ஈ. வெ. கி. ச. இளங்கோவன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் (ஆங்கிலம்: E. V. K. S. Elangovan, திசம்பர் 21, 1948 - திசம்பர் 14, 2024) ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் ஆவார். முந்தைய (2004–2009) காங்கிரசு ஆட்சிக் காலத்தில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சருமாக இருந்தவர்.[1] தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களாக இருந்தவர்.
![]() | இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
Remove ads
இளமைக் காலம்
இவர் திசம்பர் 21, 1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார்.
குடும்பம்
இவர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். இவரின் தாயார் ஈ. வெ. கி. சுலோசனாசம்பத் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்புச் செயலாளராக இருந்தார். இவரது மனைவி பெயர் வரலட்சுமி, இவர்களுக்கு 2 மகன்கள். இரண்டாவது மகன் திருமகன் ஈவெரா 2023 ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
- இவர் தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் அவரது தந்தை தமிழக அரசியல் களத்தில் சொல்லின் செல்வர் என்று அன்போடு அழைக்கப்படும் ஈ. வி. கே. சம்பத் மரணத்திற்குப் பிறகு அவரது தந்தையின் நண்பரும், அன்றைய தமிழ்த் திரையுலக முன்னணி நடிகருமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் (1977–1989) வரை ஒன்றாகப் பயணித்தார். கட்சிக்குள் சிவாஜி கணேசனின் ஆதரவாளராக இருந்தார்.
- அதன் பிறகு 1984 நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில் அன்றைய சத்யமங்கலம் சட்டமன்ற தொகுதியில் ஈ. வி. கே. எஸ்.இளங்கோவன் தேர்தல் அரசியலில் முதல் முறையாக வெற்றி பெற்றுத் தமிழகச் சட்டமன்றத்திற்குச் சென்றார். எம். ஜி. இராமச்சந்திரனின் இறப்பிற்குப் பிறகு முதலமைச்சரான வி. என். ஜானகிக்கு சிவாஜி கணேசன் ஆதரவே இருத்த போது இளங்கோவனும் அவர் பக்கமே நின்றார்.
- பின்பு 1989 சட்டமன்றத் தேர்தலில் வி. என். ஜானகியின் அதிமுக (ஜா) அணிக்கு ஆதரவாக சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கிய போது இளங்கோவனும் காங்கிரசில் இருந்து விலகி அக்கட்சியின் சார்பில் பவானி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
- அத்தேர்தல் தோல்விக்குப் பிறகு சிவாஜி கணேசன் தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை அன்றைய பிரதமர் வி. பி. சிங்கின் ஜனதா தளம் கட்சியோடு இணைத்துவிட்டு அக்கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்த போதும் கூட, அதிலிருந்து பிரிந்து இளங்கோவன் மீண்டும் தனது தாய்க் கட்சியான காங்கிரசில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.
- அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தியின் பிரிவினராகத் தலைமை ஏற்று திறம்பட செயல்பட்டார்.
- அப்போது தமிழகத்தில் நடந்த தமது காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு முழுமையான காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அவர்களுக்கு அப்போது தமிழகத்தில் உதவிகரமாக இருந்த திமுகவினரையும் அக்கட்சியின் தலைவருமான மு. கருணாநிதியும் இளங்கோவன் கடுமையாக விமர்சித்தார்.
- அதன் பிறகு 1996 நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அத்தேர்தலின் தோல்விக்கு முன்பே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முன்னணி மூத்த தலைவர்களான மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, ப. சிதம்பரம் ஆகியோர் பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் கட்சி உடன் முரண்பட்டுத் தனிக் கட்சி துவங்கி சென்றுவிட்டதால்.
- அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி, சீதாராம் கேசரி ஆகியோர் இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளராக 1998இல் நியமித்தனர்.
- அதே காலகட்டத்தில் 1998, 1999 இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர் தோல்வியை தழுவினார்.
- தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் (1996–2002) ஆண்டு வரை செயல்பட்டார்.
- அப்போது நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக–காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு மூப்பனாரின் தமாகா அக்கூட்டணியில் இணைந்தது. அதன் பிறகு ஜி. கே. வாசன் தலைமையிலான த.மா.க காங்கிரசுடன் இணைந்ததையடுத்து, இளங்கோவன் தமிழக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகி ஜி. கே. வாசனின் ஆதரவாளர்களில் ஒருவரான சோ. பாலகிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழக காங்கிரசு தலைவர் பதவியை விட்டுக் கொடுத்து செயல்தலைவராக செயல்ப்பட்டார்.
- பின்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அன்றைய கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியில் திமுக–காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டு (2,14,477) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். பிறகு (2014–2017) வரை காலகட்டத்தில் மீண்டும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- மேலும் 2023 ஆண்டு அவரது மூத்த மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா திடீர் நெஞ்சு வலியால் எதிர்பாராத மரணமடைந்தார். பின் அவர் விட்டுச் சென்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் காங்கிரஸ் கட்சி சார்பாகச் சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். சுமார் 39 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்வாகி சென்றார்.
Remove ads
போட்டியிட்ட தேர்தல்கள்
Remove ads
வகித்த பதவிகள்
- தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினர்
- அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்
- தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர்,
- தமிழக காங்கிரஸ் தலைவர்
- தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்
- ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்தார்.
இறப்பு
இளங்கோவன் உடல் நலக்குறைவால் 2024 டிசம்பர் 14 ஆம் தேதி சென்னையில் காலமானார்.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads