இந்திரவருமன்

8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் மன்னர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திரவருமன் அல்லது மகாராஜா இந்திரவருமன் (ஆங்கிலம்: Sri Indravarman; இந்தோனேசியம்: Sri Maharaja Indrawarman; சீனம்: Shih-li-t-'o-pa-mo அல்லது (Che-li-t'o-lo-pa-mo) என்பவர் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் மன்னர் ஆவார். சிறீவிஜய மகா அரசர் (Maharaja Sriwijaya) அல்லது கெடத்துவான் சிறீ விஜயா (Kadatuan Srivijaya) எனும் அரச மரபைச் சார்ந்த இவரின் ஆட்சிக்காலம் கிபி 702 - 728 என அறியப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் இந்திரவருமன் Sri Indravarman Sri Maharaja Indrawarman, சிறீவிஜய மகா அரசர் ...
விரைவான உண்மைகள் சிறீவிஜய அரசர்கள், தொடக்கம் ...

சீனாவின் தாங் அரசமரபு மன்னர்களின் அரசவைக்கு இவர், மூன்று தூதர்களை அனுப்பினார் என சான்றுகள் உள்ளன. முதலில் கி.பி 702-இல், இரண்டாவதாக கி.பி 716-இல், மூன்றாவதாக கி.பி 724-இல்; இந்திரவருமன் தம் தூதர்களை அனுப்பி உள்ளார்.

Remove ads

வரலாறு

சீன வரலாற்று மூலங்களில் இவரின் பெயர் சே-லி-டி'ஓ-லோ-பா-மோ (Che-li-t'o-lo-pa-mo) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.[2] இவர் அரேபிய உமையாத் கலீபாக்களுக்கு (Umayyad Caliphate) இரண்டு கடிதங்களை அனுப்பியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலாவதாக கி.பி. 680-இல் ஒரு கடிதம்; இரண்டாவதாக கி.பி. 718 இல் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.[1]

சீனப் பேரரசருக்கு சிறீவிஜயம் வழங்கிய பரிசுகளில், செங்சி (ts'engchi) எனும் ஒரு கறுப்பின அடிமையும் பட்டியலில் உள்ளது. அரபு மொழி: zanji எனும் சொல்லில் இருந்து செங்சி எனும் சீனச் சொல் பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது.[1]

Remove ads

பன்னாட்டுத் தொடர்புகள்

சிறீவிஜயத்தின் இந்த உறவுகள்; சிறீவிஜயம் தனது ஆட்சிக் காலத்தில், மேற்கு மற்றும் கிழக்கு ஆசியாவிலிருந்து வெளி உலகத்துடன் நல்ல பன்னாட்டு வணிகத்தைக் கொண்டிருந்ததைக் குறிக்கின்றன.[1][3]

இந்திரவர்மனுக்குப் பிறகு அவரின் மகன் உருத்திர விக்கிரமன் என்பவரும் சீனாவிற்குத் தொடர்ந்து தூதர்களை அனுப்பி வந்தார்.[2][4]

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads