ஆ. ராசா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ஆ. ராசா
Remove ads

ஆ. ராசா (Andimuthu Raja, பிறப்பு: 10 மே 1963) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் பிறந்தார். 17 ஆவது இந்திய மக்களவையின் உறுப்பினர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் இருந்து தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் ஆவார். 15 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 16 நவம்பர், 2010 வரை பொறுப்பு வகித்தார். மக்களவைக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

விரைவான உண்மைகள் ஆ. ராசா, தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

Remove ads

இரண்டாம் தலைமுறை அலைவரிசை வழக்கு

2010-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நடுவண் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஓதுக்கீடு செய்ததில் பிரதமர், சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரைகள் மீறப்பட்டுள்ளன என்றும் வெளிப்படையாக ஏலம் விடாததால் நடுவண் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் வரையான வருவாய் வாய்ப்பினை இழந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த அறிக்கையை ஆ. ராசா மறுத்தாலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது [4] சிபிஐ விசாரணைக்குப் பின் 2011, பெப்ரவரி 2, அன்று சிபிஐ இவரைக் கைது செய்தது[5]

இந்த வழக்கினை உச்சநீதி மன்ற மேற்பார்வையில் டெல்லியில் உள்ள நடுவண் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிறுவ அரசுத் தரப்பு தவறிவிட்டதால், திசம்பர் 21, 2017 அன்று கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார்.[6]

Remove ads

சொத்துக் குவிப்பு வழக்கு

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் இந்திய ரூ. 27.92 கோடி அளவுக்குச் சொத்துகள் சேர்த்ததாக, சிபிஐ ஆ. ராசா மீது 20 ஆகஸ்டு 2015 அன்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது.[7][8]

இவர் மத்திய அரசில் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த போது, ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு விதிமுறைகளுக்கு மீறி சாதகமாக அனுமதி வழங்கியமைக்கு, அந்நிறுவனம் ஆ. ராசாவின் பினாமி பெயரில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இந்திய ரூபாய் 55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை வழங்கியது. இந்நிலத்தை 22 டிசம்பர் 2022 அன்று அமலாக்க இயக்குனரகம் முடக்கியது.[9][10][11][12]

Remove ads

போட்டியிட்ட தேர்தல்களும் முடிவுகளும்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொகுதியின் பெயர் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads