ராபர்ட் (நடன இயக்குநர்)

இந்திய நடன இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராபர்ட் என்பவர் ஒரு இந்திய நடன இயக்குநர் ஆவார். இவர் இந்தியாவின் பல மொழிகளில் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் திரைப்பட நடிகராகவும் உள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறையான பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் அல்லது இவர் நடனம் அமைத்த பாடல்களில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

விரைவான உண்மைகள் ராபர்ட், பிறப்பு ...
Remove ads

தொழில்

ராபர்ட் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். குறிப்பாக மம்முட்டியின் மகனாக அழகனில் (1991) நடித்தார். ராபர்ட் பின்னர் சத்யராஜின் மாறன் (2002) படத்திலும், 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான டான்சர் ஆகியவற்றில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். டான்சர் படமானது ஒரு ஊனமுற்ற மாணவரின் நடனக் கலைஞராக சாதிப்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டது. அப்படத்தில் எதிர்மறையான பாத்திரங்களை ஏற்று நடித்த ராபர்ட்டின் நடிப்பானது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது, மேலும் அந்த ஆண்டின் பிற்பகுதியில் சிறந்த எதிர்மறை பாத்திரத்திர நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதைப் பெற்றார்.[1] அந்த காலகட்டத்தில், இவர் பவளக்கொடி (2003) இல் நடித்தார், விமர்சகர்கள் இவரது நடிப்பை விமர்சித்தனர், ராபர்ட் "உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிரமப்படுகிறார் மேலும் வேடிக்கையான உரையாடல்கள் கூட அவரது பேசும் முறையினால் அவற்றுக்கான விளைவ் ஏற்படவில்லை" என்று குறிப்பிட்டனர்.[2]

போடா போடி (2012) இல் பணியாற்றியதற்காக ராபர்ட் சிறந்த நடன இயக்குனருக்கான விஜய் விருதை வென்றார். அதில் இவர் "லவ் பண்ணலாமா?" காணொளியில் ஒரு சிறிய பகுதியில் தோன்றினார். .[3]

மொட்ட சிவா கெட்ட சிவா (2017) திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னர், நடிகர் டிங்கு, அவரும் ராபர்ட்டும் தாத்தா காரை தொடாதே என்ற பெயரில் தயாரிக்கும் படத்திலிருந்து "ஹரா ஹரா மகாதேவாகி" என்ற பாடலை இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் திருடியதாக குற்றம் சாட்டும் காணொளியை வெளியிட்டார். 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாடலை உருவாக்க அம்ரேசுடன் இணைந்து பணியாற்றியதாக டிங்கு குறிப்பிட்டார். ஆனால் தயாரிப்பு சிக்கல்களால் படத்தயாரிப்பு நின்றுவிட்டதால், அம்ரேஷ் இந்த பாடலை வேறு படத்துக்கு பயன்படுத்திவிட்டார் என்றார். 2017 பெப்ரவரியில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், அம்ரேஷ் கணேஷ் அந்தக் கூற்றுக்களை மறுத்தார்.[4][5][6]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

ராபர்ட்டின் அக்காள் அல்போன்சாவும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads