கனடாவில் இந்து சமயம்

From Wikipedia, the free encyclopedia

கனடாவில் இந்து சமயம்
Remove ads

கனடாவில் இந்து சமயம் ஒரு மூன்றாவது பெரிய சமயம் ஆகும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 2.3% பேர் இந்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.[2][3] 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, 828,000 க்கும் அதிகமான கனேடியர்கள் இந்து சமய நம்பிக்கையில் உள்ளனர்.[3]

விரைவான உண்மைகள் பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை, பின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள் ...


உலக நாடுகளில் இந்து சமயம்

தொடரின் ஒரு பகுதி

Thumb

கனடிய இந்துக்கள் பொதுவாக மூன்று குழுக்களில் ஒன்றிலிருந்து வந்தவர்கள். முதல் குழு முதன்மையாக 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பிரித்தானிய கொலம்பியாவிற்கு வரத் தொடங்கிய இந்தியக் குடியேற்றக்காரர்களால் ஆனது.[4] இந்தியா முழுவதிலும் இருந்து இந்துக்கள் இன்றும் கனடாவில் குடியேறுவது தொடர்கிறது. கனடாவிற்கு வந்த இந்துக் குடியேற்றவாசிகளின் முதல் அலையானது, வரலாற்று ரீதியாக ஐரோப்பியக் குடியேற்ற ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளான பிஜி, மொரிசியசு, தென்னாப்பிரிக்கா, கயானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, சுரிநாம், கிழக்கு ஆபிரிக்கா வின் கடலோரப் பகுதிகளிலிருந்து வந்தது.[5] இந்துக்களின் இரண்டாவது பெரிய குழு வங்காளதேசம், நேபாளம், பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து குடியேறினர். இலங்கை இந்துக்களைப் பொறுத்தமட்டில், கனடாவில் அவர்களது வரலாறு 1940களில் சில நூறு இலங்கைத் தமிழர்கள் கனடாவுக்குக் குடிபெயர்ந்த காலத்திலிருந்து செல்கிறது.[6] இலங்கையில் 1983 இனக்கலவரம், அதன் பின்னர் நடந்த உள்நாட்டுப் போர் ஆகியவை காராணமாக கனடா, ஐக்கிய இராச்சியம், ஆத்திரேலியா, அமெரிக்கா, பிரான்சு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் 500,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர். அப்போதிருந்து, இலங்கைத் தமிழர்கள் குறிப்பாக தொராண்டோ, தொராண்டோ பெரும்பாகம் பகுதியைச் சுற்றி கனடாவில் குடியேறினார்கள். மூன்றாவது குழுவானது ஐரோப்பியக் கனேடியர்களால் ஆனது, இவர்கள் இந்து வேதங்களை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கண்டறிந்தனர், இந்து சமயத்தின் கொள்கைகளுக்கு ஏற்பத் தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கினர். இந்த பிரிவுகளில் ஒன்று அரே கிருஷ்ணா இயக்கம்.[7] இசுக்கார்பரோவின் தொராண்டோ மாவட்டத்தில் குறிப்பாக இந்துக்களின் செறிவு அதிகமாக உள்ளது, பல சுற்றுப்புறங்களில் இந்து சமயம் மேலாதிக்க சமயமாக உள்ளது.[8]

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவில் 828,195 இந்துக்கள் உள்ளனர், இது 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 297,200 ஆக இருந்தது.[9][10]

Remove ads

இந்து மக்கள் தொகை

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விழுக்காடு, % ...

மாகாணங்கள் வாரியாக

தேசிய குடும்ப ஆய்வின்படி, கனடாவின் இந்து மக்கள்தொகை.[9]

மேலதிகத் தகவல்கள் மாகாணம், 2001 கணக்கெடுப்பு ...
Remove ads

இந்து சமூகம் மீதான தாக்குதல்

  • 2013 ஆம் ஆண்டு சர்ரேயில் உள்ள ஒரு இந்து கோவிலின் மூன்று ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தாக்குதலுக்குப் பிறகு அங்கு கண்டெடுக்கப்பட்ட பேஸ்பால் மட்டையில் சீக்கிய அடையாளங்கள் இருந்தன.[13]
  • 2018 ஆம் ஆண்டில், மாண்ட்ரீலை தளமாகக் கொண்ட தயாரிப்பு நிறுவனமான “ஆர்ட் ஆஃப் வேர்” இந்துக் கடவுளான கணேஷின் உருவங்களைச் சுமந்து யோகா கேப்ரிகளை விளம்பரப்படுத்தியது. யுனிவர்சல் சொசைட்டி ஆஃப் ஹிந்துயிசத்தின் தலைவரான ராஜன் செட் , இது இந்துக்களை புண்படுத்தும் வகையில் மிகவும் பொருத்தமற்றது என்று கூறினார். "ஆர்ட் ஆஃப் வேர்" முறைப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.[14]
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads