தகவாசன்

9-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா, மாதரம் இராச்சியத்தை ஆட்சி செய்த சஞ்சய அரச மரபைச் சேர்ந்த அரசர் From Wikipedia, the free encyclopedia

தகவாசன்
Remove ads

தகவாசன் அல்லது தயா தகவாசன் (ஆங்கிலம்: Dyah Tagwas; இந்தோனேசியம்: Sri Maharaja Dyah Tagwas Jayakirtiwardhana) என்பவர் கிபி 9-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா, மத்திய ஜாவா, மாதரம் இராச்சியத்தை ஆட்சி செய்த சஞ்சய அரச மரபைச் சேர்ந்த 9-ஆவது அரசர் ஆவார்.[1]இவரின் ஆட்சிக்காலம் 17 பிப்ரவரி 885 - 25 ஆகத்து 885 என அறியப்படுகிறது.

விரைவான உண்மைகள் தகவாசன் Dyah Tagwas, மாதரம் 9-ஆவது அரசர் ...
விரைவான உண்மைகள் சிறீவிஜய அரசர்கள், தொடக்கம் ...

வானுவா தெங்கா III கல்வெட்டில் (908), அவர் பிப்ரவரி 17, 885 முதல் ஆகத்து 25, 885 வரை ஆட்சி செய்தார் என பதிவாகி உள்ளது.[2][3][4]

இவர் லோகபாலா (Rakai Kayuwangi) அரசருக்குப் பிறகும், பனுவங்க தேவேந்திரன் (Rakai Panumwangan) அரசருக்கு முன்பும் மாதரம் இராச்சியத்தின் மன்னராக இருந்தார்.[2][5] ஏர் அங்காட் கல்வெட்டில் (Prasasti Er Hangat) எழுதப்பட்டுள்ளதுபடி, தகவாசனின் முழுப் பெயர் சிறீ மகாராஜா தயா தகவாச ஜெயகீர்த்தி வருத்தனன் என்பதாகும்.[6][7]

Remove ads

மந்தியாசி கல்வெட்டு

மந்தியாசி கல்வெட்டில் (கி.பி. 907) உள்ள மன்னர்களின் பட்டியலில், தயா குலா மற்றும் மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள் பலரின் பெயர்கள் காணப்படவில்லை.[8] ஏனெனில் மந்தியாசி கல்வெட்டு, நீண்ட காலம் ஆட்சி செய்து முழு அதிகாரம் பெற்ற மன்னர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது,

அந்த வகையில் மந்தியாசி கல்வெட்டில் சஞ்சய வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்களின் பெயர்களுக்கான தலைப்பு சிறீ மகாராஜா என்றுதான் வழங்கப்பட்டு உள்ளது. தயா குலா ஒரு மகாராஜா பதவியைப் பெறவில்லை என்பதால் மந்தியாசி கல்வெட்டில் அவரின் பெயர் இடம்பெறவில்லை.[9]

Remove ads

ஏர் லங்காட் கல்வெட்டு

வானுவா தெங்கா III கல்வெட்டில் (908), அறியப்படுவதைத் தவிர, மத்திய ஜாவாவின் பஞ்சார் நெகாரா (Kabupaten Banjarnegara) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஏர் அங்காட் கல்வெட்டில் (Prasasti Er Hangat) தகவாசனின் பெயர் சிறீ மகாராஜா தயா தகவாச ஜெயகீர்த்தி வருத்தனன் என்ற பட்டப் பெயரால் அறியப்படுகிறது.[7]

ஏர் லங்காட் கல்வெட்டு முழுமை பெறாத நிலையில் காணப்பட்டது; அத்துடன் ஆண்டு எண்களைக் கொண்ட முதல் தட்டும் காணப்படவில்லை.[6] அத்துடன் இந்தக் கல்வெட்டின் காலத்தை உறுதியாகக் கூற இயலவில்லை. ஆனால், கி.பி 885-888-க்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்று மட்டும் மதிப்பிடப்பட்டுள்ளது.[6]

ஏர் லங்காட் கல்வெட்டில் தகவாசன் என்ற பெயரில் ராக்காய் என்ற பிராந்தியப் பெயர் எதுவும் இல்லை; ஒருவேளை தகவாசன் அரியணை ஏறியபோது அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றியபோது; அவர் மாதரம் இராச்சியத்தின் தலைநகரிலோ அல்லது பிராந்தியங்களிலோ பதவி வகிக்காமல் இருந்து இருக்கலாம்; அல்லது அவர் முதிர்ச்சி அடையாமல் இருந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[10][11][12]

Remove ads

மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்

முன்னர் மாதரம் இராச்சியத்தின் மகாராஜா
தகவாசன்
855–885
பின்னர்
பனுவங்க தேவேந்திரன்

மேலும் காண்க

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads