வேட்டையன் (திரைப்படம்)
2024 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேட்டையன் (Vettaiyan) என்பது 2024 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இந்த அதிரடி நாடகத் திரைப்படத்தை டி. ஜே. ஞானவேல் இயக்கினார்.[4] சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் தயாரித்தது. இப்படத்தில் இரசினிகாந்து முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அமிதாப் பச்சன் (இவரது தமிழ் அறிமுகம்) பகத் பாசில், இரானா தக்குபாடி, மஞ்சு வாரியர், இரித்திகா சிங், துசாரா விச்சயன், ரோகிணி, இராவ் இரமேசு, அபிராமி, இரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் மார்ச்சு 2023 இல் தலைவர் 170 என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டது. இது இரசினிகாந்துடன் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 170 வது படம் என்பதால், அதிகாரப்பூர்வ தலைப்பு 2023 திசம்பரில் அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி 2023 அக்டோபரில் தொடங்கி 2024 ஆகத்து மாதம் முடிவடைந்தது. திருவனந்தபுரம், திருநெல்வேலி, சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்தார். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவை மேற்கொண்டார். பிலோமின் இராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். தயாரிப்பு வரவு செலவு ₹160 கோடியாக இருந்தது.
வேட்டையன் 2024 அக்டோபர் 10 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் ஆயுத பூசை, விஜயதசமி போன்ற விழாக்களுக்கு முந்தைய வெளியீடாக வந்தது.
Remove ads
நடிகர்கள்
- இரசினிகாந்து - காவல்துறைக் கண்காணிப்பாளர் அதியன் இந்தியக் காவல் பணி
- அமிதாப் பச்சன் - காவல்துறையின் தலைமை இயக்குநர் சத்தியதேவ் பிரம்மாதத் பாண்டே
- பகத் பாசில் - பத்ரிக்
- இரானா தக்குபாடி - நட்ராஜ்
- மஞ்சு வாரியர் - தாரா
- இரித்திகா சிங் - காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் ரூபா
- துசாரா விச்சயன் - சரண்யா
- ரோகிணி - நசீமா
- இராவ் இரமேசு - காவல்துறையின் தலைமை இயக்குநர் டி. சிறீனிவாசு
- கிரிஷ் ஹாசன்-சதீஷ் குணாவின் நண்பன்
- இரமேசு திலக் - அன்பு
- கிசோர் - காவல்துறைக் கண்காணிப்பாளர் அரீசுகுமார்
- இரக்சன்
- சி. எம். சுந்தர்
- அபிராமி-சுவேதா[5]
- சுப்பீரீத் ரெட்டி - அனு ரெட்டி
- சாசி சென் - சென்னைக் காவல் ஆணையர்[6][7]
- அனிருத் இரவிச்சந்திரன் - அவராகவே "மனசிலாயோ" பாடல் காட்சியில்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

