கங்காளி தொல்லியல் மேடு

உத்திரப்பிரதேச தொல்லியல் களம் From Wikipedia, the free encyclopedia

கங்காளி தொல்லியல் மேடுmap
Remove ads

கங்காளி தொல்லியல் மேடு (Kankali Tila or Kankali mound or Jaini mound) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் தலைமையிடமான மதுரா நகரத்தில் அமைந்த சமணத் தொல்லியல் மேடு ஆகும். செர்மானிய தொல்லியல் அறிஞர் அலோயிஸ் அன்டன் ஃபூரர் என்பவர் இவ்விடத்தில் 1890-1891களில் அகழாய்வு செய்த போது சமணச் சிற்பங்கள், தூண்கள் மற்றும் கல்வெட்டுக்களைக் கண்டெடுத்தார்.[3] கங்காளி தொல்லியல் மேடு 500 அடி உயரம், 350 அடி அகலத்தில் செவ்வக வடிவம் கொண்டிருந்தது. [3]

விரைவான உண்மைகள் கங்காளி தொல்லியல் மேடு ...
Thumb
மதுரா பகுதிகளை ஆண்ட |மேற்கு சத்திரபதி மன்னர் சோடசாவின் 42-வது ஆண்டு ஆட்சிக் காலத்தைக் குறிக்கும் கங்காளி சிற்பக் கற்பலகை கல்வெட்டு [1]
வடக்கு சத்திரபதி மன்னர் சோடசாவின் கல்வெட்டு[2]
Thumb
About OpenStreetMaps
Maps: terms of use
1000m
1090yds
மதுராவில் கங்காளி தொல்லியல் மேட்டின் அமைவிடம்

கங்காளி தொல்லியல் மேட்டை அகழாய்வு செய்த போது கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி 12-ஆம் நூற்றாண்டு வரையிலான, சமணத்தில் திகம்பரர்-சுவேதாம்பரர் பிரிவுகள் உண்டாவதற்கு முந்தைய சமண சமயத்தின் அழகிய சிற்பங்கள், கல்வெட்டுக்கள், தூண்கள்,[4]சிலைகள், அயாகாபட்டா எனும் சமணக் கல் சிற்பப் பலகை போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கங்காளி தொல்லியல் மேட்டில் கண்டிபிடிக்கப்பட்ட சமணத் தொல்லியல் பொருட்கள் மதுரா அரசு அருங்காடசியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Thumb
1889-இல் கங்காளி தொல்லியல் மேடு, மதுரா
Remove ads

கங்காளி தொல்லியல் மேட்டில் கிடைத்த சமணத் தொல்பொருட்கள்

கங்காளி தொல்லியல் மேட்டில் கிடைத்த சமணத் தொல்பொருட்கள் அனைத்தும் மதுரா அரசு அருங்காடசியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவைகள்:

Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads