திருப்பூர் தொடருந்து நிலையம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டம், 'திருப்பூர் தொடருந்து நிலையம்'. From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருப்பூர் தொடருந்து நிலையம் (Tiruppur railway station, நிலையக் குறியீடு:TUP) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருப்பூர் மாநகரத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
இந்த தொடருந்து நிலையம் தெற்கு இரயில்வே மண்டலத்தின், சேலம் இரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.
Remove ads
அமைவிடம்
திருப்பூர் நகரமானது, ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குவதால் தொடருந்து போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த தொடருந்து நிலையமானது திருப்பூர் நகரத்திலேயே அமைந்துள்ளது மற்றும் இதன் அருகிலேயே திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள்ளது. புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு 10-15 நிமிடம் வரை ஆகும்.[1]
இந்த தொடருந்து நிலையம் சென்னை–பாலக்காடு அகலப்பாதை (1983 இல் அமைக்கப்பட்டது) முழுமையாக மின்மயமாக்கப்பட்டு இரண்டு தடங்களைக் கொண்டுள்ளது. திருவனந்தபுரம் மெயில் மற்றும் பெங்களூர் கொச்சுவேலி விரைவுத் தொடருந்து போன்ற சில வண்டிகளைத் தவிர கிட்டத்தட்ட பெரும்பாலன விரைவுத் தொடருந்துகள் இந்நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன.
ஒரு நாளைக்கு சுமார் 30,000 பயணிகள் திருப்பூருக்கு பயணம் செய்கிறார்கள்.[2] இதனால், திருப்பூர் தொடருந்து நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். பெரும்பாலான தொடருந்துகள் 2 நிமிடங்களுக்கு மட்டுமே நிற்கின்றன. இதனால் சரக்கு தொடருந்துகள் நிறுத்துவதற்கு சாத்தியமில்லை.[3]
இந்த நிலையத்திற்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
Remove ads
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [4][5][6][7][8]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திருப்பூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [9][10][11][12][13][14][15] தெற்கு பக்கமும் வடக்கு பக்கமும் பிரம்மாண்ட நுழைவாயில்கள் மற்றும் பல்லடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகம் அமைக்கப்படவுள்ளது. [16]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads