  8. கோகேலி மாகாணம்
  9. சாகர்யா மாகாணம்
  10. தெகிர்தா மாகாணம்
  11. யலோவா மாகாணம்

தட்ப வெப்பம்

மர்மரா பிராந்தியத்தின் ஏஜியன் கடற்கரை மற்றும் தெற்கு மர்மரா கடற்கரைப் பகுதிகளில் நடுநிலக்கடல் சார் வானிலை மற்றும் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை கொண்டது. மர்மரா பிராந்தியத்தின் உட்புறப் பகுதிகளில் கடல்சார் காலநிலையும், கருங்கடல் பகுதிகளில் ஈரப்பதமான கண்ட காலநிலையும் கொண்டுள்ளது. கோடையில் குறைந்த வெப்பமும்; குளிர்காலத்தில் குளிரும், சில நேரங்களில் பனிப்பொழிவும் ஏற்படுகிறது.

இதனையும் காண்க

Thumb
இஸ்தான்புல் நகரத்தின் அகலப்பரப்புக் காட்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads