கராச்சி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கராச்சி மாவட்டம் (Karachi District) (முந்தைய பெயர்:கராச்சி தெற்கு மாவட்டம்), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் தென்மேற்கில் கராச்சி கோட்டத்தில் அமைந்த கராச்சி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கராச்சி நகரம் ஆகும். கராச்சி நகரமானது நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 1,411 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. 2023ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தின் பெயர் கராச்சி மாவட்டம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[4]கராச்சி மாவட்டத்தின் பரப்பளவு 122 சதுர கிலோமீட்டர் ஆகும்.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 425,093 h குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 2,329,764 ஆகும்[5]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 114 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 78.57% ஆகும்.[2][6]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 487,047 (20.91%) ஆக உள்ளனர். of the surveyed population) are under 10 years of age.[7]இம்மாவட்டத்தின் முழு மக்கள் தொகையும் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[2]
மொழிகள்
இம்மாவட்ட்டத்தில் உருது மொழியை 34.7% மக்களும், சிந்தி மொழிய 15.62% மக்களும், பலூச்சி மொழியை 11.58% மக்களும், பஷ்தூ மொழியை 5.42% மக்களும், பஞ்சாபி மொழியை 8.17% மக்களும், இந்த்கோ மொழியை 3.17% மக்களும் சராய்கி மொழியை 2.64% மக்களும், பிராகுயி மொழி போன்ற பிற மொழிகளை 2.64% மகக்ளும் பேசுகின்றனர்.[8]
சமயங்கள்
இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 93.85% மக்களும், இந்து சமயத்தை 4.24% மக்களும், கிறித்துவ சமயத்தை 1.65% மக்களும் பின்பற்றுகின்றனர்.[9].
Remove ads
மாவட்ட நிர்வாகம்
கராச்சி மாவட்டம் இரண்டு நகரங்களையும், 26 ஒன்றியக் குழுக்களையும் கொண்டது.[10]
கராச்சி மைய நகரம்
லியாரி நகரம்

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads