செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Serdang Raya Selatan MRT Station; மலாய்: Stesen MRT Serdang Raya Selatan) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், செரி கெம்பாங்கான், செர்டாங், தாமான் செர்டாங் ராயா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். செர்டாங் பகுதிகளுக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 16, 2023 அன்று முறைப்படி திறக்கப்பட்டது.
தற்போது PY31 செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையத்திற்கும் PY33 செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம் PY32 எனும் நிலையக் குறியீட்டைக் கொண்டுள்ளது.[2] கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்கு மாடி அமைப்பைக் கொண்டுள்ளது.
Remove ads
வரலாறு
இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); 12 புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2023 மார்ச் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது.[2] இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் செர்டாங் ராயா செலாத்தான் நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது.[3]
இந்த நிலையத்தின் கட்டமைப்பிற்கான தொடக்கக் குறியீடு S27 ஆகும்.[1] சில ஆண்டுகளுக்குப் பிறகு, கட்டுமானத்தின் போது பயன்படுத்தப்பட்ட நிலையப் பெயரான செர்டாங் ராயா சவுத் (Serdang Raya South) என்பது தற்போதைய நிலையப் பெயரான செர்டாங் ராயா செலாத்தான் எனும் பெயருக்கு மாற்றப்பட்டது.
முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது 12 புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது.[2] இந்த PY32 செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட நிலையமாக உருவாக்கப்பட்டது.
கட்டுமானங்கள்
செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானம் S206 உடன்படிக்கையின் கீழ் செயல் படுத்தப்பட்டது. S206 உடன்படிக்கை என்பது தொடருந்து நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளை உள்ளடக்கியது. நிலையங்களின் கட்டமைப்பு பணிகளுக்கான தொகை மொத்தம் RM 32.14 பில்லியன் அகமத் சாக்கி நிறுவனத்திடம் (Ahmad Zaki Sdn. Bhd) வழங்கப்பட்டது.
S206 உடன்படிக்கை, நிலையங்களின் கட்டமைப்புகள் மற்றும் அவை தொடர்பான வேலைகளை உள்ளடக்கியது. அவற்றுள் தாமான் செர்டாங் ஜெயாவில் உள்ள PY33 செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம்; மற்றும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் PY34 யூபிஎம் எம்ஆர்டி நிலையம் ஆகியவற்றின் கட்டுமான வேலைகளும் அடங்கும்.[4][5]
காடாங் பொறியியல் நிறுவனம்
இதற்கிடையில், புத்ராஜெயா வழித்தடத்தின் உயர்த்தப்பட்ட தொடருந்து பாலங்களின் கட்டுமானம் V206 உடன்படிக்கையின் கீழ் கட்டப்பட்டன. இந்தக் கட்டுமானம் PY32 செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் வழியாக மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் (UPM) PY34 யூபிஎம் எம்ஆர்டி நிலையம் வரை நீடிக்கிறது. இந்த உடன்படிக்கை மார்ச் 2017-இல் காடாங் பொறியியல் நிறுவனத்துடன் (Gadang Engineering (M) Sdn. Bhd) செய்துகொள்ளப்பட்டது. அதன் மொத்தச் செலவு RM 952.09 மில்லியன் ஆகும்.[1][6] இந்த நிலையத்தின் கட்டுமானம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) திட்டத்தின் கீழ் உள்ளது.[4]
Remove ads
செயல்பாடு
PY32 செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2023 மார்ச் 16-ஆம் திகதி திறக்கப்பட்டது. KC03 PY14 பத்து கன்டோன்மன் கொமுட்டர் நிலையம் தொடங்கி PY41 புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான பிற புத்ராஜெயா வழித்தட நிலையங்களுடன் இணைந்து இந்த நிலையமும் செயல்படத் தொடங்கியது.
அமைவு
செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் சிலாங்கூரில் உள்ள மாவட்டங்களில் ஒன்றான உலு லங்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலையின் சுங்கை பீசி சுங்கச் சாவடி;
கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை; மற்றும்
மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடம் ஆகியவற்றுக்கு அருகில் இந்த நிலையம் அமைந்துள்ளது.[7]
கட்டமைப்பு
ரேபிட் கேஎல் வெளியிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து வரைபடத்தின் அடிப்படையில், PY32 செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் தெரு மட்டத்தில், வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.[8]
PY32 செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது.[1] அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுப் பாதைகள்; நிலையத்தைச் சுற்றியுள்ள தரை மேற்பரப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொடு தொகுதிகள்; அவர்களுக்கு ஏற்ற கழிவறைகள்; சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை மின்தூக்கி பொத்தான்கள்; மின்தூக்கி பொத்தான்களில் பிரெய்லி எழுத்து பொத்தான்கள் மற்றும் சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை சேவை மையங்கள் போன்றவை அடங்கும்.[8]
பயனர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக; பொது கழிவறை வசதிகள், ஆண்கள் பெண்களுக்கான வழிபாட்டு அறைகள் (Surau), வாடிக்கையாளர் சேவை மையங்கள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. நிலையத்தின் நுழைவாயில் மட்டத்தில் உள்ள தற்சேவை பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலம் பயனர்கள் பயணச் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.[8]
Remove ads
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
இந்த நிலையத்தில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.[9]
Remove ads
பேருந்து சேவைகள்
காட்சியகம்
செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

