தேசிய நெடுஞ்சாலை 138 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 138 (National Highway 138 (India)) என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை இணைக்கும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...


முன்பு இந்த சாலை 7எ என்று பெயரிடப்பட்டிருந்தது.[2]

Remove ads

வழித்தடம்

இந்த நெடுஞ்சாலை திருநெல்வேலி நகரில் உள்ள பாளையங்கோட்டையைத் தூத்துக்குடி நகரத்தில் உள்ள வ. உ. சிதம்பரனார் துறைமுகத்துடன் இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்குச் சரக்குகளை விரைவாகக் கொண்டு செல்ல முடியும். இது துறைமுகத்திற்கு நேரடி பாதையை வழங்குகிறது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 54 கி. மீ. ஆகும்.

தூத்துக்குடி வானூர்தி நிலையம் வாகைகுளம் அருகே இந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விமான நிலையம் தூத்துக்குடி நகரத்திலிருந்து 26 கி. மீ. தொலைவிலும், திருநெல்வேலி நகரத்திலிருந்து 28 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

Remove ads

விரிவாக்கம்

தேசிய நெடுஞாலை 138, தூத்துக்குடி துறைமுகப் பகுதி 6.1கி.மீ நிளமுள்ள பகுதி ஆறு வழிப் பாதையாக மேம்படுத்தப்படுகின்றது. [3]

26 ஜீலை 2025 அன்று, பிரதமர் நரேந்திர மோதி தே.நெ 138ன் பகுதியான தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் 200கோடி மதிப்பினில் கட்டப்பட்ட ஆறு வழிச்சாலையை நாட்டிற்கு அர்பணித்து வைத்தார்.[4]

நன்மைகள்

  • துறைமுகப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads