இராஜேஷ்
திரைப்பட நடிகர், தொலைக்காட்சி நடிகர். From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜேஷ் (Rajesh, 20 திசம்பர் 1949 - 29 மே 2025)[2] தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த இந்திய நடிகராவார். திரைப்படங்களில் 49 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துள்ள இவர், 150-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களிலும் துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.[3] கதாநாயகன் முதல் குணச்சித்திர நடிகர் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
Remove ads
வாழ்க்கை வரலாறு
இராஜேஷ் 1949-இல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் வில்லியம்சு நாட்டார், இலில்லி கிரேசு மண்கொண்டார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஆனால் இவரது குடும்பம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அணைக்காடு பகுதியைச் சேர்ந்தது.[4] திண்டுக்கல், வடமதுரை, மேலநாதம் அணைக்காடு, சின்னமனூர் தேனி போன்ற ஊர்களில் படித்து முடித்தார்.[5] காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி. யு. சி முடித்த பிறகு, இவர் பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் எதிர்பாராத நிலையில் தனது கல்லூரிக் கல்வியை முடிக்கவில்லை. புரசைவாக்கத்தில் உள்ள புனித பவுல் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் 1972 முதல் 1979 வரை திருவல்லிக்கேணியிலுள்ள கெல்லெட் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.[3]
1974-இல், இவருக்கு அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் ஒரு சிறிய பாத்திரத்தில் மட்டுமே நடித்தார்.[3] கதாநாயகனாக இவரது முதற் படம் இராஜ்கண்ணு தயாரித்த கன்னிப்பருவத்திலே (1979).[4] கே. பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் ராஜேஷ் நடித்தார். பின்னர், இவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். கமலகாசனுடன் சத்யா, மகாநதி, விருமாண்டி போன்ற படங்களில் நடித்தார்.
உணவகம் நடத்துதல், வீடு நிலம் வாங்கி விற்கும் வணிகத்திலும் ஈடுபட்டார். நகரத்தில் ஒரு முன்னணிக் கட்டுமானர் ஆவார்.[3] ஆங்கிலத் திரைப்பட நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழில் எழுதினார்.
கிறிஸ்தவர், பெரியாரின் சித்தாந்தங்களில் தீவிரமாக இருந்தார். பின்னர் சோதிடத்தில் ஈடுபட்டார். சோதிடம் குறித்து பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
1983-இல், புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியும் திராவிடத் தலைவருமான பட்டுக்கோட்டை தாவிசு வனத்திராயரின் பேத்தியான ஜோன் சிலிவியா வனத்திராயர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு திவ்யா என்ற ஒரு மகளும், தீபக் என்ற ஒரு மகனும் உள்ளனர். தீபக் 2014-இல் நடிகராக அறிமுகமானார்.[6][7] இராஜேசின் மனைவி 2012 ஆகத்து 6 அன்று இறந்தார்.[8]
1985-இல் சென்னை கே. கே. நகர் அருகே திரைப்படப் படப்பிடிப்பிற்காக ஒரு பங்களா கட்டிய முதல் தமிழ் நடிகர் இவர் ஆவார். இது அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.[9] அந்த வீட்டில் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றன. பின்னர் 1993-இல் வீடு, நிலம் வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கியபோது அதை விற்றார். 90களின் முற்பகுதியில், இவருடைய நண்பர் ஜேப்பியார் அறிவுறுத்தியபடி, வீடு, நிலம் வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கினார். பின்னர் உணவகத்தையும், கட்டுமான வணிகத்தையும் தொடங்கினார். 1987 முதல் 1991 வரை வி. என். ஜானகியை ஆதரித்து அரசியலில் தீவிரமாக இருந்தார். கார்ல் மார்க்சின் ஆதரவாளரும் ஆவார். இங்கிலாந்து சென்று மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
Remove ads
நடித்த திரைப்படங்கள்
- 18 வயசு புயலே
- அச்சமில்லை அச்சமில்லை
- அந்த 7 நாட்கள்
- அருவா வேலு
- அலை பாயும் நெஞ்சங்கள்
- அவள் ஒரு தொடர்கதை
- அவள் போட்ட கோலம்
- அறை எண் 305ல் கடவுள்
- அனல் காற்று
- ஆட்டோகிராப்
- ஆயுதம்
- ஆலய தீபம்
- ஆறுமனமே
- இது எங்கள் ராஜ்யம்
- இராவணன்
- இலங்கேஸ்வரன்
- உத்தமி
- உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்
- என் உயிர் நீதானே
- ஒரு கல் ஒரு கண்ணாடி
- கண்ணும் கண்ணும்
- கன்னிப்பருவத்திலே
- காத்திருக்க நேரமில்லை
- காதலர் கதை
- காவலுக்குக் கெட்டிக்காரன்
- காளி கோயில் கபாலி
- காற்றுள்ளவரை
- குடும்ப சங்கிலி
- குழந்தை ஏசு
- கொலுசு
- சங்கநாதம்
- சட்டத்தின் திறப்பு விழா
- சத்திரபதி
- சத்யா
- சந்தோஷக் கனவுகள்
- சர்வம் சக்திமயம்
- சித்திரமே சித்திரமே
- சித்து +2
- சிந்தாமல் சிதறாமல்
- சிறை
- சிறையில் பூத்த சின்ன மலர்
- சின்ன ஜமீன்
- செயின் ஜெயபால்
- தம்பி பொண்டாட்டி
- தர்மதேவன்
- தர்மபுரி
- தனிக்காட்டு ராஜா
- தனிமரம்
- தாமரை
- தாய் வீடு
- தாலி புதுசு
- திருடன் போலீஸ்
- திருப்பதி
- தீண்ட தீண்ட
- தீனா
- துணிவே தோழன்
- தைப்பொங்கல்
- நல்ல காலம் பொறந்தாச்சு
- நான் நானே தான்
- நிலவே மலரே
- நினைத்து நினைத்துப் பார்த்தேன்
- பதவி படுத்தும் பாடு
- பரசுராம்
- பரமசிவன்
- புதுப்புது ராகங்கள்
- பெண்புத்தி முன்புத்தி
- பொங்கலோ பொங்கல்
- மகாநதி
- மண்ணுக்குள் வைரம்
- மண்ணைத் தொட்டு கும்பிடணும்
- மயில்
- மனக்கணக்கு
- மானஸ்தன்
- முடிவல்ல ஆரம்பம்
- முதல் சீதனம்
- மெட்டி
- மேல்மருவத்தூர் அற்புதங்கள்
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
- யாரோ எழுதிய கவிதை
- யானை
- ரமணா
- ராஜாத்தி ரோஜாக்கிளி
- லவ் சேனல்
- வரலாறு
- வருத்தப்படாத வாலிபர் சங்கம்
- வல்லவன் வருகிறான்
- வாத்தியார் வீட்டுப் பிள்ளை
- வானமே எல்லை
- விருமாண்டி
- வெளிச்சத்துக்கு வாங்க
- வேலி
- ஜன்னல் ஓரம்
- ஜி
- ஜெய்ஹிந்த்
பின்னணிக் குரல் கலைஞராக
தொலைக்காட்சிகளில்
Remove ads
இறப்பு
இராஜேஷ் 2025 மே 29 அன்று, அதிகாலையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார்.[11]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads