செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்map
Remove ads

செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Serdang Raya Utara MRT Station; மலாய்: Stesen MRT Serdang Raya Utara) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், செரி கெம்பாங்கான், தாமான் செர்டாங் ராயா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். தாமான் செர்டாங் ராயா பகுதிகளுக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 16, 2023 அன்று முறைப்படி திறக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் PY31 செர்டாங் ராயா உத்தாரா, பொது தகவல்கள் ...

தற்போது  PY29  சுங்கை பீசி நிலையத்திற்கும்  PY32  செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம்  PY31  எனும் நிலையக் குறியீட்டைக் கொண்டுள்ளது.[1] கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்கு மாடி அமைப்பைக் கொண்டுள்ளது.

Remove ads

வரலாறு

இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); 12 புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2023 மார்ச் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது.[1] இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் செர்டாங் ராயா உத்தாரா நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது.

முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது 12 புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது. இந்த  PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட நிலையமாக உருவாக்கப்பட்டது.[1]

கட்டுமானங்கள்

டிஆர்சி எனர்ஜி (TRC Synergy) எனும் நிறுவனத்துடன் மலேசிய அரசாங்கம் செய்து கொண்ட கட்டுமான உடன்படிக்கையின் கீழ் செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் அடுக்குமாடி நிலையில் உருவாக்கப்பட்டது. 2017 செப்டம்பர் மாதம் கையெழுத்தான அந்த உடன்படிக்கையின் கீழ்  PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையக் கட்டுமான கட்டமைப்புகள் டிஆர்சி எனர்ஜி நிறுவனத்திடம் வழங்கப்பட்டன. இந்தக் கட்டுமான கட்டமைப்பிற்கு தொகுப்பு V205 (Pakej V205) என பெயர் வைக்கப்பட்டது.

கட்டுமான கட்டமைப்புகளில் நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் அடங்கும். அவற்றுள்  PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையத்தின் கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளும் உள்ளடங்கும்.[2][3][4]

அத்துடன், V205 கட்டுமானத் தொகுப்பில்  SP16   PY29  சுங்கை பீசி நிலையம்; மற்றும்  PY30  தாமான் தெக்னோலஜி எம்ஆர்டி நிலையக் கட்டுமானமும் அடங்கும். அதே டிஆர்சி எனர்ஜி நிறுவனத்திடம் நவம்பர் 2016-இல் RM 858.18 மில்லியனுக்கு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.[5]

Remove ads

செயல்பாடு

 PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம், பொதுமக்களுக்கு மார்ச் 16, 2023 அன்று திறக்கப்பட்டது.  KC03   PY14  பத்து கன்டோன்மன் கொமுட்டர் நிலையம் தொடங்கி  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான பிற புத்ராஜெயா வழித்தட நிலையங்களுடன் இணைந்து இந்த நிலையமும் செயல்படத் தொடங்கியது.

அமைவு

செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் சிலாங்கூரில் உள்ள மாவட்டங்களில் ஒன்றான உலு லங்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. E37 கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலையின் சுங்கை பீசி சுங்கச் சாவடி; E2 கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை; மற்றும் E2 மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடம் ஆகியவற்றுக்கு அருகில் இந்த நிலையம் அமைந்துள்ளது.[6]

கட்டமைப்பு

ரேபிட் கேஎல் வெளியிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து வரைபடத்தின் அடிப்படையில்,  PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் தெரு மட்டத்தில், வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.[7]

 PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது.[5] அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுப் பாதைகள்; நிலையத்தைச் சுற்றியுள்ள தரை மேற்பரப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொடு தொகுதிகள்; அவர்களுக்கு ஏற்ற கழிவறைகள்; சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை மின்தூக்கி பொத்தான்கள்; மின்தூக்கி பொத்தான்களில் பிரெய்லி எழுத்து பொத்தான்கள் மற்றும் சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை சேவை மையங்கள் போன்றவை அடங்கும்.[7]

கூடுதலாக, பொது கழிவறை வசதிகள், ஆண்கள் பெண்களுக்கான வழிபாட்டு அறைகள் (Surau), வாடிக்கையாளர் சேவை மையங்கள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் ஆகியவை பயனர்களின் தேவைகளையும் வசதியையும் நிறைவு செய்ய அமைக்கப்பட்டு உள்ளன. நிலைய நுழைவு மட்டத்தில் உள்ள தற்சேவை பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலம் பயனர்கள் பயணச் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.[7]

Remove ads

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

இந்த நிலையத்தில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.[8]

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், அமைவிடம் ...
Remove ads

பேருந்து சேவைகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, தொடக்கம் ...
Remove ads

காட்சியகம்

செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads