கோலாத்துநாடு
மலபார் கடற்கரைப் பகுதியில் இருந்த பண்டைய அரச மரபு From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோலாத்துநாடு (Kolathunadu) கோல சொரூபம் எனவும் சில கணக்குகளில் கண்ணனூர் இராச்சியம் எனவும், பிற்காலத்தில் சிரக்கல் அல்லது செரிகுல் எனவும் அறியப்படும் இது போர்த்துகீசிய அர்மடாக்கள் இந்தியாவிற்கு வந்தபோது மலபார் கடற்கரையில் இருந்த நான்கு சக்திவாய்ந்த இராச்சியங்களில் ஒன்றாகும். கோழிக்கோடு நாடு, கொச்சி இராச்சியம், வேணாடு போன்றவை பிற மூன்று சக்திகள். கோலாத்துநாடு எழிமலையை அதன் தலைநகராகக் கொண்டிருந்தது. இப்பகுதி கோலாத்திரி அரச குடும்பத்தால் ஆளப்பட்ட இப்பகுதி தோராயமாக இந்தியாவின் கேரள மாநிலத்தின் வடக்கு மலபார் பகுதியை உள்ளடக்கியது. பாரம்பரியமாக, கோலாத்துநாடு என்பது வடக்கே பயசுவினி ஆறுக்கும் தெற்கே கோரப்புழா ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ள நிலம் என்று கருதப்படுகிறது.[1] கோலாத்துநாடு ( கண்ணூர் ) இராச்சியம் அதன் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போது, வடக்கே நேத்ராவதி ஆறு ( மங்களூர் ) முதல் தெற்கே கோரபுழா ஆறு ( கோழிக்கோடு ) வரையிலும், மேற்கில் அரபிக்கடல் மற்றும் கிழக்கு எல்லையில் குடகு மலைகளுடன், அரபுக்கடலில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இலட்சத்தீவுகளையும் உள்ளடக்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. [2]
Remove ads
தோற்றம்
கோலாத்திரிகள் என்று அழைக்கப்படும் கோலத்துநாட்டின் ஆளும் குடும்பம், கேரளாவின் பண்டைய வம்சாவளியான புலி நாட்டின் அரச குடும்பத்தின் வழித்தோன்றல்கள் ஆவர். மேலும் 12-ஆம் நூற்றாண்டில் மகோதயபுரத்தின் சேரர்கள் மற்றும் பாண்டிய வம்சம் போன்றவைகள் காணாமல் போன பிறகு, கேரள பிராந்தியத்தில் முக்கிய அரசியல் சக்திகளில் ஒன்றாக உயர்ந்தது.[3][4]
வரலாறு
கோலத்திரிகளின் வம்சாவளியை பண்டைய மூசீக இராச்சியத்தில் (எழிமலை இராச்சியம், தமிழ்ச் சங்க காலத்தின் எலி-நாடு) காணலாம். சேரர்களுக்கு எதிரான போரில் மூசிக வம்சத்தின் மன்னர் நன்னன் கொல்லப்பட்ட பிறகு, இங்கேயும் அங்கேயும் ஒரு சில மறைமுக குறிப்புகளைத் தவிர, வம்சத்தின் வரலாற்றின் வரலாறு தெளிவற்றதாக உள்ளது. இருப்பினும், கோலத்திரிகள் மன்னர் நன்னனின் சந்ததியினர் என்று வழக்கமான அறிஞர்களால் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. மேலும் பிற்கால இலக்கியப் படைப்புகள் விக்கிரமராமன், ஜெயமணி, வளபன், ஸ்ரீகண்டன் போன்ற மன்னர்களை மூசிக வம்ச மன்னரர்களாக சுட்டிக்காட்டுகின்றன. துளு நாட்டின் பந்த் சமூகத்தின் சக்திவாய்ந்த மற்றும் போர்க்குணமிக்க குலம் கோலா பாரி என்றும், கோலத்துநாட்டின் கோலத்திரி மன்னன் இந்த குலத்தின் வழித்தோன்றல் என்றும் இந்திய மானுடவியலாளர் ஐனப்பள்ளி அய்யப்பன் கூறுகிறார்.[5] மிகவும் பிரபலமான திருவிதாங்கூர் அரச குடும்பம் கோலத்திரிகளின் நெருங்கிய உறவினர்களாக இருந்தது.[6][7][8]
கோலாத்திரிகள் பொதுவாக கனரா மற்றும் கோழிக்கோடு இராச்சியங்களுக்கு இடையிலான பகுதிகளின் மீது உயர்ந்த அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களின் அரசியல் செல்வாக்கு ஏறக்குறைய கோலாத்துநாட்டில் மட்டுமே இருந்தது.[9][10]
Remove ads
ஆட்சிப் பகுதிகள்
அவர்களின் பண்டைய தலைநகரான எழிமலை, கொல்லம் மற்றும் கோழிக்கோடு ஆகியவற்றுடன் மலபார் கடற்கரையில் மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்தது. இப்னு பதூதா, மார்க்கோ போலோ மற்றும் வாங் தா-யுவான் ஆகியோர் தங்கள் பயணக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர். காலப்போக்கில், இவர்களின் பிரதேசங்கள் பல சிறிய நிலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. இவர்கள் தெற்கில் உள்ள தங்கள் அண்டை நாடான கோழிக்கோடு இராச்சியத்துடன் அடிக்கடி போட்டியிட்டனர். இது கேரள வரலாற்றின் நிரந்தர அம்சமாக இருந்தது. வடக்கு மலபார் மற்றும் கோழிக்கோடு இராச்சியத்திற்கு இடையிலான சாதி கட்டுப்பாடுகளும், கோரபுழாவின் எல்லைகளும் அவர்களின் போட்டிக்குப் பிறகு நிறுவப்பட்டது. கோலாத்துநாடு திருவிதாங்கூர் மற்றும் துளு இராச்சியங்களுடன் நட்பாக இருந்ததாகவும் சில வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.[11]
மலையாள இலக்கியத்தின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லான ‘கிருஷ்ண கதை’யின் ஆசிரியர் செருசேரி நம்பூதிரி (கி. பி. 1375-1475) கோலத்திரி வம்சத்தின் மன்னர்களில் ஒருவரான உதயவர்மனின் அரசவையில் இருந்தவர். ‘கிருஷ்ண கதை’ என்பது பாகவதத்தின் 10 வது புராணம் அடிப்படையில் கிருஷ்ணரின் சிறுவயது குறும்புகள் பற்றிய விரிவான விளக்கமாகும்.[12][13]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads