அமெரிக்க நாடுகள் அமைப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமெரிக்க நாடுகள் அமைப்பு (Organization of American States, எசுப்பானியம்: Organización de los Estados Americanos, Portuguese: Organização dos Estados Americanos, French: Organisation des États américains), அல்லது ஆங்கில எழுத்துச் சுருக்கமாக ஓஏஎஸ் (இலத்தீன மொழிச் சுருக்கம்:: ஓஈஏ) ஏப்ரல் 30, 1948இல் வடக்கு மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளால் நிறுவப்பட்ட கண்டமிடை அமைப்பு ஆகும். இது உறுப்பு நாடுகளிடையே பிராந்திய கூட்டுறவையும் ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ளது.[1]அமெரிக்காக்களின் 35 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
மே 26, 2005 முதல் இந்த அமைப்பின் செயலாளர் நாயகமாக ஓசே மிகுவல் இன்சுல்சா பணியாற்றுகிறார்.
Remove ads
உறுப்பு நாடுகளும் இணைப்புகளும்
அமெரிக்காக்களில் உள்ள 35 சுயாட்சி நாடுகளும் ஓஏஎசில் அங்கத்தினர்கள் ஆவர். மே 5, 1948இல் இந்த அமைப்பு உருவானபோது 21 அங்கத்தினர்கள் இருந்தனர்:
கனடாவும் கரிபியன் நாடுகளும் அவை விடுதலை பெற்றவுடன் ஓஏஎசில் இணைந்தன. பின்னாளில் இணைந்த நாடுகளின் பட்டியல் அவர்கள் இணைந்த நாளையொட்டி வரிசைப் படுத்தப்பட்டுள்ளன:
பார்படோசு (1967 முதல் உறுப்பினர்)
டிரினிடாட் மற்றும் டொபாகோ (1967)
ஜமேக்கா (1969)
கிரெனடா (1975)
சுரிநாம் (1977)
டொமினிக்கா (1979)
செயிண்ட். லூசியா (1979)
அன்டிகுவா பர்புடா (1981)
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் (1981)
பஹமாஸ் (1982)
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் (1984)
கனடா (1990)
பெலீசு (1991)
கயானா (1991)
குறிப்புகள்
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads