கானாக் மக்கள்

மலேசியாவின் பழங்குடி இனக்குழு From Wikipedia, the free encyclopedia

Remove ads

கானாக் அல்லது கானாக் மக்கள் (ஆங்கிலம்: Kanaq People; Orang Kanaq; மலாய்: Orang Temiar; Mai Sero) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும். தீபகற்ப மலேசியாவின் 18 மலேசியப் பழங்குடியினர் குழுக்களில் மிகச்சிறிய இனக்குழுவினர் ஆகும்.[4] தீபகற்ப மலேசியாவில் தற்போது 90 மக்கள் (2024) மட்டுமே உள்ளனர்.[3]

விரைவான உண்மைகள் Orang Kanaq, மொத்த மக்கள்தொகை ...

கானாக் மக்கள் என்பவர்கள் கானாக் மொழியைப் பேசுகிறார்கள். கானாக் மொழி (Kanaq Language) என்பது ஆஸ்திரோனீசிய மொழிகள் (Austronesian Languages) பெரும் மொழிக் குடும்பத்தில்; மலாய-பொலினீசிய மொழிகள் (Malayo-Polynesian languages) துணைக் குடுமபத்தின்; மலாய மொழிகள் (Malayic languages) பிரிவில் ஒரு மொழியாகும்.[5][6]

மலாய் மொழி என்பது தனி ஒரு மொழியைக் குறிப்பிடுவதாகும். மலாய மொழிகள் (Malayic Languages) என்பது மலாய் மொழி சார்ந்த ஒரு மொழிக் குழுவைக் குறிப்பிடுவதாகும்.

Remove ads

பொது

கானாக் மக்களின் தனித்துவமான கனாக் மொழியும்; மற்றும் தனித்துவமான கலாச்சாரமும்; ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்திற்குள் காணாமல் போகலாம் எனும் ஒரு பொதுவான அச்சுறுத்தல் உள்ளது. பிற இனக் குழுக்களுடனான கலப்புத் திருமணங்களை, கனாக் மரபுகள் அனுமதிப்பது இல்லை. அத்துடன், மற்ற இனமக்களுடன் மிகக் குறைந்த அளவிலான தொடர்புகள் இருப்பதால் மட்டுமே கானாக் மக்கள் இன்றும் உள்ளனர்.[7]

கானாக் மக்கள் அண்மைய காலத்தில் தான், அதாவது 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் மலேசிய நாட்டில் குடியேறி உள்ளனர். இன்றைய இந்தோனேசியாவின் தெற்கே அமைந்துள்ள ரியாவு-லிங்க தீவுக்கூட்டம்தான் அவர்களின் தாய்நாடு ஆகும்.

Remove ads

கானாக் மக்கள் மீதான் ஆய்வுகள்

ரியாவு-லிங்க தீவுக்கூட்டத்தில் உள்ள டெய்க் (Daik) எனும் ஒரு சிறிய தீவில், செகானாக் (Sekanak People) எனும் பழங்குடியினர் இன்றும் வாழ்கின்றனர். அந்த மக்கள் தீபகற்ப மலேசியாவின் கானாக் மக்களுடன் தொடர்பு உடையவர்கள் என நம்பப்படுகிறது.[8]

கானாக் மக்கள் மீது மிகக் குறைவாகவே ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. பொதுவாக, கானாக் மக்கள் வெளிமக்களின் தொடர்புகளைத் தவிர்க்கிறார்கள், எனவே ஆய்வாளர்கள் அவர்கள் மீது அதிகக் கவனம் செலுத்தவில்லை.[7] அண்மையில்தான் மலேசிய ஆய்வாளர்கள் அந்த பழங்குடியினரைப் பற்றிய சில ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

கானாக் மொழி மலாய் மொழியைச் சற்றே ஒத்திருக்கிறது. ஆனாலும் கானாக் மொழியில் தனித்துவமான; கரடுமுரடான உச்சரிப்புகள் இருக்கவே செய்கின்றன. இதற்கிடையில் கானாக் மக்களின் தொகை குறைந்து வருகிறது என அறியப்பபடுகிறது.[9] அப்போதும் கனாக் மொழி இன்னும் அழிபடாமல் தப்பித்து உயிர்வாழ்கிறது.[10]

Remove ads

கானாக் மக்கள் தொகை

கானாக் மக்கள் தொகை பின்வருமாறு:-

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மக்கள் தொகை ...

மேலும் காண்க

மேற்கோள்கள்

சான்று நூல்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads