ராக்காய் பிக்கத்தான்

கிபி 9-ஆம் நூற்றாண்டில் மத்திய ஜாவா, மாதரம் இராச்சியத்தை ஆட்சி செய்த சஞ்சய அரச மரபைச் சேர்ந்த அ From Wikipedia, the free encyclopedia

ராக்காய் பிக்கத்தான்
Remove ads

ராக்காய் பிக்கத்தான் அல்லது சிறீ மகாராஜா ராக்காய் பிக்கத்தான் (ஆங்கிலம்: Rakai Pikatan; Sri Maharaja Rakai Pikatan; இந்தோனேசியம்: Srī Mahārāja Rakai Pikatan; Rakai Pikatan Dyah Saladu; ஜாவானியம்: Sri Maharaja Rakai Pikatan Mpu Manuku) என்பவர் கிபி 9-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா, மத்திய ஜாவா, மாதரம் இராச்சியத்தை ஆட்சி செய்த சஞ்சய அரச மரபைச் சேர்ந்த அரசர் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் ராக்காய் பிக்கத்தான் Rakai Pikatan Srī Mahārāja Rakai Pikatan Sri Maharaja Rakai Pikatan Mpu Manuku, மாதரம் 7-ஆவது அரசர் ...
விரைவான உண்மைகள் சிறீவிஜய அரசர்கள், தொடக்கம் ...

வானுவா தெங்கா III கல்வெட்டு (Prasasti Wanua Tengah III) (908), அவர் கிபி 847 மார்ச் 6-க்கும்; கிபி 855 ஏப்ரல் 27-க்கும்; இடையில் ஆட்சி செய்தார் என பதிவு செய்துள்ளது. அவரின் பெயர் வான்டில் கல்வெட்டு (Prasasti Wantil), மந்தியாசி கல்வெட்டு மற்றும் வானுவா தெங்கா III கல்வெட்டு ஆகிய கல்வெட்டுகளிலும் பதிக்கப்பட்டு உள்ளது.

இவர் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரம்பானான் கோயிலைக் கட்டியவர்களில் ஒருவர் ஆவார். இவரின் ஆட்சிக் காலத்தில்தான் (கி.பி 856) பிரம்பானான் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. பிரம்பானான் கோயில் கட்டி முடிக்கப்படுவதற்கு இவரின் மனைவி பிரமோதவர்தனியும் உறுதுணையாக இருந்துள்ளார்.[2]

போரோபுதூர் கட்டுமானம், கிபி 779; கிபி 780; கிபி 792; கிபி 824; கிபி 833; என ஐந்து நிலைகளில் நடைபெற்றுள்ளது.[3] போரோபுதூரின் முதல் கட்டுமானம் கிபி 760 அல்லது கிபி 770-ஆம் ஆண்டுகளில் தொடங்கி இருக்கலாம் என்றும்; கி.பி 860 வரை தொடர்ந்து நீடித்து இருக்கலாம் என்றும்; வரலாற்று ஆசிரியர் மிக்சிக் (John N. Miksic) கூறுகிறார்.[4]

Remove ads

வரலாறு

ராக்காய் பிக்கத்தானுக்கு முன்பு சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்த மாதரம் இராச்சியத்தின் சமரதுங்கன் என்பவர் மன்னராக இருந்தார். சமரதுங்கனுக்கு பாலபுத்திரன் என்ற ஒரு மகனும், பிரமோதவர்தனி என்ற ஒரு மகளும் இருந்தனர்.

ராக்காய் பிக்கத்தானும் சஞ்சய வம்சமும்; சிவ சமய இந்துக்கள் ஆவார்கள். மேலும் வான்தில் கல்வெட்டில் (Wantil Inscription), ராக்காய் பிக்கத்தான் வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பெண், சமரதுங்கனின் மகாயான பௌத்த பெண்மணியான பிரமோதவர்தனியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனாலும், வரலாற்றுச் சான்றுகளின்படி, பிரமோதவர்தனி என்பவர் ராக்காய் பிக்கத்தானின் மனைவி ஆவார்.

Remove ads

பாலபுத்திரன்

ராக்காய் பிக்கத்தான் தன் மைத்துனர் பாலபுத்திரனுடன் போரிட்டதாகவும்; அதனால் பாலபுத்திரன் 856-இல் சிறீவிஜயத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் நம்பப்படுகிறது.[5]:108

காயூம்வுங்கான் கல்வெட்டை (Prasasti Kayumwungan) அடிப்படையாகக் கொண்ட பிற விளக்கங்கள் பாலபுத்திரன் என்பவரை பிரமோதவர்தனியின் சகோதரராக அல்லாமல் மாமா உறவு முறையில் குறிப்பிடுகின்றன. ஏனெனில் பிரமோதவர்தனியை, சமரதுங்கனின் மகளாக மட்டுமே கல்வெட்டுகள் பட்டியலிடுகின்றன.[6]

எனவே, பாலபுத்திரன் ஸ்ரீவிஜயத்திற்குச் சென்றது, கட்டாயத்தின் காரணமாக அல்ல என்றும்; மாறாக மன்னரின் சகோதரர் என்ற உரிமை அவருக்கு இல்லாமல் போனதுதான் காரணம் என்றும்; காயூம்வுங்கான் கல்வெட்டின் அடிப்படையில் அனுமானிக்க முடிகின்றது.

Remove ads

பிரமோதவர்தனி

Thumb
ரோரோ ஜொங்கிராங் புராணத்தில் பிரமோதவர்தனி துர்க்கை அம்மனாகச் சித்தரிக்கப்பட்டு உள்ளார்

பிரமோதவர்தனி என்பவர் ராக்காய் பிக்கத்தானின் மனைவியும் அரசியும் ஆவார். இவர் சிறீ ககுலுன்னன் (Çrī Kahulunnan) அல்லது சிறீ சஞ்சீவனா (Çrī Sanjiwana) என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் சைலேந்திர மன்னர் சமரதுங்கனின் மகளும் ஆவார்.[7]:108 சஞ்சய வம்சத்தின் இளவரசரான ராக்காய் பிக்கத்தானுடன் நடந்த இவரின் அரசத் திருமணம் இந்து சஞ்சய அரச மரபு மற்றும் பௌத்த சைலேந்திர வம்சங்களுக்கு இடையிலான அரசியல் நல்லிணக்கத்தைத் தோற்றுவித்ததாக நம்பப்படுகிறது.

சீமா நிலங்கள்

இவரின் பெயர் காராங்தெங்கா கல்வெட்டு, திரி தெப்புசான் கல்வெட்டு, உரூக்கம் கல்வெட்டு போன்ற பல கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 842-ஐச் சேர்ந்த திரி தெப்புசான் கல்வெட்டில் சீமா எனும் வரி-நீக்கப்பட்ட நிலங்களை பிரமோதவர்தனி, போரோபுதூர் பராமரிப்புக்கு வழங்கியதாகப் பொறிக்கப்பட்டுள்ளது.[8]

உலகப் புகழ் பெற்ற போரோபுதூர் பௌத்த நினைவுச் சின்னத்தைக் கட்டி முடித்த அரசி பிரமோதவர்தனி என நினைவுகூரப் படுகிறார். அத்துடன் பிரமோதவர்தனியின் தோற்றம்; பிரம்பானான் கோயிலில் அமைந்துள்ள துர்க்கை அம்மனின் உருவத்திற்கு முன்மாதிரியாக இருந்ததாக ரோரோ ஜொங்கிராங் புராணம் (Roro Jonggrang) விளக்கம் கூறுகிறது.

மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்

முன்னர் மாதரம் இராச்சியத்தின் மகாராஜா
ராக்காய் பிக்கத்தான்
838—850
பின்னர்

மேலும் காண்க

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads