சீசெல்சில் இந்து சமயம்

From Wikipedia, the free encyclopedia

சீசெல்சில் இந்து சமயம்
Remove ads

சீசெல்சில் வாழும் சிறுபான்மை இந்தியர்கள் இந்து சமயத்தினர் ஆவர்.[1] 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 2,150 பேர் இந்து சமயத்தைப் பின்பற்றுவதாகத் தெரிவித்தனர்.[2] 1901 ஆம் ஆண்டு 19,237 பேரில் 332 குடும்பங்கள் இந்து சமயத்தைப் பின்பற்றியதாகவும் இவர்களில் 3,500 பேர் தமிழர்கள் எனவும் கூறப்பட்டது. இந்து கோவில் சங்கம், நவசக்தி விநாயகர் ஆலயம் ஆகியன மக்களிடையே தங்களின் சமய உணர்ச்சிகளை எழுப்பின. [3]


உலக நாடுகளில் இந்து சமயம்

தொடரின் ஒரு பகுதி

Thumb
Remove ads

சீசெல்சு இந்து கோயில் சங்கம்

சீசெல்சு கோயில் சங்கம் எழுபது ஆண்டுகளாக மக்களின் சமய, பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாத்து வருகிறது. காவடி மற்றும் பிற இந்து சமய வழிபாடுகள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஊடகங்களில் ஒலிபரப்படுகின்றன.

நவசக்தி விநாயகர் ஆலயம்

Thumb
நவசக்தி விநாயகர் ஆலயம்

சீசெல்சில் விநாயகரை முதன்மையாகக் கொண்ட ஒரே கோயில் இதுவே. இங்கே முருகன், சிவன், பெருமாள், துர்க்கை, பைரவர் ஆகிய தெய்வங்களின் சிலைகள் அமைந்துள்ளன. தைப்பூசத் திருவிழாவின் பரவலால் இப்பண்டிகையை இந்துக்களுக்காக அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது இந்நாட்டு அரசு.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads