மார்ட்டின் கப்டில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்ட்டின் ஜேம்ஸ் கப்டில் (Martin James Guptill, பிறப்பு: 30 செப்டம்பர் 1986) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்.[1] முதல்-வரிசை வலக்கை மட்டையாளரான இவர் நியூசிலாந்தின் பல வயதுக் குழுக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
2006 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணியில் விளையாடினார். தனது முதலாவது முதல் தரப் போட்டியை 2006 மார்ச் மாதத்தில் விளையாடினார்.
2009 சனவரியில் தனது முதலாவது ஒரு-நாள் போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடி, முதல் போட்டியிலேயே சதமடித்த முதலாவது நியூசிலாந்தர் என்ற சாதனையைப் படைத்தார். தனது முதலாவது தேர்வு ஆட்டத்தை 2009 மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார்.[1]
2015 உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடி ஆட்டமிழக்காமல் 163 பந்துகளை எதிர்கொண்டு 237 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம் துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் மற்றும் சர்வதேச அளவில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் எனும் சாதனையைப் படைத்தார்.[2]
Remove ads
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
ஜனவரி 10, 2009 ஆம் ஆண்டில் ஓக்லாந்தில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இவரின் முதல் போட்டியில் நூறு அடித்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் நூறு ஓட்டங்களடித்த முதல் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையைப் படைத்தார். கிறிஸ் கெயில் வீசிய பந்தில் ஆறு அடித்து இவரின் நூறாவது ஒட்டத்தை அடித்தார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த முதல் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் மற்றும் சர்வதேச வீரர் எனும் சாதனையையும் படைத்தார். மேலும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தவர் எனும் சாதனையைப் படைத்தார். மார்ச் 2009 இல் ஆமில்டன், நியூசிலாந்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இதில் போட்டியின் முதல் பகுதியில் 14 மற்றும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 48 ஓட்டங்கள் எடுத்தார்.
டிசம்பர் 14,2009 இல் நேப்பியர், நியூசிலாந்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் முதல் முறையாக பந்துவீசினார். இதில் சல்மான் பட் மற்றும் இம்ரான் பர்ஹாத் ஆகிய மட்டையாளர்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 16 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 மட்டையாளர்களை வீழ்த்தினார்.[3]
2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து இரண்டு நூறுகளை அடித்தார். இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இரண்டாவதாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 103* ஓட்டங்கள் எடுத்தார். இவரின் ஸ்டிரைக்ரேட் 83.73 ஆகும். ரோஸ் பவுல், சவுதாம்ப்டனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 189* ஓட்டங்கள் எடுத்தார். இவரின் ஸ்டிரைக்ரேட் 121.93 ஆகும். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 359 ஓட்டங்கள் எடுத்து அணியின் மொத்த ஓட்டங்களில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஐந்தவாது இடத்தைப் பெறுவதற்கு உதவினார். மேலும் இங்கிலாந்து மண்ணில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்பட்டியலில் விவியன் ரிச்சர்ட்ஸ்சின் சாதனைஅயை சமன் செய்தார்.[4]
Remove ads
பன்னாட்டு சதங்கள்
தேர்வு சதங்கள்
ஒருநாள் பன்னாட்டு சதங்கள்
பன்னாட்டு இருபது20
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads