நய்நெத்செர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நய்நெத்செர் (Nynetjer (பிற பெயர்கள்: Ninetjer மற்றும்Banetjer) பண்டைய எகிப்தை ஆண்ட இரண்டாம் வம்சத்தின் மூன்றாம் மன்னர் ஆவார். இவர் கிமு மூவாயிரம் ஆண்டில் எகிப்தை 43 அல்லது 45 ஆண்டுகள் ஆட்சி செய்தார். சக்காரா மன்னர்கள் பட்டியல் மற்றும் துரின் மன்னர்கள் பட்டியல்களில் பார்வோன் நய்நெத்செரின் பெயர் குறுங்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் வரிசை எண் 11-இல் பார்வோன் நய்நெத்செரின் பெயர் குறுங்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவரது கல்லறை சக்காரா நகரத்தில் உள்ளது. இவரது குழந்தைகள் வாத்ஜென்ஸ் அல்லது வெக்நெக் என்து உறுதி செய்யப்படவில்லை.




Remove ads
ஆட்சிக் காலம்

எகிப்தின் ஐந்தாம் வம்சத்தினர் நிறுவிய பலெர்மோ கற்பலகையில் எகிப்தின் முதல் வம்சத்தினர் முதல் ஐந்தாம் வம்சத்தின் ஆட்சியாளர்கள் வரையிலான பெயர்கள், ஆட்சிக் காலம், கால்நடைகளின் கணக்கெடுப்பு, நைல் நதியின் வெள்ள நீர்மட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகள் குறித்துள்ளனர்.[2]
மன்னர் நய்நெத்செரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
- 7ஆம் ஆண்டில்: ஓரசு கடவுளின் மெய்காவலன். எகிப்தில் மூன்றாம் முறையாக கால்நடைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ...(rest is missing)
- 8ஆம் ஆண்டில்: கோயில் அஸ்திவாரம் அமைப்பதற்கான சடங்குகள்[2])நைல் நதியில் நீர் மட்டம் 1.57 மீட்டர் ஆக உயர்ந்தது.
- 9ஆம் ஆண்டில்:நான்காம் முறையாக எகிப்தில் கால்நடைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடைபெற்றது. நைல் நதியில் நீர் மட்டம் 1.09 மீட்டர் ஆக உயர்ந்தது.
- 10ஆம் ஆண்டில்: நைல் நதியில் நீர் மட்டம் உயர்வு 1.09 மீட்டர்
- 11ஆம் ஆண்டில்:நைல் நதியில் நீர் மட்டம் உயர்வு 1.98 மீட்டர்
- 12ஆம் ஆண்டில்:நைல் நதியில் நீர் மட்டம் உயர்வு 1.92 மீட்டர்
- 13ஆம் ஆண்டில்:ஆறாம் முறையாக எகிப்தில் கால்நடைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடைபெற்றது. நைல் நதியில் நீர் மட்டம் உயர்வு 0.52 மீட்டர்
- 14ஆம் ஆண்டில்: வடக்கு எகிப்தில் இரா கடவுளுக்கான கோயில் எழுப்பட்டது.
- 15ஆம் ஆண்டில்:ஏழாம் முறையாக கால்நடைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு.நைல் நதியில் நீர் மட்டம் உயர்வு 2.15 மீட்டர்
- 16ஆம் ஆண்டில் :வடக்கு எகிப்தில் அபிஸ் கடவுளுக்காக இரண்டாவது எருது ஓட்டம் நடைபெற்றது. நைல் நதியில் வெள்ள நீர் மட்டம் 1.92 மீட்டர்
- 17ஆம் ஆண்டில்:எட்டாவது கால்நடை கணக்கெடுப்பு. நைல் நதி வெள்ள நீர் மட்டம் 2.40 மீட்டர்
- 18ஆம் ஆண்டில்:நைல் நதி வெள்ள நீர் மட்டம் 2.21 மீட்டர்
- 19ஆம் ஆண்டில்:ஒன்பதாவது கால்நடைகளின் கணக்கெடுப்பு.நைல் நதி வெள்ள நீர் மட்டம் 2.25 மீட்டர்
- 20ஆம் ஆண்டில்: மன்னரின் இறந்த தாய்க்கான சடங்குகள், நைல் நதி வெள்ள நீர் மட்டம் 1.92 மீட்டர்
- 21ஆம் ஆண்டில்:பத்தாவது கால்நடைகளின் கணக்கெடுப்பு
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads