சக்காரா மன்னர்கள் பட்டியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சக்காரா மன்னர்கள் பட்டியல் (Saqqara Tablet), புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆடசிக் காலத்தில் (கிமு 1279 - கிமு 1213), சக்காரா நகரத்தில், 58 எகிப்திய மன்னர்கள் பட்டியல் செவ்வக வடிவலான கற்பலகையில், குறுங்கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1861-ஆம் ஆண்டில் சக்காரா தொல்லியல் களத்தில் கணடுபிடிக்கப்பட்ட இம்மன்னர்கள் பட்டியல், தற்போது எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ளது.[1]
மன்னர் இரண்டாம் ராமேசஸ் வடித்த அபிதோஸ் மன்னர்கள் பட்டியல், கர்னாக் மன்னர்கள் பட்டியல் துரின் மன்னர்கள் பட்டியல்களில், முதல் வம்ச மன்னர்கள் தொடங்கி, இறுதியாக 19-ஆம் வம்ச மன்னர்கள் வரை பெயர்கள் பொறிக்கப்பட்டது. ஆனால் சக்காரா மன்னர்கள் பட்டியலில் 19-ஆம் வம்ச மன்னர்கள் பெயர்கள் தொடங்கி, இறுதியாக முதல் வம்ச மன்னர்கள் பெயர்கள் வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் இரண்டாம் இடைநிலைக் காலத்தில் எகிப்தை ஆண்ட எகிப்தியர் அல்லாத ஐக்சோஸ் போன்ற இன மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்படவில்லை. மேலும் எகிப்தின் இறை நம்பிக்கையை மீறி ஆட்சி செய்த எகிப்திய மன்னர் அக்கெனதெனின் பெயரும் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. [2]
செவ்வக வடிவிலான கற்பலகையில், 58 மன்னர்களின் பெயரும் குறுங்கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. அவைகளில் பல மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள்து. [3] [4]

Remove ads
சக்காரா மன்னர்கள் பட்டியல்
சக்காரா மன்னர்களின் பட்டியலில் 19-ஆம் வம்ச மன்னர்களின் பெயரிலிருந்து, முதல் வம்ச மன்னர்கள் பெயர் வரை 58 பார்வோன்கள் பெயர்கள் குறிக்கப்பட்டடுள்ளது. இப்பட்டியலை மேல் வரிசையின் வலது புறத்திலிருந்து, கீழ் வரிசையின் இடது புறமாக படிக்க வேன்டும்.
Remove ads
புது எகிப்து இராச்சியத்தினரின் பிற மன்னர்கள் பட்டியல்
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads