கிராப்டோபில்லம்

From Wikipedia, the free encyclopedia

கிராப்டோபில்லம்
Remove ads

கிராப்டோபில்லம் (தாவரவியல் வகைப்பாடு: Graptophyllum) என்பது பூக்கும் தாவர வகையின் கீழ் அமைந்துள்ள, முண்மூலிகைக் குடும்ப தாவரப் பேரினங்களில் ஒன்றாகும்.[2] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, நீசு (Nees) என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[3] இங்கிலாந்தில் உள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரியினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1832ஆம் ஆண்டு வெளியானது. இப்பேரினத்தில் உள்ள சிற்றினங்களின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, நைஜீரியா முதல் கமரூன் வரையும், நியூ கினி முதல் தென்மேற்கு அமைதிப் பெருங்கடல் வரையும் உள்ளது.

விரைவான உண்மைகள் கிராப்டோபில்லம், காப்பு நிலை ...
Remove ads

வாழிடங்கள்

இப்பேரினத்தின் வாழிடங்களை, கீழ்கண்ட இருவகைகளாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;—

பிறப்பிடம்: கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, பிஜி, நியூ கலிடோனியா, நியூ கினி, நைஜீரியா, குயின்ஸ்லாந்து, தொங்கா.

அறிமுக வாழிடம்: வங்காளதேசம், கரோலைன் தீவு, குக் தீவுகள், கியூபா, டொமினிக்கன் குடியரசு, புளோரிடா, கானா, கினி, எயிட்டி, ஒண்டுராசு, ஜமேக்கா, சாவகம் (தீவு), லீவர்டு தீவுகள், சிறு சுண்டாத் தீவுகள், இலைன் தீவுகள், மரியானா தீவுகள், மார்சல் தீவுகள், மொரிசியசு, நிக்கராகுவா, பனாமா, புவேர்ட்டோ ரிக்கோ, ரீயூனியன், சியேரா லியோனி, சொசைட்டி தீவுகள், சொலமன் தீவுகள், இலங்கை, டோக்கெலாவ், மணியிகி, டிரினிடாட் மற்றும் டொபாகோ, தூமோடுசு, வனுவாட்டு, வெனிசுவேலா, வெனிசுவேலாவின் அண்டிலிசு, வியட்நாம்.[சான்று தேவை]

Remove ads

இனங்கள்

இப்பேரினத்தின் கீழ் 15 சிற்றினங்கள் பன்னாட்டு தாவரவியல் அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவை:

  1. Graptophyllum balansae Heine[4]
  2. Graptophyllum excelsum (F.Muell.) Druce[5]
  3. Graptophyllum gilliganii (F.M.Bailey) S.Moore[6]
  4. Graptophyllum glandulosum Turrill[7]
  5. Graptophyllum ilicifolium (F.Muell.) Benth.[8]
  6. Graptophyllum insularum (A.Gray) A.C.Sm.[9]
  7. Graptophyllum macrostemon Heine[10]
  8. Graptophyllum ophiolithicum Heine[11]
  9. Graptophyllum pictum (L.) Griff.[12]
  10. Graptophyllum pubiflorum S.Moore[13]
  11. Graptophyllum repandum (A.Gray) A.C.Sm.[14]
  12. Graptophyllum reticulatum A.R.Bean & Sharpe[15]
  13. Graptophyllum sessilifolium A.C.Sm.[16]
  14. Graptophyllum spinigerum F.Muell.[17]
  15. Graptophyllum thorogoodii C.T.White[18]
Remove ads

மேற்கோள்கள்

இதையும் காணவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads