மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம் ஆங்கிலம்: Sri Poyatha Moorthi Temple of Malacca) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான இந்து ஆலயம் ஆகும். மேலும் கடல்சார் தென்கிழக்கு ஆசியாவில் மிகப் பழைமையான இந்து ஆலயங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. அத்துடன் தற்போது மலேசியாவில் இருக்கும் சில சிட்டி கோயில்களில், இந்தக் கோயிலும் ஒன்றாகும்.[1]

"ஆர்மனி சாலை" என்றும் அழைக்கப்படும் ஜாலான் துக்காங் எமாஸ் சாலையில், கம்போங் கிளிங் பள்ளிவாசல் மற்றும் செங் ஊன் தெங் கோயிலுக்கு அருகாமையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
Remove ads
பொது
1781-ஆம் ஆண்டு மலாக்காவின் டச்சு காலனித்துவ அரசாங்கம், ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்காக அங்கு வாழ்ந்த சிட்டி மக்களுக்கு ஒரு நிலத்தை வழங்கியது. அப்போது சிட்டி மக்களின் தலைவராக இருந்த தேவநாயகம் சிட்டி என்பவரால் அந்த கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் விநாயகர் அல்லது யானை தெய்வமான விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [2]
பின் அறையில் யானையின் தலை மற்றும் நான்கு கைகளுடன் கூடிய ஒரு தெய்வத்தின் சிற்பம் உள்ளது. முருகனின், தம்பி விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பலிபீடமும் உள்ளது.[2]
Remove ads
வரலாறு
மலாக்காவை ஆட்சி செய்த இடச்சு காலனித்துவ அரசாங்கம், 1780-களில் மலாக்கா நகரின் மையத்தில் வாழ்ந்த சிட்டி சமூகத்திற்கு, (லாட் எண். 62 டவுன் ஏரியா XIU மற்றும் 15,879 சதுர அடிகள் (1,475.2 m2)) கோயில் அமைக்கும் நோக்கத்திற்காக.[1] ஒரு குறிப்பிட்ட நிலத்தை வழங்கியது.
இடச்சு அரசாங்கத்தின் மானியத்தில் 1781-ஆம் ஆண்டில் கோயில் கட்டி முடிக்கப்பட்டது.[1] அப்போது சிட்டி சமூகத்தின் தலைவராக இருந்த தேவநாயகம் என்பவரின் தலைமையின் கீழ் இந்த ஆலயம் இயங்கியது.
Remove ads
கட்டிடக்கலை
கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்களை எளிமைப்படுத்தி இருப்பதை பொய்யாதமூர்த்தி கோயிலில் காணலாம். பல்லவ பாணியில் சிக்கலான திராவிட கட்டிடக்கலை கொண்ட தென்னிந்திய கோயில்களில் இருந்து வேறுபட்டது. பல வரிசைகளில் இந்து கடவுள்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கும். ஆனால், சிட்டி கோயிலில் ஒரு வரிசையில் ஒரு படம் மட்டுமே இருக்கும். ஸ்ரீ போயத மூர்த்தி கோயிலில் உள்ள மூன்று வரிசைகளில் ஒவ்வொன்றிலும் ஒரே கடவுள்.
நிர்வாகம்
பொய்யாதமூர்த்தி கோவில், மலாக்கா சிட்டிகளின் உடைமை என்றாலும், கடந்த பல ஆண்டுகளாக மலாக்கா நகரத்தார்கள் எனும் மலாக்கா நாட்டுக்கோட்டை செட்டியார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மலாக்கா மாநகரப் பகுதியில், மலாக்கா நகரத்தார்களுக்கு ஒரு கோயிலை அமைக்க முந்தைய பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்தது.[1]
திருவிழாக்கள்
தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், தீபாவளி போன்ற நிருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் னடைபெறுகின்றன. மார்கழி மாதத்தில் கோலங்கள் போடுவது; மலர்களைக் கோயில் வாசலில் வைத்து அழகு செய்வது; கேளமை சரசுவதி சடங்கு; மகா சிவராத்திரி, ஏகாதசி, அம்மன் திருவிழா, தைப்பூசம், மாசிமகம், சித்திரை, பங்குனி உத்திரம் போன்ற சடங்குகள் நடைபெறுகின்றன.
இந்திய தெய்வங்களின் அழகிய சிற்பங்களுடன் மரத்தால் செய்யப்பட்ட மூன்று இரதங்கள் உள்ளன; மேலும் அவை சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய இரதங்கள் ஆகும்.[1]
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads