கத்தே மாகாணம்

துருக்கியின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கத்தே மாகாணம் (ஆங்கிலம்: Hatey) தெற்கு துருக்கியின், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாகாணமாகும் . இதன் நிர்வாக தலைநகரம் அந்தியோகியா, மற்றும் மாகாணத்தின் மற்ற முக்கிய துறைமுக நகரம் அலெக்சாண்ட்ரெத்தா ஆகும். இது சிரியாவின் தெற்கு மற்றும் கிழக்கிலும், துருக்கிய மாகாணங்களான அதானா மற்றும் உசுமானியாவின் வடக்கிலும் உள்ளது.

முதலாம் உலகப் போருக்குப் பின்னர் உதுமானிய பேரரசில் இருந்து சிரியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து பல ஆண்டுகளில் சிரியா இதன் மீதான இறையாண்மையை சொண்டுள்ளது. இரு நாடுகளும் பிரதேசத்தின் மீதான தகராறில் பொதுவாக அமைதியாக இருந்தபோதிலும், சிரியா ஒருபோதும் அதற்கான உரிமையை கைவிடவில்லை.

Remove ads

வரலாறு

ஆரம்பகால வெண்கல யுகத்திலிருந்தே கத்தே அக்காடியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது, பின்னர் யம்காத்தின் அமோரிட்டு இராச்சியத்தின் பகுதியாக இருந்தது. பின்னர், அது மித்தானிய பேரரசின் பகுதியாக மாறியது , பின்னர் அடுத்தடுத்து இட்டைட்டு பேரரசால் ஆளப்பட்டு வந்தது.

பின்னர் அந்த பகுதி அசிரியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ( உரராத்துவின் சிறு ஆக்கிரமிப்பு தவிர), பின்னர் பெர்சியர்கள் இதை ஆண்டு வந்துள்ளனர் இப்பகுதி செலூக்கிய பேரரசின் ஆட்சி மையமாக இருந்தது, இது சிரிய தெத்ரபோலிசின் நான்கு கிரேக்க நகரங்களுக்கு (அந்தியோகியா, செலியுசியா பியரியா, அபாமியா மற்றும் இலாவோடிசியா ) சொந்தமானது. கிமு 64 முதல் அந்தியோகியா நகரம் உரோமானியப் பேரரசின் முக்கியமான பிராந்திய மையமாக மாறியது.

638 இல் ராசிதுன் கலிபாவால் இந்த பகுதி கைப்பற்ற்றப்பட்டது, பின்னர் உமையா மற்றும் அப்பாசிய அரபு வம்சங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 11 ஆம் நூற்றாண்டு முதல், இசிடைைட்டுகளின் ஆட்சிக்குப் பின்னர் இப்பகுதி அலெப்போ- அடிப்படையிலான கம்தானித்களால் கட்டுப்படுத்தப்பட்டது. 969 ஆம் ஆண்டில் அந்தியோகியா நகரம் பைசாந்தியப் பேரரசால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. இதை 1078 இல் பைசாந்திய அரசர் பிலரெத்தோசு பிராச்சமியோசு கைப்பற்றினார். அவர் அந்தியோகியா முதல் எடெசா வரை ஒரு அரசை நிறுவினார். இது 1084 இல் ரம் சுல்தான் முதலாம் சுலைமானால் கைப்பற்றப்பட்டது. இது 1086 இல் அலெப்போவின் சுல்தான் முதலாம் துத்துஷ் கைக்குச் சென்றது. 1098 ஆம் ஆண்டில் சிலுவைப்போர் கத்தேயைக் கைப்பற்றும் வரை செல்யூக் ஆட்சி 14 ஆண்டுகள் நீடித்தது, அது அந்தியோகியாவின் அரச மையமாக மாறியது. 1268 இல் மம்லூக் சிலுவை வீரர்கள் இதை கைப்பற்றினர்.

துருக்கியின் கத்தே மாகாணம்

1939 ஜூன் 29 இல், நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கத்தே ஒரு துருக்கிய மாகாணமாக மாறியது. இந்த வாக்கெடுப்பு "போலியானது" மற்றும் "மோசடி" என்று கூறப்பட்டது.[1][2] துருக்கி பல்லாயிரக்கணக்கான துருக்கியர்களை வாக்கெடுப்புக்காக அலெக்சாண்தெரத்தாவுக்கு அனுப்பியது.[3] இவர்கள் கத்தேயில் பிறந்த துருக்கியர்கள் அப்போது துருக்கியில் வேறு இடங்களில் வசித்து வந்தனர். 1937 மற்றும் 1938 ஆம் ஆண்டுகளில் துருக்கிய அரசாங்கம் அனைத்து அரசு ஊழியர்களின் பட்டியலை தயாரிக்கும்படி கேட்டுக்கொண்டது. பட்டியலிடப்பட்டவர்கள் பின்னர் குடிமக்களாக பதிவு செய்து வாக்களிக்க கத்தேவுக்கு அனுப்பப்பட்டனர்.[4]

Remove ads

நிலவியல்

Thumb
ஹடாயில் உள்ள பாய்ராஸில் கோட்டை இடிபாடுகள்

சமமான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளின் வடகிழக்கில் கத்தே பயணிக்கிறது. 46% நிலம் மலை, 33% சமவெளி மற்றும் 20% பீடபூமி மற்றும் மலைப்பகுதியும் அடங்கும். சில கனிமங்கள் உள்ளன, இசுகெண்தெரூன் துருக்கியின் மிகப்பெரிய இரும்பு மற்றும் எஃகு ஆலைக்கு சொந்தமானது, மற்றும் இயேலாடா மாவட்டம் ரோஸ் ஆஃப் கத்தே என்ற வண்ணமயமான பளிங்கை உருவாக்குகிறது.

காலநிலை

கத்தே ஒரு மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்டுள்ளது, இது மிகவும் வெப்பமான, நீண்ட மற்றும் வறண்ட கோடைகாலங்களை குளிர்ந்த மழைக்காலங்களைக் கொண்டுள்ளது. உள்நாட்டிலுள்ள மலைப் பகுதிகள் கடற்கரையை விட வறண்டவை

Remove ads

மக்கள்தொகை

ஷியா இஸ்லாத்தின் அல்லது சுன்னி இசுலாத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள், ஆனால் சிரியா மரபுவழி, சிரியா கத்தோலிக்கர், மரோனைத், அந்தியோகியன் கிரேக்க மற்றும் ஆர்மீனிய சமூகங்கள் உட்பட பிற சிறுபான்மையினரும் உள்ளனர். பெரும்பாலான மத்தியதரைக் கடல் மாகாணங்களைப் போலல்லாமல், சமீபத்திய ஆண்டுகளில் துருக்கியின் பிற பகுதிகளிலிருந்து வெகுசன இடம் பெயர்வுகளை கத்தே எதிர் கொள்ளவில்லை, எனவே அதன் பாரம்பரிய கலாச்சாரத்தின் பெரும்பகுதியைப் பாதுகாத்து வருகிறது; எடுத்துக்காட்டாக, அரபு இன்னும் மாகாணத்தில் பரவலாக பேசப்படுகிறது.[5]

சிரிய உள்நாட்டுப் போரின்போது, மாகாணம் அகதிகளின் வருகையை அனுபவித்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 21 ஏப்ரல் 2016 நிலவரப்படி, 408,000 சிரிய அகதிகள் மாகாணத்தில் வாழ்ந்தனர்.[6]

கல்வி

முஸ்தபா கெமல் பல்கலைக்கழகம் துருக்கியின் புதிய மூன்றாம் நிலை நிறுவனங்களில் ஒன்றாகும், இது 1992 இல் இசுகெண்தெருன் மற்றும் அன்தாகியாவில் நிறுவப்பட்டது.

போக்குவரத்து

இந்த மாகாணத்தில் கத்தே விமான நிலையம் மற்றும் நகரங்களுக்கு இடையேயான பேருந்துகள் சேவை செய்கின்றன.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads