உகாண்டாவில் இந்து சமயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உகாண்டாவில் இந்து சமயம் (Hinduism in Uganda), பிரித்தானியப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் உகாண்டா இருந்த போதே இந்து சமயம் உகாண்டாவில் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகமானது.[1][2]இந்திய விடுதலைக்கு முன்னர் குஜராத்திகள், ஜெயினர் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட 32,000 பணியாளர்களை கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தையும், உகாண்டாவுடன் இணைக்கும் இருப்புப் பாதைகள் அமைக்கவும்,[3][4]மற்றும் கட்டுமாணப் பணிகளுக்காகவும், நிர்வாகப் பணிகளுக்காவும் பிரித்தானியர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.[1][2][5]

![]() |
பிரித்தானியா காலனியாதிக்கத்திலிருது விடுதலை பெற்ற பின் ஆட்சிக்கு வந்த அதிபர் இடி அமீன் ஆட்சியில், புதிய சட்டத்தின் மூலம், 1972ல் இந்துக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, உகாண்டா நாட்டை விட்டு வெளியேற்றினார்.[3][4][6]
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2015ஆம் மதிப்பீட்டின்படி, உகாண்டா நாட்டில் ஏறத்தாழ் 3,55,497 (0.93%) இந்து சமயத்தவர்கள் உள்ளனர்[7][8]
இடி அமீன் ஆட்சியில் வெளியேற்றப்பட்ட இந்துக்களும், மற்றவர்களும்

பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர், உகாண்டாவை ஆட்சி செய்த இடி அமீன், 1972ல் இந்திய இந்துக்கள், ஜெயினர்கள், பஞ்சாபியர்கள் மற்றும் பிற ஆசிய நாட்டவர்களின் வேலை மற்றும் அனைத்து உடமைகளைப் பறித்துக் கொண்டு, உகாண்டா நாட்டை விட்டு வெளியேற்றினார்.[11][12][13][14][15][16][17][18]
Remove ads
இடி அமீனுக்குப் பின்னர்
இடி அமீனால் இந்துக்கள் வெளியேற்றப்பட்ட 20 ஆண்டு காலத்திற்குப் பின்னர், உகாண்டா அரசு இந்திய சமூகத்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் சட்டத்தைத் திரும்பப் பெற்றது. உகாண்டாவின் 27 மில்லியன் மக்கள் தொகையில், ஆசிய நாட்டவர்களில் 65% இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆவார்.[3] உகாண்டாவின் கம்பாலா நகரத்தில் சுவாமி நாராயண் கோயில் உள்ளது.[19]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads