அ. கு. அந்தோனி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

அ. கு. அந்தோனி
Remove ads

அரக்கப்பரம்பில் குரியன் அந்தோனி (Arackaparambil Kurien Antony, மலையாளம்: അറക്കപ്പറമ്പില്‍ കുര്യന്‍ ആന്‍‌റ്റണി, பிறப்பு: 28 திசம்பர் 1940) ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆவார். மூன்று முறை கேரளத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார். 1977இல் முதல் முறை கேரள முதல்வராக இருந்தபொழுது கேரள வரலாற்றில் மிக இளைய முதல்வராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆன்டனி கடந்த 2009-2014 மன்மோகன் சிங் அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

விரைவான உண்மைகள் அ. கு. அந்தோனிA. K. Antony, 23-ஆவது பாதுகாப்புத்துறை அமைச்சர் ...
Remove ads

தொடக்க வாழ்க்கை மற்றும் கல்வி

ஆண்டனி ஒரு லத்தீன் கத்தோலிக்க குடும்பத்தில் [1] ஆரக்கபரம்பில் குரியன் பிள்ளைக்கும் அலேக்குட்டி குரியனுக்கும் மகனாக திருவிதாங்கூரிலுள்ள ஆலப்புழா அருகிலுள்ள சேர்த்தலையில் பிறந்தார்.[2] [3] இவரது தந்தை 1959 இல் இறந்தார். ஆண்டனி தனது கல்வியின் ஒரு பகுதியை ஒரு வேலை செய்து அதில் கிடைத்த சுயநிதியின் மூலம் கல்வி பயின்றார். [4]

இவர் தனது ஆரம்பக்கல்வியை சேர்த்தலாவிலுள்ள புனித பேமிலி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தொடக்க கல்வியையும் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது மேல்நிலைக் கல்வியையும் முடித்தார்.[a] எர்ணாகுளத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் இளங்கலையும், எர்ணாகுளத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டத்தையும் முடித்தார். [5]

விரைவான உண்மைகள்
Remove ads

மேற்கோள்கள்

குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads