பரசுராமேஷ்வரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

பரசுராமேஷ்வரர் கோயில்map
Remove ads

பரசுராமேசுவரர் கோவில் (Parashurameshvara Temple) இந்திய மாநிலமான ஒடிசாவின் தலைநகரமான புவனேசுவரத்தில் அமைந்துள்ளது. பொ.ஊ. 7–8ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டை ஆண்ட சைலோத்பவ வம்ச மன்னர்கள், சிவபெருமானுக்காக அர்பணித்த கோவிலாகும். இக்கோவில் இந்துக் கோயில் கட்டிடக்கலையில், பொ.ஊ. 650ல் மணற்கற்களால் கட்டப்பட்டதாகும்.[1][2][3]

விரைவான உண்மைகள் பரசுராமேசுவரர் கோவில், அமைவிடம் ...

பரசுராமர் இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமான் அருளைப் பெற்றதால், இக்கோவிலுக்கு பரசுராமேசுவரர் கோவில் எனப்பெயராயிற்று. இக்கோவிலை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் நிர்வகித்து பராமரிக்கிறது.[4][5]

Remove ads

கோயில் அமைப்பு & சிற்பங்கள்

40.25 அடி உயரம் கொண்ட கோவில் கோபுரங்கள், பல விமானங்களுடன் கூடியது. இக்கோவிலின் கருவறையின் எதிரில் பெரிய முகப்பு மண்டபம் அமைந்துள்ளது. கோவில் கோபுரத்தில் சாக்த சமயத் தெய்வங்களான பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சிற்பங்கள் உள்ளது.[2][6]

Thumb
கோவிலில் சிவலிங்கம்

பொ.ஊ. 11–12ம் நூற்றாண்டில் இசுலாமிய மன்னர்களின் படையினரால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது.[7] 1903ல் இக்கோவில் மறுசீரமைத்துக் கட்டப்பட்டது.[6][8]

Thumb
கோவில் கோபுரத்தில் ஆறு கைகள் கொண்ட மகிசாசூரமர்தினியின் சிற்பம்

இக்கோவிலில் மகிசாசூரனை வதைத்த ஆறு கைகள் கொண்ட மகிசாசூரமர்தினியின் சிற்பம் உள்ளது. இக்கோவிலின் பிள்ளையார் மற்றும் வீரபத்திரர் சிற்பங்களுக்கு இடையே சப்தகன்னியர் சிற்பங்கள் உள்ளது. கோவில் சுவர்களில் எட்டு கைகள் கொண்ட நாட்டியமாடும் அர்த்தநாரீஸ்வரர், கங்கா தேவி, யமன் மற்றும் யாமியின் சிற்பங்கள் உள்ளது.[2][6] மேலும் கோவிலின் தெற்குச் சுவரில் விஷ்ணு, இந்திரன், சூரியன் மற்றும் மயில் வாகனத்துடன் கூடிய முருகன் போன்ற தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளது.[6][9]

மேலும் கையிலை மலையை தூக்கிய இராவணனுக்கு அருளும் சிவபெருமான் - பார்வதி சிற்பம்,[10]தாண்டவமாடும் நடராசர் சிற்பங்களும் உள்ளது. [11] [12]

கோவில் மண்டபத் தூண்களில் பூக்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது. கோவில் கோபுரத்தில் நாகர்கள் மற்றும் நாகினிகளின் சிற்பங்கள் உள்ளது.

Thumb
பரசுராமேசுவரர் கோவில் சிற்பங்கள்
Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads