மௌன ராகம் (தொலைக்காட்சித் தொடர்)

இந்த தொலைக்காட்சி நன்றாகவே தெரியும் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மௌன ராகம் என்பது விஜய் தொலைக்காட்சியில் 24 ஏப்ரல் 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பான இசைக் குடும்பக் கதை பின்னணியைக் கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் வங்காளி மொழி தொடரான 'போட்டால் குமார் கான்வலா' எனும் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

விரைவான உண்மைகள் மௌன ராகம், வகை ...

இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்க, கிருத்திகா, ஷெரின், ஷமிதா ஸ்ரீகுமார், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித் போன்ற பலர் நடித்துள்ளார்கள். மற்றும் பிரபல இசை அமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் இந்தத் தொடருக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.[1][2][3][4][5]

கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆகஸ்ட் 8, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகி, நவம்பர் 19 செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு அன்று 863 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் இரண்டாம் பாகம் 1 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகின்றது.

Remove ads

கதைச்சுருக்கம்

அழகிய குரல் வளமும் மனமும் கொண்டவள் சக்தி என்னும் ஏழு வயது சிறுமி. அவளது அம்மா மற்றும் தாய் மாமனின் பாதுகாப்பில் வளரும் சக்திக்கு ஒரு பெரிய கவலை உண்டு. தனது தந்தை யார் என்று தெரியாமல் இருப்பதால் பல அவமானங்களை சந்திக்கிறாள். எந்த ஒரு இசைக்கும் ஏற்ப பாடும் திறமையைக் கொண்ட சக்தி பிறகு ஒரு கட்டத்தில் தனது தாயிடமிருந்து தான் ஒரு பாடகரின் குழந்தை என்பதை அறிகிறாள். திடீரென சக்தியின் தாய் மல்லிகா இறக்க, அத்தையின் கொடுமையில் இருந்து தப்பிக்க சென்னை வருகிறாள் அங்கு தனது தந்தை யாரென தெரிந்தும் சொல்லமுடியாத சுழ்நியில் சக்தி தள்ளப்படுகிறாள்.

தான் ஒரு பெண் குழந்தை இல்லை ஒரு ஆண் குழந்தை என சொல்லி வேலன் என பெயர் மாற்றி கொண்டு தனது தந்தையுடன் பெரியப்பாவின் அரவணைப்பில் வாழ்கிறாள். இவன் மீது பாசம் கொள்ளும் கார்த்தி இதை விரும்பாத கார்த்திக்கின் மனைவி கதாமப்ரி வேலணை பிரிக்க பல திட்டம் போடுகின்றார். வேலன் பற்றிய உண்மைகள் தெரிய வந்தாள் இவர்களின் வாழ்வில் என்ன மாற்றம் நடக்கப்போகிறது என்பதை ஒரு இசை கலந்த கதை களத்துடன், பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்ததாக இந்த தொடரின் கதை நகர்கிறது.

Remove ads

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • கிருத்திகா - சக்தி கார்த்திக் கிருஷ்ணா / சக்தி வேலன் / சத்யா (1-863)
    • மல்லிகா மற்றும் கார்த்திக் கிருஷ்ணாவின் மகள், தந்தையை போல நன்றாக பாடும் திறமை கொண்டவள்.
  • ஷெரின் (1-831) → நஸ்ரியா ( 852-863) - சுருதி
    • காதம்பரி மற்றும் கார்த்திக் கிருஷ்ணாவின் மகள்.
  • ராஜீவ் பரமேஷ்வர்- கார்த்திக் கிருஷ்ணா
    • மல்லிகா மற்றும் காதம்பரியின் கணவன், பிரபலமான பாடகர்.
  • ஷமிதா ஸ்ரீகுமார் (Episode 1-831) → அனுஸ்ரீ (832-863) - காதம்பரி
    • கார்த்திக் கிருஷ்ணாவின் மனைவி மற்றும் ஸ்ருதியின் தாய், இந்த தொடரில் இவர் தான் வில்லி. பிடித்ததை அடைவதற்காக எதையும் செய்பவர், வேலணை வெறுப்பவர்.
  • சிப்பி ரஞ்சித் - மல்லிகா (1-19 / 535-863)
    • கார்த்திக் கிருஷ்ணாவின் முதல் மனைவி மற்றும் சக்தியின் அம்மா.

துணை கதாபாத்திரம்

  • ஆனந்த் பாபு - விஸ்வநாதன்
    • காதம்பரியின் தந்தை
  • சீமா ஜி. நாயர் - ஸ்வர்ணா
    • மல்லிகாவின் அண்ணி, சக்தியின் அத்தை, சக்தியின் பாடும் திறன் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பவர்.
  • ஜனனி அசோக் குமார் - மல்லிகா
  • தமிழ் செல்வி - நந்தினி முரளி
  • மனோகர் கிருஷ்ணா- முரளி
  • அஞ்சலி தேவி - ருக்குமணி விஸ்வநாதன்
  • தேவிகா - பார்வதி
  • நாதன் ஷியாம் - ராகவ்
    • காதம்பரியின் முன்னாள் காதலன் மற்றும் ஸ்ருதியின் போலி தந்தை.
  • நாதன் ஷியாம் - குரு (குருமூர்த்தி)
    • ராகவ்வின் இரட்டை சகோதரன்
  • சேசு ஜெயந்தி - மாயா
    • காதம்பரியின் சகோதரி
Remove ads

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads