வீரேந்தர் சேவாக்

இந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

வீரேந்தர் சேவாக்
Remove ads

வீரு என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக் (Virender Sehwag ஒலிப்பு பிறப்பு: அக்டோபர் 20, 1978) இந்தியாவின் முன்னாள் துடுப்பாளர்.வலது கைத் துடுப்பாளரான இவர் அனைத்துக் காலத்திற்குமான அபாயகரமான துடுப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளராகவும் செயல்பட்டார். 1999 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் , 2001 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டத்திலும்அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2009 ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இவரை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. அந்த ஆண்டில் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் இவர் ஆவார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், பிறப்பு ...

இவர் பல சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கத்தில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 319 ஓட்டங்கள் எடுத்தார். இவர் 278 பந்துகளில் 300 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக மூன்று நூறுகள் அடித்து சாதனை படைத்தார். மேலும் டிசம்பர் 3, 2009 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 207 பந்துகளில் 250 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக 250 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒருமுறைக்கும் அதிகமாக மூன்றுநூறுகள் அடித்த நான்கு வீரர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். மேலும் மூன்றுநூறுகள் மற்றும் ஐந்து இலக்குகளை ஒரே ஆட்டப் பகுதியில் எடுத்த ஒரே வீரர் இவர் ஆவார்.[2] 60 பந்துகளில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் விரைவாக நூறு ஓட்டங்கள் அடித்த இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார்.[3] டிசம்பர் 8, 2011 ஆம் ஆண்டில்மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இருநூறு ஓட்டங்கள் அடித்தார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தச் சாதனையைப் புரிந்த இரண்டாவது வீரரானார்.[4] இந்தப் போட்டியில் 149 பந்துகளில் 219 ஓட்டங்கள் எடுத்தார். இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.[5] ஆனால் இந்தச் சாதனையை நவம்பர் 13, 2014 இல் ரோகித் சர்மா 173 பதுகளில் 264 ஓட்டங்கள் எடுத்து முறியடித்தார்.[6][7][8] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் இருநூறு ஓட்டங்களும் , தேர்வுத் துடுப்பாட்டங்களில் மூன்று நூறுகளும் அடித்த இருநபர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். மற்றொருவர் கிறிஸ் கெயில் ஆவார்.[9]

Remove ads

துவக்க கால வாழ்க்கை

Thumb
சேவாக் வலைப்பயிற்சியில் பந்து வீசுகிறார்

கிருஷ்ணன் (சேவாக்கின் அப்பா), கிருஷ்ணா (அம்மா) சேவாக் தம்பதிக்கு மூத்த மகனாக அக்டோபர் 20, 1978 அன்று பிறந்தார் வீரேந்தர் [10]; அவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். டெல்லியின் புறநகர்ப் பகுதியான நஜவ்கட்டில் கோதுமை, அரிசி, வயல் விதைகள் ஆகியவற்றை வணிகம் செய்து வருகின்றது சேவாக்கின் குடும்பம்.[11]

தனிப்பட்ட வாழ்க்கை

சேவாக் ஆர்த்தி அஹ்லாவத் என்பவரை ஏப்ரல்,2004 [12] இல் திருமணம் செய்தார். இந்த திருமணத்தை அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அவருடைய வீட்டில் வைத்து இவர்களை உபசரித்தார்.[13]. இவருக்கு ஆர்யாவிர் மற்றும் வேதாந்த் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில் ஆர்யாவிர் அக்டோபர் 18, 2007 இல், வேதாந்த் 2010 இல் பிறந்தனர்[14][15][16]

துடுப்பாட்ட வாழ்க்கை

உள்ளூர் போட்டிகள்

சர்வதேச ஒருநாள் போட்டிகள்

மொகாலியில் ஏப்ரல் 1999 இல் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதன் முதலாக களமிறங்கிய சேவாக் வெறும் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் சோயப் அக்தரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு பந்து வீசிய சேவாக் மூன்று ஓவர்களை வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சரியாக செயல்படாததால் அடுத்த 20 மாதங்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது.[17]

சர்வதேச தேர்வுப் போட்டிகள்

Thumb
தனக்கு பிடித்தமான "ஊக் சாட்" அடிக்கும் சேவாக்

சர்வதேச இருபது20 போட்டிகள்

மேலதிகத் தகவல்கள் இருபது 20 போட்டியில் சேவாக்கின் சாதனைகள் ...

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள்

இந்தியன் பிரீமியர் லீக்கின் முதலிரண்டு பருவங்களிலும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக இருந்த சேவாக், பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவதற்காக மூன்றாவது பருவத்தில் அணித்தலைவர் பதவியை கவுதம் கம்பீரிடம் விட்டுக் கொடுத்தார். ஆனால் நான்காவது பருவத்தில் கவுதம் கம்பீர் வேறு அணிக்கு சென்று விட்டதால் இவர் மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐந்தாவது பருவத்தில் பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஐந்துமுறை அரைசதம் அடித்து அசத்தினார்.

இருபது20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்துள்ள ஒரே வீரர் இவர் மட்டுமே.

பெற்ற விருதுகள்

தேர்வுத் துடுப்பாட்ட விருதுகள்

தொடர் நாயகன் விருதுகள்

மேலதிகத் தகவல்கள் எண், தொடர் ...

ஆட்ட நாயகன் விருதுகள்

மேலதிகத் தகவல்கள் எண், எதிரணி ...

ஒருநாள் போட்டி விருதுகள்

தொடர் நாயகன் விருதுகள்

மேலதிகத் தகவல்கள் எண், தொடர் ...

ஆட்ட நாயகன் விருதுகள்

Remove ads

படைத்த சாதனைகள்

சர்வதேச ஒருநாள் போட்டிகள்

  • சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த இந்திய வீரர்களில் 15 சதங்களுடன் சேவாக் 3-வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் சச்சின் (48) முதலிடத்திலும், கங்குலி (22) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
  • சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சேவாக் சதமடித்துள்ள 15 ஆட்டங்களில் 14-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
  • மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தூரில் 2011 திசம்பர் 8 அன்று 219 ஓட்டங்கள் எடுத்த சேவாக் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்ததில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். இப்பட்டியலில் ரோகித் சர்மா (264) முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா (209), சச்சின் டெண்டுல்கர் (200) முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.
  • ஒருநாள் போட்டிகளில் குறைவான பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்தியர்களில் 2001 ஆம் ஆண்டில் கென்யாவுக்கு எதிராக 22 பந்துகளில் அரைசதம் கடந்த சேவாக் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தை ராகுல் திராவிட், கபில் தேவ், மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார்.
  • ஒருநாள் போட்டிகளில் அரைசதத்தை விட கூடுதலாக சதமடித்துள்ள (15ச/14அ) ஐந்தே வீரர்களில் இவரும் ஒருவராவார். டான் பிராட்மன் (29ச/13அ), முகமது அசாருதீன் (22ச/21அ), மாத்தியூ எய்டன் (30ச/27அ) மற்றும் கெவின் பீட்டர்சன் (13ச/11அ) ஆகியோர் மற்ற நால்வர் ஆவர்.
  • 2011 உலக கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடிய முதல் ஐந்து போட்டிகளிலும், முதலாவது பந்தில் நான்கு ஓட்டங்கள் எடுத்து ரசிகர்களை உற்சாகமடைய வைத்தார்.

சர்வதேச தேர்வுப் போட்டிகள்

  • தேர்வுப் போட்டிகளில் குறைவான பந்துகளில் 250 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம். (207 பந்துகள்)
  • தேர்வுப் போட்டிகளில் குறைவான பந்துகளில் 300 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம். (278 பந்துகள்)
  • தேர்வுப் போட்டிகளில் ஒருநாளில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில், இலங்கை அணிக்கு எதிராக 294 ஓட்டங்கள் எடுத்த சேவாக் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
  • சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு போட்டிகளில் ஆறு முறை இருநூறு ஓட்டங்களை கடந்துள்ள இந்தியர்களாவர்.
  • ஆறு முறை இருநூறு ஓட்டங்கள் எடுத்துள்ள சேவாக், தனது முதல் மூன்று இருநூறுகளையும் பாக்கித்தான் அணிக்கு எதிராக அடித்து சாதனை படைத்தார்.
  • தேர்வு போட்டிகளில் பாக்கித்தான் அணிக்கு எதிராக 2004 ஆவது ஆண்டில் 309 ஓட்டங்களைப் பெற்ற சேவாக் தேர்வு போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். மார்ச் 2008 அன்று சென்னையில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 319 ஓட்டங்களை பெற்று தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தார்.
  • சர்வதேச தேர்வு போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இருநூறு ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைப் பெற்ற முதல் வீரர் ஆவார்.
  • துடுப்பாட்ட வரலாற்றில் தேர்வு போட்டிகளில் இரண்டு முச்சதம், மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே.
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads