சந்திரயான்-2
நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரயான்-2 (Chandrayaan-2)[13][14] என்பது சந்திரயான்-1 இற்குப் பின்னர் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் ஆகும்.[15] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம்,[16][17] ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019, சூலை 22 அன்று நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.[8][9][18] இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையூர்தி(நடமாடும் ஆய்வகம்) ஆகியன உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டமைக்கப்பட்டன.[19] இதன் முதன்மையான அறிவியல் குறிக்கோள் நிலா மேற்பரப்பு உட்கூற்று வேறுபாடுகளை ஆய்வு செய்து படம் வரைதலும் நிலாத் தண்ணீர் செறிவாக அமையும் இடங்களைக் கண்டறிதலும் ஆகும்.
தரையூர்தி நிலாவின் மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளவும், தான் திரட்டிய தரவுகளைச் சுற்றுக்கலன், தரையிறங்கியூடாக புவிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது. சுற்றுக்கலன் ஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கி.மீ. சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.[6][20][21] 2019 செப்டம்பர் 7 இல் நிலாவில் நிலநேர்க்கோட்டின் கிட்டத்தட்ட 70° தெற்கே மன்சீனசு சி, சிம்பேலியசு என் ஆகிய இரு குழிகளிடையேயுள்ள மேட்டுச்சமவெளியில் சந்திரயான்-2 இன் தரையிறங்கியும், உலாவியும் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
என்றாலும், 2019, செப்டம்பர் 6 இல் தரையிறங்க முயலும்போது, தன் திட்டமிட்ட தடவழியில் இருந்து விலகியதால் அது நிலாத்தரையில் மொத்தியநிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே, தரையிறங்கியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கம் செய்ய இயலவில்லை.இசுரோ பெற்ற பழுது பகுப்பாய்வு அறிக்கையின்படி, மொத்தல் சிறு மென்பொருள் வழுவியதால் நேர்ந்ததாகக் கூறப்பட்டது. இதனால், இசுரோ 2023 இல் சந்திரயான்-3 வழியாக நிலாத்தரையில் மென்மையான தரையிறக்கத்துக்கு மறுமுயர்சி செய்ய முடிவெடுத்தது.
Remove ads
வரலாறு
சந்திரயான் -1 இன் தொடர்திட்டமான சந்திரயான் -2 திட்டதில் ஒருங்கிணைந்து செயல்ப்பட, 2007 நவம்பர் 12 இல் இராசுகாசுமோசு பேராளர்களும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனப் பேராளர்களும் இருமுகமைகளுக்கும் இடையில் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்[22][23] இசுரோ வட்டணைக்கல்ம், தரையூர்தி இரண்டுக்கும் முதன்மைப் பொறுப்பையும், இராசுகாசுமோசு தரையிறங்கியை தருவதாகவும் ஒப்புக்கொல்லப்பட்டது. இந்திய அரசு, 2008, செப்டம்பர் 18 இல் இந்திய முதன்மை அமைச்சர் மன்மோகன் தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சர் மன்றத்தில் இத்திட்டத்துக்கான ஒப்புதலை அளித்தது.[24] விண்கலத்தின் வடிவமைப்பு, 2009 ஆகத்தில் இருநாடுகளின் அறிவியலாளர்களின் மீள்பார்வைக் கூட்டத்தில் முடிக்கப்பட்டது.[25]
இசுரோ திட்டமிட்டபடி, சந்திரயான் -2 இன் அறிவியல் கருவிகளை இறுதிப்படுத்தி இருந்த போதும்,[26] உருசியா தரையிறங்கியைக் காலத்தே உருவாக்காததால், 2013 ஜனவரியில் திட்டம் தள்ளிவைத்து 2016 ஆம் ஆண்டுக்கு மீள்திட்டமிடப்பட்டது.[27][28][29] செவ்வாய்க்கான போபோசு கிரன்ட்டுத் திட்டம் பழுதுற்றதால் 2012 இல் மறுபடியும் சந்திரயான் -2 விண்கலத்திட்டத்துக்கான தரையிறங்கி கட்டுமானம் காலத் தாழ்த்தமானது. ஏனெனில், போபோசு கிரன்ட்டுத் தொழில்நுட்பச் சிக்கல்கள் சந்திரயான்-2 வின் தரையிறங்கியிலும் பயன்படுத்தியுள்லதால் அவற்ற மீள்பார்வையிட வேண்டியதாயிற்று.[28] உருசியா 2015 இலும் தரையிறங்கியைத் தர இயலாமையைத் தெரிவித்ததும், நிலாத் திட்டத்தைத் தனியாகவே உருவாக்கி நிறைவேற்றத் திட்டமிட்டது.[27][30] சந்திரயான்-2 திட்டத்துக்குப் புதிய காலநிரல் வகுக்கப்பட்டதாலும், 2013 இல் செவ்வாய்த் திட்ட ஏவுதலுக்கான வாய்ப்புச் சாளரம் ஏற்பட்டதாலும் பயன்படுத்தாத சந்திரயான்-2 விண்கல வன்பொருட்கள் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது.[31]
முதலில் 2018 மார்ச்சில் விண்கல்ம் ஏவத் திட்டமிடப்பட்டது. மேலும், ஏவூர்தியில் சில ஓர்வுகள் செய்ய, 2018 ஏப்பிரலில் இருந்து அக்தோபர் வரை காலந்தாழ்த்தப்பட்டது.[32][33] 2019, சூன் 19 இல் நடந்த நான்காம் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மீள்பார்வைக் கூட்டத்தில்லுருவமைப்பிலும் தரையிறங்கும் வரிசையிலும் நடைமுரைப்படுத்தலில் பல மாற்றங்கள் திட்டமிடப்பட்டதால் ஏவுதல் 2019 முதல் அரையாண்டுக்கு தள்ளிப் போக நேர்ந்தது.[34] 2019 பிப்ரவரியில் ந்டந்த ஆய்வுகளில் தரையிறங்கியின் கால்கலில் இரண்டு சிறுசிதைவுக்கு உள்ளானது.[35]
சந்திராயன்-2, 2019 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் அதிகாலை 2.51 மணிக்கு சிறி அரிகோட்டாவில் உள்ளசத்தீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவத் திட்டமிடப்பட்டிருந்தது. விண்கலம் ஏவப்பட 56 மணித்துளிகள் இருந்த போது, சந்திராயன்-2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சந்திராயனை ஏவும் ஏவுதளக் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் இவ்வாறு நிகழ்ந்தது எனவும் அறிவியல் அறிஞர்கள் தெரிவித்தனர். பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், சூலை 22 ஆம் நாள் பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.[36][37]
சந்திரயான்-1 செயற்கைகோளில் இருந்த சூரியமின் பலகம் பழுதடைந்ததால் வரையறுத்த 100 கி.மீட்டருக்கு பதில் 200 கி.மீ. உயரத்தில் சந்திரயான் -1 சுற்றிக் கொண்டிருந்தது. எனினும் 95% பணிகளை அது முடித்துவிட்டதாக `இசுரோ' தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சந்திரயான் 2 திட்டத்துக்கான செயற்கைக்கோள உருவாக்கும் பணிகள் முடிவடைந்தன.
இத்திட்டப் பணிகளின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.
Remove ads
வடிவமைப்பு
சந்திரயான் எனும் சமக்கிருதச்(இந்திச்) சொல்லின் பொருள் "நிலாக்கலம்" என்பதாகும்.[38][39] சந்திரயான்-2 விண்கலம்(3850கிகி) புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவூர்தி மார்க் III (ஜி எசு எல் வி எம்கே III)ஏம்1 ஏவூர்தியால் ஆந்திரப் பிரதேசம், சிறி அரிகோட்டா, சத்தீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.[9][40][41][42] 2019 சூனில் இத்திட்ட செலவு ஒதுக்கீடு₹ 9.78 பில்லியன்(978 கோடி) (தோராயமாக 141 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்; இதில் ₹ 6 பில்லியன் விண்வெளி வன்கலனுக்கும் ₹ 3.75 பில்லியன் ஏவூர்தியின் ஏவுதல் செலவுக்கும் ஒதுக்கப்பட்டது.[43][44] சந்திரயான்-2 முதலில் புவிசுற்றிவரும் வட்டணையில் 170 கி.மீ. புவியண்மை புள்ளியிலும் 40400 கி.மீ. புவிச்சேய்மைப் புள்ளியிலும் நிலைநிறுத்தப்பட்டது.[45]
சுற்றுகலன்

சந்திரயான்-2 சுற்றுகலன் 100 கி.மீ. உயரத்தில் நிலா முனைய வட்டணையில் சுற்றிக் கொண்டிருக்கும்.[46] இதில் 8 அறிவியல் கருவிகள உண்டு; அவற்றில் இரண்டு சந்திரயான்-1 இல் இவற்றில் இரண்டு மேம்படுத்திய வகையின. தோராயமான ஏவுதலுக்கான பொருண்மை(நிறை) 2379 கிகி.[2][3][26][47] சுற்றுகலன் உயர்பிரிதிறன் ஒளிப்படக் கருவி (OHRC) தரையிறங்கும் இடத்தின் உயர்பிரிதிற நோக்கீடுகளை, சுற்றுகலனில் இருந்து தரையிறங்கி பிரிவதற்கு முன், எடுத்தது.[1][46] சுற்றுகல்ன் கட்டமைப்பு இந்துத்தான் வானூர்துக் குழுமத்தால(HAL) செய்து 2015 சூனில் வழங்கப்பட்டது.[48][49]
- அளவுகள்: 3.2 × 5.8 × 2.2 மீ [6]
- தொகு ஏவு பொருண்மை: 2,379 kg (5,245 lb) [40]
- செலுத்து எரிபொருள் பொருண்மை: 1,697 kg (3,741 lb) [4]
- உலர் பொருண்மை: 682 kg (1,504 lb)
- மின்னாக்கக் திறனளவு: 1000 வாட்[6]
- திட்டக் காலம்: ~ 7.5 ஆண்டுகள் ( திட்டமிட்ட ஓராண்டில் இருந்து துல்லியமான ஏவலாலும் நிலா வட்டணையின் சரியான திட்ட மேலாண்மையாலும் நீட்டிக்கப்பட்டது.[50][51]
விக்ரம் தரையிறங்கி

திட்டத்தின் தரையிறங்கி விக்ரம் எனப்படுகிறது. (சமக்கிருதம்: विक्रम [53]) ⓘ இது இந்திய விண்வெளித் திட்டத்தை உருவாக்கிய அண்டக்கதிர் அறிவியலாளர் விக்ரம் சாராபாய்(1919–1971) நினைவாகப் பெயரிடப்பட்டது.[54] வட்டணைக்கலத்தில் இருந்து பிரியும் விக்ரம் தரையிறங்கி, தன் 800 நி முதன்மைப் பொறிகளைப் பயன்படுத்தி, நிலாவின் 30 x100 கிலோமீட்டர் தாழ்வட்டணைக்கு இறங்கும். கல அமைப்புகள் அனைத்தையும் சரிபார்த்த பின்னர், இது மென்தரையிறக்கத்துக்கு முயன்று, தரையூர்தியை இறக்கவிட்டு தரையூர்தி நிலாவினொரு பகல் நேரத்துக்கு(புவியின் 14 நாட்களுக்கு) அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். இந்த முயற்சியில் விக்ரம் மொத்தி இறங்க நேர்ந்தது.[50][55] தரையிறங்கி, தரையூர்தி இரண்டன் கூட்டுப்பொருண்மை(நிறை) தோராயமாக 1,471 kg (3,243 lb) ஆகும்.[2][3]
தரையிறங்கியின் தொடக்கநிலை உருவடிவ ஆய்வு 2013 இலேயே அகமதாபாது விண்வெளி பயன்பாடுகள் மையத்தால்(SAC) முடிக்கப்பட்டது.[27] தரையிறங்கியின் செலுத்த அமைப்பில் எட்டு 58 நி உந்துபொறிகள் விண்கல இயக்கப்பாங்கைக் கட்டுபடுத்த உள்ளன.[56] மேலும், ஐந்து 800 நி முதன்மை நீர்மப் பொறிகளும் 440 நி நீர்மப் புவிச்சேய்மைப் பொறி ஒன்றும் இசுரோவின் விண்வெளிச் செயற்கைக்கொள் மய்யத்தில் இருந்து கொணர்ந்து இணைக்கப்பட்டன]].[57][58] தொடக்கத்தில் தரையிறங்கி வடிவமைப்பு நான்கு வேக ஒடுக்கப் பொறிகளைப் பயன்படுத்தியது; ஆனால், ஓர் உந்து பொறியொன்று நடுமையத்தில் [59] தரையிறங்குமுன், நிலாவைச் சுற்றிவர வேண்டிய புதிய தேவைகளுக்காக, கூடுதலாகப் பொருத்தப்பட்டது. இந்தக் கூடுதல் பொறி தரையிறங்கும்போது எழும் நிலாத் தூசின் மேல்நோக்கிய இழுப்பை மென்தரையிறக்கத்தில் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.[42] தரையிறங்கியின் நான்கு ஒடுக்க வேகப் பொறிகள் 40% முதல் 90% வரை, 20% படிநிலையில் ஒடுக்கும் தகுதி உள்ளவை.[60]விக்ரம் 12° சாய்வு வரை பாதுகாப்பாக இறங்க வடிவமைக்கப்பட்டது.[61][62]
கல இயக்கத்தில் பின்வரும் தொழில்நுட்பங்கள் இணைந்துள்ளன:
- உயர் பிரிதிற ஒளிப்படக்கருவி, ஒருங்கொளி குத்துயர அளவி(LASA) [63]
- தரையிறங்கி இடர் கண்டு நீக்கும் ஒளிப்படக் கருவி (LHDAC)
- தரையிறங்கி இருப்பைக் காணும் ஒளிப்படக் கருவி (LPDC) [64]
- தரையிறங்கி கிடைநிலை விரைவு ஒளிப்படக் கருவி (LHVC), ஓர் 800 நி வேக ஒடுக்க முதன்மை நீர்மப் பொறி [48]
- கலப்பான்மை உந்துபொறிகள்
- கா-அலைப்பட்டை கதிரலைக் குத்துயர அளவிகள்[65][66]
- ஒருங்கொளி உறழ்வு மேற்கோள், முடுக்க அளவித் தொகுதி (LIRAP) [67] and the software needed to run these components.[1][46]
2016 அக்தோபரிலேயே தரையிறங்கியின் பொறியியல் படிமங்கள் தரை, வான் ஆய்வுகளுக்கு கருநாடக மாநிலச் சித்திரதுர்கா மாவட்டத்தின் சல்லகெரெவில் செய்யப்பட்டன. இதற்காக ஆய்விடத்தில் இசுரோ 10 நிலாவில் இருப்பவை போன்ற குழிப்பள்ளங்கள் தரையின் மேற்பரப்பில் உருவாக்கப்பட்டு தரையிறங்கியின் உணரிகளின் இடத் தேர்வு நுட்பம் சரிபார்க்கப்பட்டது.[68][69]
பிரக்யான் தரையூர்தி

திட்டத் தரையூர்தி Pragyan எனப்படுகிறது (சமக்கிருதம்: प्रज्ञान.[70][71]) ⓘ)[70][72] 27 கிகி எடையுள்ள இது விண்கலச் சூரியப் பலகச் சூரியமின் திறனால் இயக்கப்படும்.[2][3] தரையிறங்கி ஆறு சக்கரங்களின்மீது நொடிக்கு 1 செமீ வித்தில் ந்கர்ந்து 500 மீ வரைஅ செல்லும். அப்போது இது களத்தில் உரிய பகுப்பாய்வுகளைச் செய்து, தரவுகளை தரையிறங்கிக்கு அனுப்பும். அவற்றைத் தரையிறங்கி புவித் திட்டக் கட்டுபாட்டு நிலையத்துக்கு அஞ்சல் செய்யும்.[26][43][47][73][74]
தரையூர்தி நகர்ந்துசெல்ல, பின்வருபவன பயன்படும்:
- பருநிலை ஒளிப்படக் கருவிசார் முப்பருமானக் காட்சி: இரண்டு 1 மெகாபிக்செல், ஒறுநிற நகர்வணரிகள் தரையிறங்கி முகப்பில் அசூழவுள்ள தரையின் முப்பருமானக் காட்சியை த் தரைகட்டுபாட்டுக் குழுவுக்குத் தரவும், அதன்வழி தரையின் இலக்கவியல் உயர முறைமை உருவாக்கி, பாதையைத் திட்டமிடலுக்கு உதவவும் வைக்கப்பட்டுள்ளன.[75] இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், காம்பூர், தரையிறங்கி ஒளிசார்ந்து படம் எடுக்கவும் இயக்கத் திட்டமிடவும் தேவைப்படும் உட்கூருகளை வடிவமைத்து உருவாக்கித் தந்தது.[76]
- கட்டுபாடும் ஓட்டியின் இயங்கியலும்: தரையிறங்கி ஆறு சக்கரம் மீது நகரும்பெட்டித் தொங்கல் அமைப்பு உடையதாகும்; சக்கரம் ஒவ்வொன்றும் தர்சார்பு தொடியில்லாத மின்னோடிகளால் இயக்கப்படும். திசைதிருப்பல் சக்கர வேகவேறுபாட்டால் அடையப்படுகிறது அல்லது வழுக்குவகை திசைதிருப்பல் பயன்படும்.[77]பிரக்யான் தரையிறங்கியின் எதிர்பார்ப்பு இயக்க நேரம் ஒருநிலா நாள் ஆகும் அல்லது ~14 புவி நாள் ஆகும். ஏனெனில், இதன் மின்னனியல் வடிவமைப்பு உறைந்த நிலா இரவுக்கு ஏற்ப அமைக்கப்படவில்லை. என்றாலும், இதன் மின்திறன் அமைப்பு சூரிய ஆற்றல் உறங்கு/விழிப்பு சுழற்சியை நடப்பில் பின்பற்றும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், திட்டமிட்டதைவிட. மேலும் கூடுதலான நாட்களுக்கு இயங்க வாய்ப்புண்டு.[78][79]
தரையிறங்கியின் பின்னிரு சக்கரங்களில் இசுரோ சின்னமும்( கொடி-சந்திரயான்-2) இந்திய அரசு சின்னமும்( அசோகச் சக்கரம்) பொறிக்கப்பட்டுள்ளன. ஊர்தி உருண்டு நகரும்போது இவை நிலாவின் மேற்பரப்பில் தரையில் பதிந்து விடும்.[80][81]
- அளவுகள்: 0.9 × 0.75 × 0.85 m [6]
- மின் திறன்: 50 வாட்
- நகரும் வேகம்: 1 செமீ/நொடி
- திட்டக் காலம்: ~14 புவி நாள்கள் (ஒரு நிலா நாள்)
Remove ads
அறிவியல் கருவிகள்

இசுரோ அறிவியல் கருவிகளைச் சுற்றுகலனுக்கு எட்டும் தரையிறங்கிக்கு நான்கும்[40][82][83] தரையூர்திக்கு இரண்டும் எனத் தேர்வு செய்தது.[26] தொடக்கத்தில் நாசா வும் ஈசாவும் சுற்றுகலனுக்கு அறிவியல் கருவிகளைத் தந்து திட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தன;[84] என்றாலும் இசுரோ 2010 இல் எடை காரணமாக திட்டத்தில் அயல்நாட்டுக் கருவிகளை எடுத்துசெல்ல இயலாமயை தெளிவாக விளக்கியது.[85] எனினும், ஏவுதலுக்கு ஒரு மாதம் முன்பு,[86] இசுரோ நாசாவுடனும் ஈசாவுடனும் தரையிறங்கியில் ஒரு சிறிய ஒருங்கொளி மீள்தெறிப்பியைக் கொண்டுசெல்ல ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இக்கருவி மேலுள்ள செயற்கைக்கோளில் இருந்து நிலாத் தரையில் உள்ள நுண்தெறிப்பிக்கும் இடையில் உள்ள தொலைவை அளக்கும் அளக்கும்.[87][88]
சுற்றுகலன்


சுற்றுகலனில் பின்வரும் எட்டு அறிவியல் கருவிகள் உள்ளன:[40][50][83]
- சந்திரயான்-2 பெரிய பரப்பு மென் எக்சுக்கதிர் உமிழ்வு கதிர்நிரல் பதிப்பி (CLASS) கருவியை இசுரோ செயற்கைக்கோள் மையம் (ISAC) உருவாக்கியது. இது நிலாப்பரப்பின் தனிம உட்கூறைக் கண்டறிய எக்சுக்கதிர் உடனொளிர்வு கதிர்நிரலைப் பயன்படுத்துகிறது.[89]
- சூரிய எக்சுக்கதிர்க் கண்காணிப்பி (XSM) இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL), அகமதாபாது வழங்கியதாகும். இது முதன்மையாக மேற்சுட்டிய CLASS கருவிக்கு சூரிய எக்சுக்கதிர் கதிர்நிரல்களையும் அதன் செறிவு அளவீடுகளையும் உள்ளீடாகத் தந்து உதவுகிறது. இந்த அளவீடுகள் கூடுதலாக சூரிய ஒளிமுகட்டில் நிகழும் உயர் ஆற்றல் நிகழ்வுகளை ஆய்வு செய்யவும் உதவுகிறது.[26][90]
- ஈரலைவெண் L-அலைப்பட்டை, S- அலைப்பட்டை தொகு பொருள் வில்லை வீவாணி (DFSAR) விண்வெளிப் பயன்பாடுகள் மையம் (SAC) வழங்கியதாகும். இது நிலாப் பரப்பில் சில மீட்டர் தொலைவில் உள்ள பலவகை உட்கூறுகளின் தேடலுக்கு உதவும். இது பனிநீர் இருப்பையும் நிலாவின் நிலையான நிழற்பகுதிகளில் அதன் பரவலையும் உறுதி செய்ய உதவும் .[26][91] இதன் எல் அலைப்பட்டை நிலாப்பரப்பின் 5மீ ஆழம் வரை ஊடுறுவும்.[51][83]
- படிமமாக்க அகச்சிவப்புக் கதிர்நிரல் அளவி (IIRS) விண்வெளிப் பயன்பாடுகள் மையம் (SAC) வழங்கியதாகும். இது நிலாப் பரப்பில் கனிமங்கள், நீர் மூலக்கூறுகள், ஐதராக்சில் ஆகியவற்றின் இருப்பை அறிய அகல் அலைநீள நெடுக்கத்தில் நிலாப்பரப்பு படம் வரையும்.[26][92] இதன் விரிவாக்கக் கதிர்நிரல் நெடுக்கம் 0.8 μm முதல் 5 μm வரை அமையும்; முந்தைய விண்கல அறிவியல் கருவிகளின் 3 μm வரை மட்டுமேயான செயல்பாட்டை விட இது மேம்பட்ட கருவியாகும்.[51][93][94]
- சந்திரயான்-2 வளிமண்டல உட்கூற்றுத் தேட்டக் கருவி-2 (ChACE-2) [95] இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (SPL)வழங்கிய நான்முனையப் பொருண்மைப் பகுப்பாய்வி நிலாப் புறவளிமண்டலக் கோளத்தை விரிவாக ஆய்வு செய்ய உதவும்.[26]
- நிலாவின் நிலப்பட வரைவு ஒளிப்படக்கருவி-2 (TMC-2) விண்வெளிப் பயன்பாடுகள் மையம் (SAC) வழங்கியதாகும். இது நிலாக் கனிமவியல், புவியியல் ஆய்வுக்கான முப்பருமான வரைவை உருவாக்க உதவும்.[26][96]
- நிலாவைச் சுற்றியுள்ள மீஉணர்திற இயனி மண்டல, வளிமண்டல கதிரலை வானியல் ஈரலைவெண் கதிரியல் செய்முறைக்(RHAMBHA-DFRS) கருவி நிலா மின்னன்(இயனி) மண்டல மின்னன் அடர்த்தியை ஆய்வு செய்ய, இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (SPL) வழங்கியதாகும்.[97]
- வட்டணைக்கல உயர் பிரிதிற ஒளிப்படக் கருவி (OHRC) விண்வெளிப் பயன்பாடுகள் மையம் (SAC) வழங்கியதாகும். இது இறங்குமுன் இடரற்ற இடத்தில் இறங்க உதவும். நிலாப் பரப்பின் உயர் பிரிதிறந்லக்கிடப்பியல் படிமங்களையும் இலக்கவியல் குத்துயர முறைமைகளையும் உருவாக்க உதவுகிறது. இதன் முணைய வட்டணை பிரிதிறம் 0.32 மீ முதல் 100 கி.மீ. வரை அமைகிறது. இது தான் இதுவரையிலான நிலா வட்டணைக்கலத் திட்டங்களிலேயே உயர்பிரிதிறன் அமைந்த சிறந்த கருவியாகும்.[83][98][99][100]
விக்ரம் தரையிறங்கி
விக்ரம் தரையிறங்கியில் பின்வரும் நான்கு அறிவியல் கருவிகள் உள்ளன:[40][83]
- நிலாவின் நிலநடுக்கச் செயல்பாட்டு அளவி (ILSA) நுண் மின் எந்திர அமைப்புகள் சார் நிலநடுக்க அளவி LEOS அமைப்பால் நிலாவிறங்கு கள நிலநடுக்கங்களை ஆய்வதற்காக உருவாக்கப்பட்டது [101][82][102][103]
- சந்திராவின் மேற்பரப்பு வெப்ப இயற்பியல் செய்முறை (ChaSTE) வெப்ப ஆய்கருவி கூட்டாக, SPL, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL), அகமதாபாது ஆகிய அமைப்புகள் நிலாப் பரப்பின் வெப்ப இயல்புகளை அளப்பதற்காக உருவாக்கியதாகும்.[101][104]
- RAMBHA-LP இலாங்முயர் ஆய்வி SPL, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உருவாக்கியதாகும். இது நிலாத்தரை மின்ம ஊடக வேறுபாடுகளையும் அடர்த்தியையும் அளக்கும்.[101][82]
- ஒருங்கொளி மீள்தெறிப்பிகள் அணி (LRA), கோடார்டு விண்வெளி பறப்பு மையம் உருவாக்கியது; இது நிலாத் தரைத் தெறிப்பிக்கும் நிலா வட்டணைச் செயற்கைக்கோளுக்கும் இடையிலான தொலைவின் துல்லியமான அளவீடுகளை எடுக்கும்.[86][87][105][106] 22 கிகி எடையுள்ள நுண்தெறிப்பியைப் புவிசார்ந்த நிலா ஒருங்கொளி நிலையங்களில் பயன்படுத்தமுடியாது.[87]
பிரக்யான் தரையூர்தி
பிரக்யான் தரையூர்தியில் இறங்கும் இடத்தில் உள்ள செறிவான வேதித் தனிமங்களைக் கண்டறியும் இருகருவிகள் உள்ளன:[40][83]
- ஆல்பாத் துகள் எக்சுக்கதிர் கதிர்நிரல் அளவி (APXS) பெங்களூரு ஒளி மின் அமைப்பு ஆய்வகம் உருவாக்கிய கருவியாகும். இது வேதிம உட்கூற்றையும் நிலாப் பரப்பின் கனிமவியல் உட்கூற்றையும் உய்த்துணரும்.]][107][108][109]
- ஒருங்கொளி கிளர்முறிவு கதிர்நிரல்பதிப்பி (LIBS), அகமதாபாது இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் உருவாக்கியதாகும். இதுஇறங்கும் களத்தில் அமையும் நிலா மண், பாறைகளின் மகனீசியம், அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம், கால்சியம், டிட்டானியம், இரேடான் இரும்பு ஆகிய வேதித் தனிமங்களைப் பதிவுசெய்யும்.]][26][110]
CHACE2
XSM
CLASS
ILSA மெம்சு உணரித் தொகுதி
ஒருங்கொளி எதிர்தெறிப்பு அணி (LRA)
LIBS
APXS
ChaSTE
Remove ads
திட்ட விவரங்கள்
சந்திரயான்-2 அசைவூட்டம்
புவி · நிலா · சந்திரயான்-2
ஏவுதல்
சந்திரயான்-2 விண்கல ஏவுதல் முதலில் 2019 சூலை 14, 21:21 ஒபொநே (2ஒ19, சூலை 15 02:51 இ சீ நே ) ஆகத் திட்டமிடப்பட்டிருந்தது.[111] என்றாலும், 56 மணித்துளிகள் 24 நொடிகளுக்கு முன் ஒரு தொழில்நுட்ப நெருடலால் ஏவல் நிறுத்தப்ப்பட்டது; எனவே, ஏவுதல் 2019, சூலை 22 இல் மீள ஏவத் தள்ளி வைக்கப்பட்டது.[7][112] உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் ஏவல் நிறுத்தபட்டத்ற்கு காரணமாக எல்லியம்(ஈலியம்) வளிமக் குடுவையின் காம்பிணைப்புக் கசிவு அமைந்த்து என அறிவித்தன.[113][114][115] இறுதியாக, சந்திரயான்-2 LVM3 வரிசை மார்க் 1 ஏவூர்தியால் 2019 சூலை 22 09:13 ஒபொநே (14:43 இசீநே) நேரத்தில், தண்குளிர் பொறி மேல்கட்டம் எரிபொருள் தீர எரிந்துவிட்டதால், நல்ல புவிச்சேய்மையுடன் ஏவப்பட்டது.[116]
இதனால், பிறகு, திட்டத்தின் புவிமைய வட்டணையின் ஒரு புவிச்சேய்மை உயர்த்தல் கட்டம் குறைந்தது.[117][118][119] மேலும், இதன் விளைவாகd 40 கிகி விண்கல எரிபொருள் மிச்சமானது.[120] ஏவுதல் முடிந்த உடனே, ஆத்திரேலியா மீது மெதுவாக நகரும் பொருளின் மெல்லிய ஒளி மிளிர்வு பல நோக்கீடுகளால் அறியப்பட்டது. இது மேல்கட்ட முதன்மை எரித்தல் தீர்ந்த பிறகான எஞ்சிய LOX / LH2 எரிபொருள் கசிவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[121][122]
புவிமையக் கட்டம்

ஏவூர்தியால் சந்திரயான்-2 விண்கலம் 45,475 × 169 கி.மீ. வட்டணையில் தங்கவைக்கப்பட்டதும்,[117] அதன் வட்டணை படிப்படியாக கலச் செலுத்தவழி 22 நாட்கள் உயர்த்தப்பட்டு வந்தது. இதற்காக இக்கட்டத்தில் ஒரு புவியண்மைக்கான எரிப்பும் ஐந்து புவிச்சேய்மைக்கான எரிப்பும் நிகழ்த்தி, 142,975 × 276 கி.மீ. உயர் நீள்வட்டமான வட்டணைக்கு உயர்த்தப்பட்டது.[123] பிறகு, 2019 ஆகத்து 13 இல் நிலாவின் ஈர்ப்புக்குப் பெயரும் நுழைவு அடையப்பட்டது.[124] ஏவூர்தியின் தூக்குதிறன் வரம்பாலும் கலச்செலுத்த உந்துவிசை அமைப்பாலும் இத்தகைய நீண்ட புவியீர்ப்புக் கட்டத்தில் பல வட்டணை உயர்த்தும் முயற்சிகள் ஓபெர்த் விளைவைப் பயன்படுத்தி மேற்கொள்ளவேண்டிய தேவை உருவாகிறது. இதே செயற்பாங்கு சந்திரயான்-1, செவ்வாய் சுற்றுகலன் திட்டம் ஆகியவற்றின் புவியீர்ப்பில் உள்ள தடவழிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.[125]விக்ரம் தரையிரங்கியின் LI4 வொளிப்படக் கருவி 2019 ஆகத்து 3 இல் வட அமெரிக்க நிலப்பரப்பைக் காட்டும் புவியின் முதல் தொகுதி படிமங்களை எடுத்தது.[52]
நிலாமையக் கட்டம்
ஏவிய பிறகு 29 நாட்கள் கழித்து, சந்திரயான்-2 விண்கலம் நிலா வட்டணையில் 2019, ஆகத்து 20 இல், நிலா வட்டனை நுழைவு எரிப்பை 28 மணித்துளிகள் 57 நொடிகளுக்கு நிகழ்த்தடிய பிறகு, நுழைந்தது.[126] விௐஅல்த்தின் மூடௌக்குகளும் நிலாவை முனைகள் ஊடாகச் சுற்றிவரும் நீல்வட்ட வட்டணையில் வைக்கப்பட்டன. இந்த நீள்வட்ட நிலாச்சேய்மை18072 கி.மீ. ஆகவும் நிலாவண்மை 114 கி.மீ. ஆகவும் இருந்தது.[127] நான்கு வட்டணை உயரம் இறக்கும் முயற்சிகளுக்குப் பிறகு, 2019, செப்டம்பர் 1 இல்லிந்த நீள்வட்ட வட்டணை ஓரளவு வட்ட வடிவ வட்டணைக்கு மாற்றப்பட்டது. அப்போது நிலாச்சேய்மை 127 கி.மீ. ஆகவும் நிலாவண்மை 119 கி.மீ. அகவும் இருந்தது [128]:{{{3}}}[129]:{{{3}}}[130]:{{{3}}}[131]:{{{3}}} இந்த வட்டணையில் இருந்து விக்ரம் தரையிறங்கி வட்டணைக்கலத்தில் இருந்து 2019, செப்டம்பர் 2 இல் ஒபொநே 07:45 மணி நேரத்தில் பிரிந்தது.[132]
திட்டமிட்ட இறங்குகளம்

ஒவ்வொன்றும் 32×11 கி.மீ. நீள்வட்டமான இருகளங்கள் விக்ரம் இறங்க தெரிந்தெடுக்கப்பட்டன.[133] தென்முனையில் இருந்து 600 கி.மீ. தொலைவில் அமைந்த முதன்மையான இறங்குதளமான(PLS54) இன் ஆயக்கூறுகள் 70.90267°தெ 22.78110°கி ஆகும்;[134]) மாற்று இறங்குதளமாக தெரிந்தெடுத்த (ALS01) இன் ஆயக்கூறு 67.87406° தெ 18.46947°மே ஆகும். முதன்மையான இறங்குதளம் மஞ்சீனசு சி, சிம்புலியசு என் குழிப்பள்ளங்களுக்கு இடையில் அமைந்த மேட்டுச் சமவெளி ஆகும்;[135][136] இது நிலாவுக்கு அண்மைப் பக்கத்தில் உள்ளது.
விக்ரம் இழப்பு
விக்ரம் தரையிறங்கி மொத்தல் கள இருப்பிடம்
விக்ரம் தரையிறங்கி மொத்தல் களஞ் சுற்றியுள்ள எஜெக்ட்டா புலம்
மொத்தல் கள முன்னும் பின்னுமான படிமங்கள்
மொத்தல் கள முன்னும் பின்னுமான படிமங்கள்
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருந்த சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு நிலவில் தரையிறங்கத் தொடங்கியது. தரையிறங்கும் செயல்பாட்டின் முதல் பகுதி வெற்றிகரமாக முடிந்த பிறகு விண்கலம் தரையிறங்கும் வேகம் படிப்படியாகக் குறைந்தது. அதிகாலை 1.58 மணியளவில் விண்கலத்திலிருந்து எந்த ஒரு சிக்னல்களும் வரவில்லை.[137] நிலவின் தரையிலிருந்து 2 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது அதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது,என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். இது குறித்த தகவல்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.[138] தொடர்ந்து 11 நாட்களாக தகவல் தொடர்பை மீடக முயற்சித்தும் முடியவில்லை. மேலும் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் நிலவின் தென் துருவத்தில் இரவு துவங்குவதால் விக்ரம் தொடர்பை மீட்பதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.[139]
நிலாவில் இறங்கும்போது, தரையிறங்கி வெளியிட்ட கதிர்வீச்சலைப் பரப்புகள் 25 மீ கதிர்வீச்சுத் தொலைநோக்கியால் நெதர்லாந்து கதிரலை வானியல் நிறுவன ஆய்வாளர்கள் கண்கானித்துள்ளனர். டாப்பிளர் விளைவுத் தரவுகலைப் பகுப்பாய்வு செய்தபோது குறிகை இழப்பு, நொடிக்கு 50 மீ வேகத்துக்கு அணுக்கமான வேகத்தில் தரையிறங்கி நிலாத்தரையில் மொத்தியதோடு ஒன்றியுள்ளது. இது திட்டமிட்ட தரைதொடும் நொடிக்கு 2 மீ வேகத்துடன் முரண்படுகிறது.[40][140] திறனூட்டத் தரையிறக்கம் நாசாவின் நிலாக் கண்காணிப்பு வட்டணைக்கலத்தின் அறிவியல் கருவியான ஒருங்கொளி தொலைவளத்தல் கருவியாலும் நிலா வெளிவளிமண்கலத்தில் தரையிறங்கியின் வேக ஒடுக்கப் பொறிகள் வெளியிட்ட வளிமங்களால் ஏற்பட்ட மாற்றங்களும் நோக்கப்பட்டுள்ளன.[141] கே. சிவன் பழுது பகுப்பாய்வுக் குழுவின் தலவராக முதுநிலை அறிவியலாளரானபிரேம் சங்கர் கோயலை அமர்த்தி பழுதின் காரணங்களைப் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க சொன்னார்.[142]
நாசாவும் இசுரோவும் நிலா இரவு கவியும் முன்னே இரண்டு வாரம் வரை தரையிறங்கியோடு தொடர்புகொள்ள முயன்றன;[100][143] நாசாவின் நிலாக் கண்காணிப்புக்கல ஒருங்கொளி தொலைவளத்தல் கருவியால் 2019 செப்டம்பர் 17 இல் மீண்டும் பறந்தபோது தரையிறங்கிடத்தின் சில படிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன.[99] என்றாலும், ஒளிவழி படம் எடுக்க இயலாத அளவுக்கு அந்தப் பகுதி இருட்டில் இருந்தது;[144][145] தரையிறங்கியின் சுவடெதுவும் காட்டாத நாசாவின் படிமங்கள் 2019 செப்டம்பர் 26 இல் வெளியிடப்பட்டன.[134] மேலும் உகந்த வெளிச்சத்தில் நிலாக் கண்காணிப்பு வட்டணைக்கலம் 2019 அக்தோபர் 14 இல் மீண்டும் பறந்த போனது;[146][147] ஆனாலும் தரையிறங்கி இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.[148][149] நிலாக் கண்காணிப்பு வட்டணைக்கலம் மூன்றாம் முறையாக 2019, நவம்பர் 10 இல் பறந்து சென்றுள்ளது.[148]
பழுது பகுப்பாய்வுக் குழு, 2019, நவம்பர் 16 இல் வெண்வெளி ஆணையத்துக்கு அளித்த அறிக்கையில், ஒரு சிறு மென்பொருள் நெருடலால் மொத்தல் ஏற்பட்டதாகத் தன் முடிவை அறிவித்தது.[150] முதல் கட்டத்தில் நிலாத் தரையில் இருந்து 30 கி.மீ. இலிருந்து 7.4 கி.மீ. வரையிலான் குத்துயரத்தில் தரையிறங்கியபோது, திட்டமிட்ட கருதல்படி, விரைவு(திசை வேகம்) நொடிக்கு 1683 மீ இலிருந்து நொடிக்கு 146மீ வரை குறைந்தது. விகரம் பொறிகள் 40 முதல் 100% வரையிலான விரைவு நெடுக்கத்தை 20% படிநிலைகளில் குறைக்க வல்லனவாகும். வேக ஒடுக்கப் பொறிகளின் இந்த படிநிலை வேகக் குறைப்பு திட்டமிட்ட தரையிறங்கல் விறைவை அடைய போதுமாந்தாயில்லை; எனவே, இரண்டாம் கட்ட தரையிறங்கும் விரைவு எதிர்பார்த்ததை விட கூடுதலாகும். மேலும், பிற கட்டுபாட்டு, வழிகாட்டல் சார்ந்த சிக்கல்களையும் கருதும்போது[60] வரையளவு விரைவுக் குறைப்பின் விலக்கம், கல மென்பொருளின் வடிவமைப்பு அளவுருக்களுக்கு அப்பாற்பட்டதாகும்;[41] இதனால் விக்ரம் தரையிறங்கி வன்தரையிறக்கத்துக்கு ஆட்பட்டாலும், அது திட்டமிட்ட இறங்குகளத்துக்கு ஓரளவு அருகிலேயே இறங்கியுள்ளது.[151] முழு கண்டுபிடிப்புகள் பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை.[152][153][154]
விக்ரம் மொத்தல் கள இருப்பிடம் 70.8810தெ|22.7840 கி ஆயக்கூறுகளில் இருப்பதாக, LROC குழுவால் தமிழ் நாடு, சென்னை நகரத் தன்னார்வலர் சண்முக சுப்பிரமணியன் தந்த பயனுள்ள தரவுகளைப் பெற்றதும் அறிவிக்கப்பட்டது; இவர் நாசா வெளியிட்ட படங்களில் இருந்து விண்கலச் சிதிலங்களின் இருப்புகளைக் கண்டறிந்தார்.[155][156] முதலில் இறங்குகளத்தில் இருந்து 500 மீ தொலைவு தள்ளி வந்தறையிக்கம் உற்றதாகக் கருதினும் பிறகு, செயற்கைக்கோள் படிமங்களில் இருந்தான சரியான ஊகம் 600 மீ தொலைவு தள்ளி வன் தரையிறக்கம் அடைந்துள்ளதாகக் கணிக்கிறது.[157] விண்கலம் மொத்தலால் சிதறுண்டு,[158] பல கி.மீ. பரப்பில் சிதிலங்கள் 24 இடங்களில் காணப்படுகின்றன.[156]
திட்ட வட்டணைக்கலம் எட்டு அறிவியல் கருவிகளுடன் ஏழு ஆண்டுகளுக்கு இயங்கி நிலாவை ஆய்வுசெய்யும்.[159]
தொலையளவியல், தடக்கண்காணிப்பு, கட்டளை
சந்திரயான்-2 திட்ட விண்கல ஏவுதல், இயக்குதல் சார்ந்த பல்வேறு கட்டங்களிலும், தொலையளவியல், தடக்கண்காணிப்பு, கட்டளை ஆகிய பணிகளை இசுட்டிராக் எனும் இசுரோ தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையம் இந்திய ஆழ்வெளி வலைப்பிணையம் (IDSN) தேசிய ஆழ்வெளி வலைப்பிணையம், தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (INPE), அல்காந்தாரா, கியுவபா ஆகிய இடங்களின் தரைக் கட்டுபாட்டு நிலையங்கள் ஆகியன பொறுப்பேற்று நிறைவேற்றின.[173][174]
Remove ads
பின் நிகழ்வுகள்
தரையிறங்கி துண்டிப்புற்று தரையில் மோதிய பிறகு பல வட்டாரங்களில் இருந்து இசுரோவுக்கு ஆதரவுகள் பெருகின. என்றாலும் முதன்மையான செய்தி ஊடகம் தரையிறங்கி நொறுங்கியது பற்றியும் அதற்கான பகுப்பாய்வு முடிவுகள் பற்றியும் வெளிப்படையாக தொடர்பு வைக்காமை குறித்து கன்டித்தது.[175][176] இந்திய ஊடகங்கள் இசுரோ முந்தைய வெளிப்படையான பதிவுகளைப் போல, பொய்த்தல் பகுப்பாய்வுக் குழுவின் அறிக்கையை பொதுவெளியில் பகிரவில்லை எனக் கண்டித்தன,[177] மேலும் இதைப் பற்றித் தகவல் உரிமைச் சட்டம்,2005 இன்படி எழுப்பிய கேள்விகளுக்கு இசுரோ அச்சத்தின் 8() பிரிவைக் காட்டி பதிலளிக்க மறுத்தது.[178] தம் தரப்புகளுக்கான நிறுவல் ஏதும் தராமல், இசுரோ வெளியிடும் தரையிறங்கி நொறுங்கியமை பற்றி தரும் விளக்கங்களில் பொருத்தமின்மை அமைவதிச் சுட்டி விமர்சனம் எழுந்தது.நாசாவும் சென்னைசார் தனிப் பொறியாளர் ஒருவரும் முயற்சிகள் எடுத்து நிலாத்தரையில் தரையிறங்கியின் சிதிலமடைந்த பகுதிகளின் இருப்பிடங்களை சுட்டி விளக்கும் வரை இது தொடர நேர்த்தது குறிப்பிடத்தக்கதாகும்.[179] சந்திரயான்-2 நிகழ்ச்சிகளால் விழிப்புற்ற முன்னாள் இசுரோ பணியாளர்களளிசுரோ தலைவரின் கூற்றுகளை விமர்சனம் செய்து, இசுரோவின் மேலிருந்து அதிகாரம் செய்யும் நிறுவன வேலைமுறை வழக்கத்தை வெளிப்படுத்தினர்.[180][181][182]
Remove ads
சந்திரயான்-2 திட்ட அறிவியலாளர்கள்

சந்திரயான்-2 திட்டத்தின் முதன்மை அறிவியலாளரும் பொறியியலாளரும் பின்வருமாறு:[184][185][186]
- இரிது கரிதாள் – திட்ட முனைவு இயக்குநர்
- முத்தையா வனிதா – திட்ட இயக்குநர்
- கே. கல்பனா– உதவித் திட்ட இயக்குநர் [187]
- ஜி. நாராயணன் – உதவித் திட்ட இயக்குநர் [188]
- ஜி. நாகேசு – திட்ட இயக்குநர்(மேனாள்) [189]
- சந்திரகாந்த குமார் – இணை திட்ட இயக்குநர் (கதிர்வீச்சு அலைவெண் அமைப்புகள்)
- அமிதாப் சிங் – இணை திட்ட இயக்குநர் (ஒளி அறிவியல் கருவித் தரவுகள் செயலாக்கம், விண்வெளி பயன்பாடுகள் மையம் (SAC)) [190]
Remove ads
சந்திரயான்-3
இசுரோ அலுவலர்கள், 2019 நவம்பரில் புதிய 2023 ஜூலை 14 இல் நிலாவில் தரையிறங்கித் திட்டம் ஆய்வில் உள்ளதாகக் கூறினர் 2023;[191] இந்த முன்மொழிவு சந்திரயான்-3 எனப்படும் எனவும் இது 2025 இல் யப்பானுடன் இணைந்து செயல்படுத்தவுள்ள நிலா முனைய தேட்டத் திட்டத்துக்கு த் தேவைப்படும் நிலாவில் தரையிறங்கும் திறன்களை நிறுவுவதற்கான செயல்விளக்கமாக மீள எடுக்கும் முயற்சியாகும் எனவும் கூறப்பட்டது.[192][193] இந்த மறுமுயற்சிக்கு நிதி தரப்பட்டால், அதில் வட்டணைக்கலம் ஏதும் ஏவப்பட மாட்டாது.[194] இம்முன்மொழிவில் தொலைதொடர்பு அஞ்சல் ஊதவி செயற்கைக்கோள் போல இயங்கும் பிரிதகவு செலுத்தப் பெட்டகம் ஒன்றும்,[195] தரையிறங்கி ஒன்றும் தரையூர்தி ஒன்றும் மட்டுமே அமையும்.[196][197][198][199] மேலும், விக்ரம் சாராபய் செயர்கைக்கோள் மைய இயக்குநர் எசு. சோமநாத், சந்திரயான் நிகழ்நிரலில் பல தொடர்கண்கானிப்பு திட்டங்கள் அமையும் எனக் கூறியுள்ளார்.[41][200]
டைம்சு ஆஃப் இந்தியா கூற்றுப்படி, சந்திரயான்-3 இன் பணி 2019 நவம்பரில் தொடங்கிவிட்டது.[201] மேலும், 2019 திசம்பரில், இசுரோ திட்டத் தொடக்கநிலை நிதியாக 75 கோடி உரூபா வேண்டியதாகவும் இதில் 60 கோடி உரூபா முதலீட்டுச் செலவுக்கும் எஞ்சிய 15 கோடிஉரூபா வர்வாய்ச் செலவுக்கும் பயன்படும் என அறிவிக்கப்பட்டது.[202] இத்திட்ட நிலவலை உறுதிபடுத்திய இசுரோ தலைவர் சிவன் திட்டத்துக்கான மொத்த மதிப்பீடு 615 கோடி உரூபா ஆகும் என அறிவித்தார்.[203]
Remove ads
மேலும் காண்க
- நிலாத் தென்முனை
- நிலாத் தேட்டம்
- சந்திரயான் திட்டம்
- நிலாவில் தரையிறக்கம்
- மென்மையான தரையிறக்கம்
- வன் தரையிறக்கம்
- சந்திரயான்-1
- சந்திரயான்-3
- இந்திய விண்வெளி ஆய்வு மையம்
- மென்மையான தரையிறக்கம்
- ககன்யான் திட்டம் – விண்வெளித் திட்டத்தில் இந்தியர்
- சுக்ராயன்-1 – இந்திய வெள்ளித் தேட்டத் திட்டம்
- செவ்வாய் சுற்றுகலன் திட்டம் – இந்தியச் செவ்வாய்த் தேட்டத் திட்டம்
- ஆதித்யா-எல்-1 – இந்தியச் சூரிய நோக்கீட்டுத் திட்டம்
- நாவிக் - கோளக இடஞ்சுட்டி அமைப்புக்கு மாற்றான இந்தியச் செயல்திட்டம்
- இந்திய விண்வெளி நிலையம்
- இந்திய செவ்வாய்த் தேட்டத் திட்டங்கள்
- இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டம்
Remove ads
வெளி இணைப்புகள்
- Official Chandrayaan-2 mission page பரணிடப்பட்டது 29 சூலை 2019 at the வந்தவழி இயந்திரம், by the Indian Space Research Organisation
- GSLV-Mk III launcher பரணிடப்பட்டது 12 செப்டெம்பர் 2019 at the வந்தவழி இயந்திரம், by the Indian Space Research Organisation
மேற்கோள்களும் குறிப்புகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads