அப்போட்டாபாத் மாவட்டம்
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாண மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அப்போட்டாபாத் மாவட்டம் (Abbottabad District) (ضِلع ایبٹ آباد}, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் அப்போட்டாபாத் ஆகும். [3] இம்மாவட்டம் 1,969 சகிமீ பரப்பளவு கொண்டது.
Remove ads
எல்லைகள்
அப்போட்டாபாத் மாவட்டத்தின் வடக்கில் மன்செரா மாவட்டம், கிழக்கில் முசாஃபராபாத் மாவட்டம், மேற்கில் ஹரிபூர் மாவட்டம் மற்றும் தெற்கில் ராவல்பிண்டி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
வரலாறு
பெயர்க் காரணம்
பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் ஹசாரா கோட்டத்தின் முதல் ஆணையாளராக பணிபுரிந்த பிரித்தானிய இராணுவ மேஜர் ஜேம்ஸ் அப்போட் நினைவாக இம்மாவட்டத்திற்கு அப்போட்டாபாத் என பெயரிடப்பட்டது.[4] தற்போதைய அப்போட்டாபாத் மாவட்டம், முன்னர் ஹசாரா மாவட்டத்தில் ஒரு வருவாய் வட்டமாக இருந்தது.
புவியியல்
இம்மாவட்டத்தின் கிழக்கில் பாயும் ஜீலம் ஆறு, அப்போட்டாபாத் மாவட்டத்தையும், பூஞ்ச் மாவட்டத்தையும், இராவல்பிண்டி மாவட்டத்தையும் பிரிக்கிறது. மலைக்காடுகள் மிக்க இம்மாவட்டத்தில் தோர் மற்றும் ஹர்ரோ ஆறுகள் பாய்கிறது.
மக்கள்தொகை பரம்பல்
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2,16,534 குடியிருப்புகள் கொண்ட அப்போட்டாபாத் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 13,32,912 ஆகும். அதில் 6,77,570 ஆண்கள் ; பெண்கள் 6,55,281 ஆகவும்; மூன்றாம் பாலித்தவர்கள் 61 ஆகவுள்ளனர்.[5]இம்மாவட்டத்தில் இந்துகோ மொழியை 94.58% மக்கள் பேசுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம்

அப்போட்டாபாத் மாவட்ட்டம் அப்போட்டாபாத் மற்றும் ஹவேலியன் என இரண்டு வருவாய் வட்டங்களும்[6] இமமாவட்டத்தில் நவன்செர் நகராட்சியும், 51 ஒன்றியக் குழுக்களும் உள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் ஹவேலான் இராணுவப் பாசறையும் உள்ளது.
அரசியல்
கைபர் பக்துன்வா மாகாண சட்டமன்றத்திற்கு இம்மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[7]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads