இந்தோ ஈரானியர்கள்

From Wikipedia, the free encyclopedia

இந்தோ ஈரானியர்கள்
Remove ads

இந்தோ ஈரானியர்கள் (Indo-Iranian) [1]ஆரியர் எனத்தங்களை அழைத்துக் கொண்ட இந்தோ-ஈரானிய மக்கள் இந்திய-ஈரானிய மொழிகள் பேசினர். மேலும் இவர்கள் இந்தோ ஐரோப்பிய மொழிகளை யுரோசியா பகுதிகளில் பரப்பினர்.

Thumb
Map of the Sintashta-Petrovka culture (red), its expansion into the Andronovo culture (orange) during the 2nd millennium BC, showing the overlap with the Bactria–Margiana Archaeological Complex (chartreuse green) in the south. The location of the earliest chariots is shown in magenta.
Thumb
தெற்காசியா மற்றும் மேற்காசியாவில் இந்தோ ஈரானிய மொழிகள் பேசும் பகுதிகள்
Remove ads

பெயரிடும் முறை

வரலாற்று அடிப்படையில் ஆரியர் எனும் சொல், இந்திய-ஈரானிய மொழிகளைப் பேசிய பண்டைய பாரசீக மக்கள், வட இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் இந்தோ ஆரியர்களைக் குறிக்கும்.[2][3] பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் பல பகுதிகளில் இந்தோ-ஈரானிய மக்களின் இராச்சியங்களாக மித்தானி இராச்சியம், இட்டைட்டு பேரரசு, மீடியாப் பேரரசுகள் விளங்கியது.[4][5][6] மனித வரலாறு மற்றும் புவியியல் அடிப்படையில் இந்தோ-ஈரானியர்களை ஆரியர் எனக்குறிப்பிடுகிறது.[7]

Remove ads

தோற்றம்

அன்ட்ரோனோவோ பண்பாட்டின் துவக்க காலத்தில் இந்தோ-ஈரானியர்கள் நடு ஆசியாவின் யுரேசியப் புல்வெளிகளின் அண்ட்ரோனாவா பண்பாட்டைப் பின்பற்றிய ஒரு பொது ஆதி இந்தோ - ஐரோப்பியர்களின் வழித்தோன்றல்கள் ஆவார். முதலில் இந்தோ-இரானியர்கள் தெற்கில் திரான்சாக்சியானா மற்றும் இந்து குஷ் பகுதிகளில் புலம்பெயர்ந்தனர்.[8]

மொழியியல் வரலாற்று அடிப்படையில் இந்தோ-ஈரானிய மொழிகள் கிமு 2,000-இல் பல்வேறு கிளைகளாகப் பல்கிப்பெருகிய போது.[9]:38–39 பரத கண்டத்தில் வேதகால நாகரிகமும் மற்றும் அதன் மேற்கில் பாரசீகப் பண்பாடுகளும் தோன்றிய்து. ஆதி இந்தோ-ஈரானிய மொழிகள் பேசிய மக்களின் வழித்தோன்றல்களிடமிருந்து இந்தியாவின் வடமேற்கில் வேதகால சமசுகிருத மொழியும் மற்றும் பாரசீகத்தில் அவெஸ்தான் மொழியும் தோன்றியது.

Remove ads

புலப்பெயர்வுகள்

Thumb
Scheme of Indo-European migrations from c. 4000 to 1000 BC according to the Kurgan hypothesis. The magenta area corresponds to the assumed Urheimat (Samara culture, Sredny Stog culture). The red area corresponds to the area which may have been settled by Indo-European-speaking peoples up to c. 2500 BC; the orange area to 1000 BC.[10]
Thumb
Archaeological cultures associated with Indo-Iranian migrations (after EIEC). The Andronovo, BMAC and Yaz cultures have often been associated with Indo-Iranian migrations. The GGC, Cemetery H, Copper Hoard and PGW cultures are candidates for cultures associated with Indo-Aryan movements.

Two-wave models of Indo-Iranian expansion have been proposed by Burrow (1973)[11] and (Parpola 1999). The Indo-Iranians and their expansion are strongly associated with the Proto-Indo-European invention of the chariot.

முதன்முதலில் ஆதி இந்தோ ஐரோப்பிய மக்களின் தாயகமான காஸ்பியன் கடலின் வடக்குப் பகுதி மற்றும் அதன் தெற்கின் காக்கேசியாவிலிருந்து, நடு ஆசியா, ஈரானிய பீடபூமி மற்றும் வட இந்தியாவிற்கு புலம்பெயர்ந்ததாக கருதப்படுகிறது. பின்னர் அவர்களில் ஒரு குழுவினர் பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியா மற்றும் சிரியா போன்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து தேர்களில் குதிரைகளைப் பூட்டி இழுக்கும் முறையை அறிமுகப்படுத்தினர். கிமு 2500 - 2350-களில் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட களிமண் பலகைகளில் தேர் குறிக்கப்பட்டுள்ளது. பாபிலோனின் மூன்றாவது ஊர் வம்சத்தினரின் (கிமு 2150–2000) குறிப்புகளில் குதிரைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள்து.

இந்தோ ஆரியர்களின் முதல் இடப்பெயர்வுகள்

அனதோலியாவின் மித்தானி இராச்சியம்

கிழக்கு அனதோலியாவில் கிமு 1500 முதல் அறியப்படும் மித்தானி மக்கள், இந்திய-ஈரானிய மொழிகள் பேசிய ஹுரியத் மக்களின் கலப்பினத்தவர் ஆவர்.[12]:257

இந்தியத் துணைக் கண்டத்தில் வேத கால நாகரீகம்

இந்திய-ஐரோப்பிய மொழிகள் பேசிய மக்கள், நடு ஆசியாவிலிருந்து இந்து குஷ் கணவாய் வழியாக இந்தியத் துணைக் கண்டத்தில் முதன் முதலில் வடமேற்கு இந்தியாவின் சிந்து சமவெளிகளில் வாழ்ந்ததாகவும், பின்னர் கங்கைச் சமவெளிகளில் இடம்பெயர்ந்ததாகவும் ஒரு கோட்பாடு உள்ளது. இவ்வாறு குடியேறிவர்கள் தகளை ஆரியர் என்று அழைத்துக் கொண்டனர். இவர்கள் சமசுகிருத மொழியில் கிமு 1500-இல் இயற்றிய முதல் சமய நூல் ரிக் வேதம் ஆகும். ரிக் வேதம், வேதகாலம்|வேதகாலத்தை]]ச் சேர்ந்தது. ஆரியர்கள் தங்கள் இயற்றிய ரிக் வேத மந்திரங்கள் எழுத்தில் எழுதி வைக்காது, வாயில் மூலமாக பிறர் காதுகளுக்கு பரப்பினர். இதனால் வேத மந்திரங்களை எழுதாக் கிளவி எனப்பெயர் பெற்றது.[12]:258[13] கிமு 1500 முதல் கிபி 500 வரை இந்தோ-ஆரிய மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகள் வட இந்தியா, மேற்கு இந்தியா, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா மற்றும் தென்னிந்தியா பகுதிகளில் பரவியது.

தெற்கு ஆப்கானிஸ்தான் முதல் இந்தியத் துணைக் கண்டத்தின் வங்காளம் முடிய இந்தோ-ஆரியர்கள் பல்வேறு இராச்சியங்களை நிறுவினர்.

ரிக் வேத காலத்திற்கு பிந்திய இராச்சியங்களில் கோசல நாடு, கேகய நாடு, குரு நாடு, பாஞ்சால நாடு, காந்தார நாடு, விதர்ப்ப நாடு, மகத நாடுகள் சிறந்து விளங்கியது. கிமு நான்காம் நூற்றாண்டில் கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியவர்கள், வேதச் சடங்குகளை எதிர்த்து, அகிம்சை மற்றும் கொல்லாமை எனும் கருத்துக்களை வலியுறுத்தியதன் பேரில் வட இந்தியாவில் பௌத்தம் மற்றும் சமண சமயங்கள் தோன்றியது. கிமு 4-ஆம் நூற்றான்டில் மகத நாடு பெரும் பேரரசாக உருவெடுத்தது. கிமு 4-ஆம் நூற்றாண்டில் சந்திர குப்த மௌரியர் மகத நாட்டை வீழ்த்தி மௌரியப் பேரரசை நிறுவினார்.

Iஇந்தோ-ஈரானிய மொழிகளின் தாக்கம் இந்தோ ஆரிய மொழிகளில் ஏற்பட்டு, பின் அம்மொழிகள் இந்தியா, இலங்கை, நேபாளம், வங்காளதேசம் கிழக்கு ஆப்கானித்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட இந்திய துணைக் கண்டம் முழுவதும் பரவியது.

ஒத்தச் சொற்கள்

ஒரே பொருள் கொண்ட சொற்கள் ஆதி இந்தோ ஈரானிய மொழி, வேத கால சமசுகிருதம் மற்றும் அவெஸ்தான் மொழியில் உள்ளது.[14]

மேலதிகத் தகவல்கள் ஆதி இந்தோ ஈரானிய மொழி, வேதகால சமசுகிருதம் ...
Remove ads

இதனையும் காணக


மேற்கோள்கள்

ஆதாரம்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads