ராக்காய் காருங்

From Wikipedia, the free encyclopedia

ராக்காய் காருங்
Remove ads

ராக்காய் காருங் அல்லது சிறீ மகாராஜா ராக்காய் காருங் (ஆங்கிலம்: Rakai Garung; இந்தோனேசியம்: Srī Mahārāja Rakai Garung; ஜாவானியம்: Rakai Garung Dang Karayan Patapan Pu Palar) என்பவர் மத்திய ஜாவாவில், மாதரம் இராச்சியத்தின் சஞ்சய மரபைச் சார்ந்த அரசர் ஆவார்.[1] இவரின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 829 – 847.

விரைவான உண்மைகள் ராக்காய் காருங் Rakai Garung Srī Mahārāja Rakai Garung Rakai Garung Dang Karayan Patapan Pu, சிறீவிஜயம்–மாதரம் இராச்சியம் 6-ஆவது அரசர் ...
விரைவான உண்மைகள் சிறீவிஜய அரசர்கள், தொடக்கம் ...

8-ஆம் 9-ஆம் நூற்றாண்டுகளில், மாதரம் இராச்சியத்தின் அரசர்கள் சிறீவிஜயத்தையும் ஒரே சமயத்தில் ஆட்சி செய்தார்கள்.[1] மாதரம் இராச்சியத்தின் அரசராக இருந்தவர் சிறீவிஜயத்தின் அரசராகவும் இருந்தார்.

ராக்காய் காருங்கின் பெயர் பெங்கிங் கல்வெட்டு (Prasasti Pengging), மந்தியாசி கல்வெட்டு, வானுவா தெங்கா III கல்வெட்டு ஆகியவற்றில் அறியப்படுகிறது. மேலும் வங்சாகீர்த்தா கையெழுத்துச் சுவடியின் மூலமாக (Naskah Wangsakerta) அவரின் பெயர் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.[2]

Remove ads

வரலாறு

மந்தியாசி கல்வெட்டில், அவரது பட்டம் சிறீ மகாராஜா ராக்காய் காருங் என பொறிக்கப்பட்டு உள்ளது.[3] வானுவா தெங்கா III கல்வெட்டில் (908), அவர் பிப்ரவரி 14, 829 முதல் மார்ச் 6, 847 வரையில் ஆட்சி செய்தார் என்றும்; அவர் தியா குலாவுக்குப் பிறகும், ராக்காய் பிக்கத்தானுக்கு முன்பும், மன்னராக இருந்தார் என்றும் பொறிக்கப்பட்டு உள்ளது.[2]

ராக்காய் காருங் வெளியிட்ட மிகப் பழைமையான கல்வெட்டு பெங்கிங் கல்வெட்டு (819) ஆகும்.[2] இந்தக் கல்வெட்டில், அவரது பெயர் ராகார்யான் ஐ கருங் (Rakaryan i Garung) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கட்டத்தில் அவருக்கு இன்னும் சிறீ மகாராஜா என்ற பட்டம் வழங்கப்படவிலை.[2]

அவர் அரியணை ஏறுவதற்கு முன்பு ஓர் உயர் அரச அதிகாரியாக இருந்திருக்கலாம்; அல்லது முந்தைய மன்னர்களில் ஒருவரின் மகனாகவோ அல்லது சகோதரராகவோ இருந்திருக்கலாம்.[4]

Remove ads

வானுவா தெங்கா III கல்வெட்டு

வானுவா தெங்கா III கல்வெட்டின் படி, சாங் லுமா இ துக் (Sang lumah i Tuk) என்பவரின் மகனாக ராக்காய் காருங் இருந்து இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

அதாவது பிரபு அல்லது அரச மரபைச் சேர்ந்த சாங் லுமா; துக் எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு துக் எனும் பட்டப் பெயர் கிடைத்துள்ளது. ராக்காய் காருங் அரசர் பதவியை ஏற்ற பிறகு, முந்தைய மன்னரால் விதிக்கப்பட்ட நில வரிகளை நீக்கியதாகவும் வானுவா தெங்கா III கல்வெட்டு கூறுகிறது.[5]

Remove ads

சர்ச்சைகள்

வரலாற்று ஆசிரியர் செலாமெட் முல்ஜானா (Slamet Muljana) என்பவர், ராக்காய் காருங் என்பவரும் சமரதுங்கன் என்பவரும் ஒரே நபராக இருக்கலாம் என கருத்து கூறுகிறார்.[5][6]

அதே வேளையில் ராக்காய் காருங் என்பவர் பிரமோதவர்தனியின் மருமகனாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர் டி காஸ்பாரிஸ் (Johannes Gijsbertus de Casparis) கூறுகிறார்.[6][2] ராக்காய் காருங் தொடர்பான வரலாற்றுச் சர்ச்சைகள் இன்றும் தொடர்கின்றன.[4]

மேலும் காண்க

மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்

முன்னர் மாதரம் இராச்சியத்தின் மகாராஜா
ராக்காய் காருங்
829—847
பின்னர்

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads