தருமசேது
8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் மன்னர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தருமசேது அல்லது மகாராஜா தருமசேது (ஆங்கிலம்: Dharmasetu அல்லது Sri Dharmasetu; இந்தோனேசியம்: Sri Maharaja Sri Dharmasetu) என்பவர் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் அரசர் ஆவார்.
அவரின் ஆட்சியின் கீழ், கி.பி 775-இல், மலாய் தீபகற்பத்தின் வடக்கே இருந்த பான் பான் இராச்சியத்தை, சிறீ விஜயப் பேரரசின் மண்டலத்திற்குள் வெற்றிகரமாக இணைத்தார்.
Remove ads
வரலாறு
தாய்லாந்தில் இருந்த நக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) மாநிலத்தில் ஒரு பழைய மடாலயத்தில், அவலோகிதர், வச்ரபானி, கௌதம புத்தர் ஆகிய மூவருக்கும் மூன்று சரணாலயங்களைக் கட்ட தர்மசேது உத்தரவிட்டதைக் குறிக்கும் லீகோர் கல்வெட்டு (Ligor inscription) கிடைத்து உள்ளது.[1]:130–131
மேலும், ஜாவாவை ஆட்சி செய்த சைலேந்திர வம்சத்தின் தலைவராக தர்மசேது இருந்ததாக லீகோர் கல்வெட்டு கூறுகிறது. சிறீ விஜயப் பேரரசிற்கும் சைலேந்திரர்களுக்கும் இடையே உறவுகள் இருந்ததாக அறியப்படும் முதல் நிகழ்வு இதுவே ஆகும்.[1]:221–223
Remove ads
தர்மசேதுவின் மகள் தேவி தாரா
தர்மசேதுவின் மகள் தேவி தாரா (Dewi Tara), பின்னர் சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்த சமரதுங்கா (Samaratungga) என்பவரை மணந்தார். பின்னர் 792-ஆம் ஆண்டு வாக்கில் சமரதுங்கா, சிறீ விஜயத்தின் அரியணையை ஏற்றுக்கொண்டார்.[1]:175, 143–145
சிறீ விஜயத்திற்கும் சைலேந்திரர்களுக்கும் இடையிலான உறவு அதன் பின்னர் மிகவும் நெருக்கமாகியது. தர்மசேதுவிற்குப் பிறகு, அவரின் மருமகன் சமரகரவீரன் 782-ஆம் ஆண்டு சிறீ விஜயத்தின் அரசராக அரியணை ஏறினார்.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads