மெர்சிங் மாவட்டம்

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

மெர்சிங் மாவட்டம்map
Remove ads

மெர்சிங் மாவட்டம் (ஆங்கிலம்: Mersing District; மலாய்: Daerah Mersing; சீனம்:古来区; ஜாவி: مرسيڠ ) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு மெர்சிங் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

விரைவான உண்மைகள் மெர்சிங் மாவட்டம்Daerah MersingMersing District, நாடு ...

மெர்சிங் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 355 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 127 கி.மீ.; பகாங், பெக்கான் அரச நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

Remove ads

பொது

தென் சீனக் கடலைக் கடற்கரையாகக் கொண்ட மெர்சிங் மாவட்டம் நிறைய சுற்றுலாத் தீவுகளைக் கொண்டது. இங்கு அழகு அழகான கடற்கரைகள்; குறைந்த விலையில் தங்கும் விடுதிகள்; தடங்கல் இல்லா படகுச் சேவைகள்; விதம் விதமான கடல்வகை உணவுப் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன.[2]

இந்த மாவட்டத்தின் கிழக்குப் பகுதி, கண்ணிற்கு எட்டிய தூரம் வரையில் வெண்மணல் கடற்கரைகளுக்கும், இயற்கை அழகிற்கும் பிரபலமானது.[3]

பொருளாதார நடவடிக்கைகள்

இந்த மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள் என்றால் இயற்கைச் சுற்றுச்சூழல் சுற்றுலா, மீன்பிடித் தொழில், கடல் சார் மீன்வளர்ப்புத் தொழில், விவசாயம் மற்றும் இலகு வகை தொழிற்சாலைகள் ஆகும்.

மெர்சிங் மாவட்டத்தில் ஏழுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவை உள்நாட்டு; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன. தியோமான் தீவிற்குச் சுற்றுலாப் பயணிகளைப் படகு மூலம் கொண்டு செல்ல மெர்சிங் நகரத்தில் படகுத் துறையும் உள்ளது.[4][5]

Remove ads

வரலாறு

Thumb
மெர்சிங் நகருக்கு அருகில் கடற்கரை

சீன மொழிச் சொல்லான "மாவ் ஷெங் போர்ட்" (Mau Sheng Port) எனும் சொல்லில் இருந்து மெர்சிங் எனும் சொல் பெறப்பட்டு இருக்கலாம் நம்பப் படுகிறது. 1880-ஆம் ஆண்டு முதல் அந்தச் சொல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. நல்ல அறுவடை என்று அந்தச் சொல் பொருள் படுகிறது.

மேலும் அமீர் சிங் (Amir Singh) அல்லது மென் சிங் (Men Singh) என்று பெயர் கொண்ட சீக்கிய வணிகர் ஒருவரிடம் இருந்தும், மெர்சிங் எனும் பெயர் பெறப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.[6][7]

Remove ads

நிர்வாகப் பகுதிகள்

Thumb
மெர்சிங் மாவட்ட முக்கிம்கள்.

மெர்சிங் மாவட்டம் 10 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப் படுகிறது.[8]

  • மெர்சிங், பத்து சாவான் தீவு (Mersing, Pulau Batu Chawan)
  • திரியாங், லாலாங் தீவு (Triang Pulau Lalang)
  • செதிண்டான் தீவு, காஜா தீவு (Pulau Setindan, Pulau Gajah)
  • பெஞ்சாபோங், பெலாண்டோக் தீவு, மாவார் தீவு, பூச்சோங் தீவு (Penyabong, Pulau Pelandok, Pulau Mawar, Pulau Puchong)
  • தெங்காரோ, கெராங்கா தீவு, லீலாங் தீவு (Tenggaroh, Pulau Kerengga, Pulau Lilang)
  • ஜெமாலுவாங், பெலுனாக் தீவு (Jemaluang, Pulau Belunak)
  • இதர தீவுகள்
  • பாடாங் எண்டாவ் (Padang Endau)
  • செம்புரோங் (Sembrong)
  • லெங்கோர் (Lenggor)

தேர்தல் முடிவுகள்

மலேசிய மக்களவை

மலேசியப் பொதுத் தேர்தல், 2018

மலேசிய மக்களவையில் மெர்சிங் மாவட்டத்தின் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

மேலதிகத் தகவல்கள் #, தொகுதி ...

ஜொகூர் மாநிலச் சட்டமன்றம்

மலேசியப் பொதுத் தேர்தல், 2018

ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் மெர்சிங் மாவட்டப் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[9]

மேலதிகத் தகவல்கள் #, மாநிலம் ...
Remove ads

சுற்றுலா இடங்கள்

மெர்சிங் மாவட்டத்தின் கடல் எல்லையில் உள்ள 13 தீவுகளில் ஆக்ஸ்பில் (Hawksbill) ஆமை; மற்றும் பச்சை கடல் ஆமைகள் முட்டையிடும் தளங்களாக உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கிட்டத்தட்ட 200 ஆமைகள் ஜொகூரில் கரை ஒதுங்குகின்றன.[10]

Remove ads

காட்சியகம்

ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads