எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பு, விநியோக நிறுவனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் (Escape Artists Motion Pictures) என்பது இந்திய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது தயாரிப்பாளர்கள் மதன், ஜேம்ஸ் ஆகியோரால் நிறுவப்பட்டது. 2010 இல் உருவாக்கப்பட்ட இது பல தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.[1] இவர்கள் 2010 முதல் பல தமிழ்ப் படங்களின் விநியோகஸ்தர்களாகவும் செயல்பட்டுள்ளனர்.[2][3][4][5]
Remove ads
தொழில்
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் முதன்முதலில் 2009 இல் தி எகனாமிக் டைம்சின் ஒரு கட்டுரையில் அறிவிக்கப்பட்டது. அதில் விடிவி கணேஷ் மற்றும் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்டின் எல்ரெட் குமார் மற்றும் ஆர். ஜெயராமன் ஆகியோருடன் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தயாரிப்பாளராக நிறுவனம் இணைவதாக அறிவிக்கப்பட்டது.[6] இந்த காதல் கதையில் சிலம்பரசன், திரிசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். படம் வெளியானதும், நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. பல விமர்சகர்கள் படத்திற்கு "நவீன கிளாசிக்" அந்தஸ்தைக் கொடுத்தனர். அதே நேரத்தில் வணிக ரீதியாக வெற்றிகரமான படமாகவும் ஆனது.[7][8]
Remove ads
திரைப்படவியல்
தயாரிப்பாளர்
விநியோகஸ்தர்
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads