இந்திய மா
ஒரு தாவர இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய மா (Mangifera indica) என்பது பொதுவாக மாம்பழம் என அழைக்கப்படும் சுமாக் மற்றும் நஞ்சுப் படர்க்கொடி குடும்பமான அனகார்டியாசியாவிலைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது இந்தியத் துணைக்கண்டத்தை பூர்வீகமாக கொண்டது. உலகின் பிற வெப்பதான பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான சாகுபடி வகைகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரு பெரிய பழமரமாகும். இது சுமார் 30 மீட்டர் (100 அடி) உயரம் மற்றும் கிளைகளோடு சுமார் 30 மீட்டர் (100 அடி) அகலத்துக்கு விரியக்கூடியது, மேலும் இதன் அடிமரத்தின் சுற்றலவானது 3.7 மீட்டர் (12 அடி) க்கும் அதிகமாக வளரும் திறன் கொண்டது.[3]



இது இந்தி துணைக்கண்டத்தில் சுமார் கி.மு 2000 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து பயிரிடப்படுகிறது.[4] மாம்பழமானது கிமு 400-500 காலக்கட்டத்தில் கிழக்காசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டில் பிலிப்பைன்சுக்கும், 16 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலுக்குமு போர்த்துகீசிய ஆய்வாளர்களால் கொண்டு வரப்பட்டது.[5] இந்த இனங்களானது 1753 ஆம் ஆண்டில் கரோலஸ் லின்னேயசால் தாவரவியலில் ஆய்வு செய்யப்பட்டு முதலில் பெயரிடப்பட்டது.[6] மாம்பழமானது இந்தியாவின் தேசிய பழம் மேலும் பாக்கித்தான், பிலிப்பீன்சின் தேசிய மரமாகும்.[7]
இம்மரம் தமிழ் நாட்டில் பலவிடங்களில் பயிரிடப்படுகிறது. பல்வேறு வகைகள் ஒட்டு முறையால் வளர்க்கப்படுகின்றன. ஏறக்குறைய 4000 அடி உயரமுள்ள மலைப்பாங்கிலும் இம்மரம் வளரும். தேமா மரம் அனகார்டியேசி என்ற தாவரக் குடும்பத்தின் பாற்படும். இதில் 73 பேரினங்களும், ஏறக்குறைய 600 இனங்களும் உள்ளன. தேமா மரத்தை உள்ளிட்ட மாஞ்சிபேரா (Mangiferச) பேரினங்களில் 30 சிற்றினங்கள் இந்தியாவிலும் மலேசியாவிலும் வளர்கின்றன.
Remove ads
வேதியியல் கூறுகள்
மங்கிஃபெரின் (மருந்தியல் ரீதியாக செயலில் உள்ள ஹைட்ராக்சிலேட்டட் சாந்தோன் சி-கிளைகோசைடு) என்னும் வேதிப்பொருள் மாமரத்தின் கொழுந்து இலைகள் (172 கிராம் / கிலோ), மரப்பட்டை (107 கிராம் / கிலோ) மற்றும் முதிர்ந்த இலைகளிலிருந்து (94 கிராம் / கிலோ) அதிக செறிவுகளில் பிரித்தெடுக்கப்படுகிறது.[8] இதன் பழத் தோலில் ஒவ்வாமை உள்ள யூருஷியோல்கள் உள்ளன. இது ஒவ்வாமை உள்ள சிலருக்கு தோல் அழற்சிக்கு தூண்டுதலாக இருக்கும். இந்த ஒவ்வாமையானது பொதுவாக அமெரிக்காவில் நஞ்சுப் படர்க்கொடி மற்றும் நச்சு ஐவி போன்ற அனகார்டியாசி குடும்பத்தைச் சேர்ந்த பிற தாவரங்களின் மூலமாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது.[9]
Remove ads
பாரம்பரிய மருத்துவம்
இது ஆயுர்வேதத்தில், ஒரு ராசயன சூத்திரத்தில் சில நேரங்களில் சாத்தாவாரி (அஸ்பாரகஸ் ரேஸ்மோசஸ்) மற்றும் சீந்தில் (டினோஸ்போரா கார்டிபோலியா) ஆகியவற்றுடன் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய மருத்துவத்தில், மா மரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மாறுபட்ட மருத்துவ பண்புகள் கூறப்படுகின்றன.[2]
மரம்
இந்த மரத்தின் மரக்கட்டைகளைவிட இவற்றின் பழங்களே பிரபலமானது. இருப்பினும், மா மரங்களானது அவற்றின் ஆயுட்காலம் முடிந்தவற்றையோ, சரியான பழக்காய்ப்பு இல்லாதவற்றையோ மரக்கட்டைகளாக ஆக்கப்படுகின்றன. இந்த மரங்களானது பூஞ்சை மற்றும் பூச்சியிலிருந்து சேதமடைய வாய்ப்புள்ளது.[10] இதன் மரங்களானது உக்குலேல்ஸ்[10] போன்ற இசைக்கருவிகள், ஒட்டுபலகை குறைந்த விலை மரச்சாமான்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.[11] தொடர்பு தோல் அழற்சியை ஏற்படுத்தக்கூடிய பினோலிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் இந்த மரம் அறியப்படுகிறது.[12]
தமிழிலக்கியத்தில்
சங்கத் தமிழிலக்கியத்தில் தலை சிறந்ததெனக் கருதப்படும் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் தேமா, கலிமா என்று இரு மா மலர்களைக் கூறுகின்றார்.
"செங்கொடுவேரி தேமா மணிச்சிகை" -குறிஞ். 64
"கரந்தை குளவி கடிகமழ் கலிமா" -குறிஞ் 76
இவ்வடிகளிலுள்ள 'மா' விற்கு நச்சினார்க்கினியர் முறையே 'தேமாம்பூ' என்றும், விரைகமழத் தழைத்த மாம்பூ என்றும் உரைகண்டார். இவையிரண்டும் தேமாம்பூவினையே குறிக்கும் எனல் பொருந்தாது. என்னை? கபிலர் கூறியது கூறார் ஆகலின் என்க. ஆகவே, தேமா' என்பது இனிய மாவினையும், கலிமா என்பது புளிமாவினையும் குறித்தல் கூடும். எனினும் இது சிந்திக்கற்பாலது. சங்கத் தமிழில் தேமாவைப்போல, புளிமாவைப் பற்றிய குறிப்புகள் காணுதற்கில்லை.
தேமாவும் புளிமாவும் வெவ்வேறு தாவரக் குடும்பங்களைச் சார்ந்த மரங்களாகும். தேமாவை மாஞ்சியெரா இன்டிகா (Mangifera indica, Linn.) என்றும், புளிமாவை அவெர்கோயா பிலிம்பி (Averrhoa bilimbia, Linn.) என்றும் கூறுப. தேமா மரம் அனகார்டியேசீ (Amacardiaceae) என்ற தாவரக் குடும்பத்தையும், புளிமா மரம் ஆக்சாலிடேசீ' (Oxalidaceae) என்ற தாவரக் குடும்பத்தையும் சார்ந்தவை.
மாம்பூ கொத்துக் கொத்தாகக் கணுக்குருத்தாகவும் நுனிக் குருத்தாகவும் அரும்பிப் பூக்கும். மிகச்சிறிய இப்பூவில் நான்கு அல்லது ஐந்து புறவிதழ்களும். நான்கு அல்லது ஐந்து அகவிதழ்களும் உள்ளன. ஒன்று முதல் ஐந்து தாதிழைகள் உண்டெனினும் ஒன்று அல்லது இரண்டில் மட்டும் தாது விளைந்து நிற்கும். தாதுப்பையை ஒட்டி நான்கு அல்லது ஐந்து தேன் சுரப்பிகள் இருத்தலின் மலர்களில் வண்டினம் சூழ்ந்து முரலும். இதனை,
'காமர் மாஅத்துத் தாதலர் பூவின் வண்டு வீழ்பு அயருங் கானல் ' -குறுந் 306 : 4-5
என்று கூறுவர். பூவின் கரு ஒர் குலறையினது. பெரிதும் பிற மகரந்தச் சேர்க்கையினால்தான் கருமுதிர்ந்து காயாகும். மரத்தில் ஒருவகையான பால் (Latex) உண்டாகும். மாவடுவில் இப்பால் மிகுதியாகப் பிலிற்றும். இரும்பினாலாய அரிவாள் கொண்டு மாவடுவை நேராகப் பிளந்து சிறிது நேரங்கழித்துப் பார்த்தால், மாவடுவின் விதைப் பகுதி முழுவதும் கறுத்தும், சதைப்பகுதி வெண்ணிறமாகவும். கண் விழியை ஒத்து மிக அழகாகவும் காணப்படும். இகனை வண்ணமும் வடிவுங்கருதி மகளிர் கண்ணுக்கு உவமிப்பர்.
இளமாங்காய்ப் போழ்ந்தன்ன கண்ணினால் என்னெஞ்சம்
களமாக் கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ -கலித். 108:28-29
என வருவன காண்க. இரும்புக் கருவிகளைக் கொண்டு மாவடுவை அரியும்போது வடுவில் உள்ள பாலில் காணப்படும் காலிக் அமிலம் ( Gallic acid). ஸ்டீரிக் அமிலம் (Stearic acid) என்ற அமிலங்கள் இரும்பில் பட்டவுடன் ஒருவகை "மைப் பொருளாகிவிடும். இதனைப் பிரான்சு நாட்டு வேதி நூலறிஞர் கண்டு, பல சோதனைகளைச் செய்துள்ளார். மாவடுவின் தோலிலும் இதே பால் இருத்தலின் அப்பகுதியும் கறுப்பாகி. கண்ணுக்கு எழுதிய அஞ்சனம் போலத் தோன்றும்.[13]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
