விரேந்திரநகர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விரேந்திரநகர் (Birendranagar) (நேபாளி: वीरेन्द्रनगर) மேற்கு நேபாளத்தின், மாநில எண் 6ல் உள்ள சுர்கேத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகர்புற நகராட்சியும் ஆகும்.

விரைவான உண்மைகள் விரேந்திரநகர் वीरेन्द्रनगरதோவன்சௌர், நாடு ...

நேபாள மன்னர் விரேந்திராவின் நினைவாக, இந்நகரத்திற்கு விரேந்திரநகர் எனப் பெயரிடப்பட்டது. நேபாளத்தில் திட்டமிட்டு நிறுவப்பட்ட முதல் நகரம் விரேந்திரநகர் ஆகும்.

சுர்கேத் சமவெளியில் அமைந்த விரேந்திரநகரத்தைச் சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டது.

Remove ads

அமைவிடம்

விரேந்திரநகர், நேபாளத்தின் மேற்கு வளர்ச்சி பிராந்தியம் மற்றும் மாநில எண் 6ன் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.

மக்கள் தொகையில்

2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, விரேந்திரநகரின் மக்கள் தொகை 1,05,107 ஆகும். அதில் ஆண்கள் 52,990 ஆகவும்; பெண்கள் 52,117 ஆகவும் உள்ளனர். இந்நகரத்தில் 12,045 வீடுகள் உள்ளது. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 429 பேர் வீதம் உள்ளனர். [1]

இந்நகரத்தில் உள்ளூர் தாரு மக்கள் மற்றும் ராஜ்கி மக்கள் வாழ்ந்தாலும், நேபாளத்தின் பிற பகுதியிலிருந்து குடியேறிய மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

தட்ப வெப்பம்

விரேந்திரநகரில் கோடைக்காலத்தில் பதிவான அதிகப்படியான வெப்பம், 5 மே 1999ல் பதிவான 41.8°C ஆகும். குளிர்காலத்தில் பதிவான குறைந்த அளவு வெப்பம், 9 சனவரி 2013ல் பதிவான - 0.7°C ஆகும். [2]


மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், விரேந்திரநகர் (1981-2010), மாதம் ...
Remove ads

உட்கட்டமைப்பு

விரேந்திரநகர், தைலேக் மாவட்டம், ஜாஜர்கோட் மாவட்டம் மற்றும் அச்சாம் மாவட்டங்களுக்கான வணிக மையமாக விளங்குகிறது.

விரேந்திரநகரத்தின் வானூர்தி நிலையம், தேசியத் தலைநகரமான காட்மாண்டு, சூம்லா, ஹும்லா, காளிகோட், முமு, டோல்பா மற்றும் பிற நகரங்களுடன் இணைக்கிறது.

இரத்தினா நெடுஞ்சாலை, விரேந்திரநகருடன் பேருந்து மூலம் காட்மாண்டு, பொக்காரா, பரத்பூர், தரண், விராட்நகர் போன்ற நகரங்களை இணைக்கிறது.

கல்வி

விரேந்திரநகரில் உள்ள முக்கிய கல்வி நிலையம் மேற்கு மத்திய பல்கலைக்கழகம் ஆகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads