பாக்கியலட்சுமி (நடிகை)

நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாக்யலட்சுமி (பாக்யஸ்ரீ) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நாயகி மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகை ஆவார்.[1] இவர் 1980 முதல் 2000 வரை மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் ஒரு முக்கிய கதாநாயகியாக இருந்தார்.[2] இவர் தமிழ், மலையாளம், தெலுங்கில் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார்.[3] இவரது முதல் படம் 1982 ஆம் ஆண்டில் தமிழில் தேவின் திருவிளையாடல் . இவரது முதல் மலையாளத் திரைப்படம் 1983 இல் அஸ்திரம் .[4]

விரைவான உண்மைகள் பாக்கியஸ்ரீ என்கிற பாக்கியலட்சுமி, பிறப்பு ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் ஒரு பிராமண குடும்பத்தில் தமிழ்நாட்டின் சென்னையில் சிவரம ஐயர் மற்றும் ராஜாமணி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். இவரது தந்தை பாலக்காட்டு தமிழ் ஐயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தாய் தமிழ்நாட்டின் காரைக்குடியைச் சேர்ந்த செளராஷ்டிர பிராமணர். இவருக்கு பொறியாளர் ரோகித் குமார் என்ற தம்பி உள்ளார். சர்ச் பார்க் பிரசண்டேஷன் கான்வென்ட்டில் பயின்றார். இவர் 10 ஆம் வகுப்பு வரை தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார், அதன்பிறகு இவர் திரைப்பட நடிப்பில் கவனம் செலுத்தியதால் படிப்பை தொடர இயலவில்லை. இவர் தனஞ்சயன்களிடமிருந்து பாரம்பரிய நடனம் கற்றுக்கொண்டார்.

இவர் 2001 ஏப்ரல் 14, அன்று குஜராத்தைச் சேர்ந்த மலையாளியான திரைப்படத் தயாரிப்பாளர் வாசுதேவனை மணந்தார். அவர் ஆடை வணிகத்தில் இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு இவர் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்று குஜராத்தில் 15 ஆண்டுகள் குடியிருந்தார். தம்பதியருக்கு விஸ்வாஜித் என்ற மகன் உள்ளார். இவர்கள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். தற்போது இவர் தமிழ் தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார்.[5]

Remove ads

திரைப்படவியல்

மலையாளம்

  • அஸ்திரம் (1983)
  • எஞ்சின் நீ மரக்கும் (1984)
  • பாவம் பூர்ணிமா (1984)
  • பாவம் குரூரன் (1984)
  • மனசரியாதே (1984)
  • இத்திரி பூவே சுவண்ணாபூ (1984)
  • பரன்னு பரன்னு பரன்னு (1984)
  • ஜனகேய கோடதி (1985)
  • கூடும் தேடி (1985)
  • இடனிலங்கள் (1985)
  • பொன்னு (1985)
  • ஏழுமுதல் ஒன்பதுவரே (1985)
  • நிஜன் பிரன்ன நாட்டடில் (1985)
  • உயரம் நிஜான் நாடாகே (1985)
  • பச்சா வெளிச்சம் (1985)
  • லவ் ஸ்டோரி (1986)
  • ஆலோருங்கி அரங்கோருங்கி (1986)
  • நிறமுள்ள ரவுல்கள் (1986)
  • சுரபி யாமங்கள் (1986)
  • அருந்திவிட் சோடிக்கன் (1986)
  • காபரே டான்சர் (1986)
  • நிரபேதங்கள் (1987)
  • மங்கல்யாசார்த்து (1987)
  • அக்னிச்சிறகுள்ள தும்பி (1988)
  • அசோகுண்டே அஸ்வதிக்குக்குட்டிக்கு (1989)

தமிழ்

தெலுங்கு

  • வந்தே மாதரம் (1985)
  • அசோக சக்ரவர்த்தி (1989)
  • நியாம் கோசம் (1988)
  • ராவ் காரி இன்ட்லோ ரவுடி (1990)
  • பண்டிரிமஞ்சம் (1991)
  • ரேப்பட்டி கொடுக்கு (1992)
  • புருண்டவனம் (1993)
  • ஸ்ரீ ராமுலையா (1998)

கன்னடம்

  • ருத்ரா தண்டவா (1992)
Remove ads

தொலைக்காட்சி தொடர்

மேலதிகத் தகவல்கள் தலைப்பு, ஆண்டு ...

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads