மத்தியதரைக் கடல் பிராந்தியம்

From Wikipedia, the free encyclopedia

மத்தியதரைக் கடல் பிராந்தியம்
Remove ads

மத்தியதரைக் கடல் பிராந்தியம் (Mediterranean Basin) என்பது மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பிரதேசங்களைக் குறிக்கும். இப்பிராந்தியம் நடுநிலக்கடல் சார் வானிலையும், வறண்ட கோடைக்காலம் கொண்டது. இங்கு மத்திய தரைக்கடல் காடுகள் மற்றும் குறுங்காடுகள், அடர்ந்த புதர்கள் கொண்டது. இதன் கிழக்கில் மெசொப்பொத்தேமியா நாகரிகம், தெற்கில் பண்டைய எகிப்து நாகரிகம், வடக்கில் கிரேக்க நாகரிகம் மற்றும் பண்டைய உரோமை நாகரீகம் செழித்திருந்தது.

Thumb
மத்தியதரைக் கடல் பிராந்தித்தின் வரைபடம்
Remove ads

புவியியல்

Thumb
கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்ட மத்தியதரைக் கடல் பிராந்தியத்தின் வரைபடம்
     பாலைவன காலநிலை                நடுநிலக்கடல் சார் வானிலை
     அரை வறண்ட காலநிலை                ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை
     துணை ஆர்டிக் காலநிலை                ஈரப்பதமான கண்ட காலநிலை
     தூந்திர காலநிலை

மத்தியதரைக் கடல் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா கண்டங்களை இணைக்கிறது. ஆப்பிரிக்காவின் நைல் நதி மற்றும் ஐரோப்பாவின் ரோன் நதிகள் மத்தியதரைக் கடலில் கலக்கிறது. மத்தியதரைக் கடல் பிராந்தியம் மாறுபட்ட நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் உயர்ந்த மலைகள், பாறைகள் நிறைந்த கடற்கரைகள், அடர்ந்த புதர்கள், அரை வறண்ட புல்வெளிகள், கடலோர ஈரநிலங்கள், மணல் கடற்கரைகள் மற்றும் எண்ணற்ற தீவுகளின் நிலப்பரப்பை கொண்டுள்ளது.[1]

மத்தியத்தரைக் கடல் பிராந்தியத்தின் மேற்கே மகரோனிசியா, அசோரசு, கேப் வர்டி[2], மதீரா, மற்றும் கேனரி தீவுகள்[3] மற்றும் மேற்கில் லெவண்ட் பிரதேசமும் அமைநதுள்ளது.

மத்தியதரைக் கடல் பிராந்தியத்தின் கிழக்கில் மேற்காசியாவில் உள்ள லெவண்ட் மற்றும் அனதோலியா, நெகேவ் பாலைவனம், சிரிய பாலைவனம் மற்றும் ஈராக் பிரதேசங்கள் உள்ளது.[4]

மத்தியதரைக் கடல் பிராந்தியத்தின் தெற்கில் உள்ள வடக்கு ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனம், அட்லசு மலைத்தொடர் மற்றும் நைல் நதி பாய்கிறது.

மத்தியதரைக் கடலின் வடக்கில் உள்ள தெற்கு ஐரோப்பாவில் ஐபீரிய மூவலந்தீவு, இத்தாலிய மூவலந்தீவு மற்றும் பால்கன் குடாக்கள் அமைந்துள்ளது. பிரனீசு மலைத்தொடர் ஸ்பெயின் மற்றும் பிரான்சு நாடுகளை பிரிக்கிறது. ஆல்ப்ஸ் மலைத்தொடர் இத்தாலி மற்றும் நடு ஐரோப்பாவை பிரிக்கிறது. இத்தாலிக்கு கிழக்கே உள்ள ஏட்ரியாட்டிக் கடல் மற்றும் பால்கன் மலைகள் மேற்கு ஐரோப்பா, வடமேற்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஐரோப்பாவை பிரிக்கிறது.

Remove ads

வேளாண்மை

மத்தியதரைக் கடல் பிராந்திய வடிநிலத்தின் முக்கிய பயிர்த்தொழில் கோதுமை, காய்கறி, பருப்புகள் ஆகும். இங்கு வளரும் மரங்கள் ஆலிவ், அத்தி ஆகும். பழங்களில் கிச்சிலி, எலுமிச்சை, திராட்சைப்பழம் ஆகும்.

நடுநிலக் கடலைச் சுற்றியுள்ள நாடுகள் பட்டியல்

தெற்கு ஐரோப்பா

  1. போர்த்துக்கல்
  2. எசுப்பானியா
  3. ஜிப்ரால்ட்டர் (ஐக்கிய இராச்சியம்)
  4. பிரான்சு
  5. மொனாக்கோ
  6. இத்தாலி
  7. கிரேக்கம்
  8. சுலோவீனியா
  9. குரோவாசியா
  10. பொசுனியா எர்செகோவினா
  11. மொண்டெனேகுரோ
  12. அல்பேனியா
  13. பல்கேரியா
  14. துருக்கி
  15. சைப்பிரசு
  16. சிரியா
  17. லெபனான்
  18. இசுரேல்
  19. பாலத்தீனம்
  20. எகிப்து
  21. லிபியா
  22. துனீசியா
  23. அல்ஜீரியா
  24. மொராக்கோ

நடுநிலக் கடலிக் உள்ள பெரிய தீவுகள்

Thumb
நடுநிலக் கடலின் இருபெரும் தீவுகள்: சிசிலி மற்றும் சார்தீனியா
மேலதிகத் தகவல்கள் நாட்டின் கொடி, தீவின் பெயர் ...

நடுநிலக் கடல் பிராந்தியத்தின் கடல்கள்

  1. அசோவ் கடல்
  2. கருங்கடல்
  3. மர்மரா கடல்
  4. ஏஜியன் கடல்
  5. ஏட்ரியாட்டிக் கடல்
  6. அயோனியன் கடல்
  7. லெவண்டைன் கடல்
  8. லிபியன் கடல்
  9. லிகூரியன் கடல்
  10. திராசியன் கடல்
  11. அல்போரான் கடல்
  12. டைர்ஹெனியன் கடல்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads