கடலூர் துறைமுகம் சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடலூர் துறைமுகம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Cuddalore Port Junction railway station, நிலையக் குறியீடு:CUPJ) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர் நகரில் அமைந்துள்ள, ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், திருச்சிராப்பள்ளி கோட்டத்துக்கு உட்பட்டது. இது சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடத்தில் அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
இந்த சந்திப்பு சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடத்தில் உள்ளது. இங்கிருந்து மூன்று தொடருந்து பாதைகள் பிரிகின்றன.
- விழுப்புரம் சந்திப்பை நோக்கி செல்லும் பாதை.
- மயிலாடுதுறை சந்திப்பை நோக்கி செல்லும் பாதை.
- விருத்தாச்சலம் சந்திப்பை நோக்கி செல்லும் பாதை.
சரக்கு போக்குவரத்து
கடலூர் துறைமுகம் சந்திப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து 1985 ஆம் ஆண்டு வரை சரக்கு போக்குவரத்து நடைபெற்று வந்தது. கடலூர் துறைமுகத்தில் வந்து இறங்கும் உரம், கோதுமை உள்ளிட்ட பொருள்கள் தொடருந்து வேகன்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன.
கடலூர் துறைமுகம் சந்திப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கப்பல்களில் வந்து இறங்கும் பொருள்கள் லாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு போகப்பட்டன. இதில் பெருத்த சிரமங்கள் இருந்ததால், கப்பல் போக்குவரத்தும் நின்று போயிற்று. பின்னர் செப்டம்பர் மாதம் 2012 ஆம் ஆண்டு மீண்டும் சரக்கு போக்குவரத்து தொடங்கப்பட்டது.
Remove ads
முக்கியத்துவம்
பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட ஆறாம் கட்ட அறிவியல் கண்காட்சி விரைவுவண்டி தெற்கு இரயில்வேயின் கடலூர் துறைமுகம் சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்று செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads