சௌந்தரராஜா

நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சௌந்தரராஜா (Soundararaja) என்பவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் இந்திய நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழ் திரையுலக நடிகர் மற்றும் குறும்பட இயக்குநர் ஆக பணிபுரிந்தார்.[1]. தொகுப்புப் பொறியாளராக சிங்கப்பூர் மற்றும் பிரான்சில் பணிபுரிந்ததைத் தொடர்ந்து அவர் நடிப்பை ஒரு தொழிலாகக் கருதத் தொடங்கினார். ஒரு பின்னணி நடிகராகப் பணியாற்றினார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறிய துணை வேடங்களில் நடித்தார். சுந்தரபாண்டியன் (2012) மற்றும் ஜிகர்தண்டா (2014) ஆகிய படங்களில் வில்லனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டு மீண்டும் பல்வேறு திட்டங்களில் பல வேடங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் தர்ம துரையில் மீண்டும் வில்லனாக நடித்தார். இதே ஆண்டில் கவுண்டமணியுடன் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையது (2016) திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

விரைவான உண்மைகள் சௌந்தரராஜாSoundararaja, தாய்மொழியில் பெயர் ...

இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து 2017 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 11 ஆம் தேதியன்று மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையைத் தொடங்கினார். நம்பிக்கையாளர்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் இருபத்தைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளை நட்டுள்ளார். ஒரு சமூக ஆர்வலராக தமிழகம் முழுவதும் பல முக்கிய சமூக விவகாரங்களில் பங்கேற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் இவர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுடன் உரையாடிய ஜல்லிக்கட்டு ஆதரவுக் குழுவின் பிரதிநிதிகளில் இவரும் ஒருவர்.[2][3][4]

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சொந்த ஊரில் முடித்துவிட்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். பள்ளியில் இருந்தே சராசரிக்கும் குறைவான மாணவராக இருந்தார். மேலும் விளையாட்டு அல்லது பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் பொதுவாக இவர் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் நிறைய நிகழ்ச்சிகளை செய்தார்.

சில்லறை விற்பனைக் கடையில் விற்பனையாளர், விளம்பரதாரர் மற்றும் பல பகுதிநேர வேலைகள் செய்தார். 2004 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பார்த் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து பிரான்சு நிறுவனத்திற்கு மாறினார். 2007 இல் கத்தாரில் பணிபுரிந்தார்.

2008 இல் இந்தியா திரும்பினார். மதுரை டூரிங் டாக்கீசு என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை அவர் தனது பால்ய நண்பரான காக்கா முட்டையின் இயக்குநரான எம்.மணிகண்டனுடன் இணைந்து தொடங்கினார். மேலும் நண்பர்களுடன் பங்குச் சந்தை வியாபாரத்தில் சிறிது பணத்தை முதலீடு செய்தார். பின்னர் கூத்துப் பட்டறையில் யில் சேர்ந்தார். இவரும் இவரது நண்பர்களான மணிகண்டன் மற்றும் ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் துரு, ராவணம், காற்று, அறம் பல குறும்படங்களைத் தயாரித்தனர்.

Remove ads

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

பதக்கம்

  • தமிழ்நாடு பாரத் சிறந்த​ வில்லன் பதக்கம்(2012) சுந்தர பாண்டியன் படத்திற்காகப் பெற்றார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads