தேசிய நெடுஞ்சாலை 744 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 744 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 744 (National Highway 744 (India)) அல்லது தே. நெ. 744 (முன்பு தே. நெ. 208) [1] என்பது தென்னிந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது கேரளாவில் உள்ள கொல்லத்தைத் தமிழ்நாட்டின் மதுரையுடன் இணைக்கிறது.[2] கொல்லத்தில் உள்ள சின்னக்கடையில் தே. நே. 66 இல் தொடங்கி, தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா) மதுரையில் திருமங்கலத்தில் இணைகிறது.[2]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

முன்பு இந்த சாலை தேசிய செடுஞ்சாலை 208 என்று பெயரிடப்பட்டிருந்தது.[3]

மத்திய வரவு செலவு திட்டத்தினை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மதுரை கொல்லம் நெடுஞ்சாலை உட்படத் தமிழகத்தில் 3,500 கி. மீ. நெடுஞ்சாலைகளை மேம்படுத்த 1.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகத் திங்கள்கிழமை அறிவித்தார்.

Remove ads

பாதை விளக்கம்

இந்த வழித்தடம் வரலாற்று ரீதியாக முந்திரி மற்றும் மசாலா உற்பத்தி செய்யும் கொல்லம் மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைத்துள்ளது. தற்போது, தமிழகத்திலிருந்து பல்வேறு சரக்குகளை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்கின்றன. ஆரியங்காவு பகுதியில் உள்ள குறுகிய இடைவெளியில் சாலை வெட்டப்பட்டு, குறிப்பாகத் தென்மலை முதல் செங்கோட்டை வரையிலான பாதை பார்வைக்கு இன்பம் தரும் அழகுமிக்க இடமாக உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லம்-செங்கோட்டை ரயில் பாதை இச்சாலையின் ஓரமாகச் செல்கிறது.[4]

சின்னக்கடை → கல்லும்தாழம் கேரளாபுரம் குந்தாரா → கொட்டாரக்கரைபுனலூர்தென்மலைஆரியங்காவுசெங்கோட்டைதென்காசிகடையநல்லூர்புளியங்குடிவாசுதேவநல்லூர்சிவகிரி →இராஜபாளையம் → திருவில்லிபுத்தூர்திருமங்கலம்[5]

Remove ads

விரிவாக்கம்

தே. நெ. 744-ல் கேரளாவின் கடம்பட்டுகோணம் - தேனமலாவில் புதிய சீரமைப்பு செய்யப்படுகிறது. செய்தி அறிக்கைகள்[6] மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்[7] தரவுகளின்படி, தே. நெ. 744இல் திருமங்கலம் (தே. நெ. 44) மற்றும் ராஜபாளையத்திற்கு இடையே உள்ள பகுதியைச் சுங்கச்சாவடியுடன் கூடிய நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதன் மொத்த தூரம் 68 கி. மீ. ஆகும்.

மதுரை அருகே கொல்லம்-திருமங்கலம் இடையேயான தேசிய நெடுஞ்சாலை-744-க்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கும் பணி, பாரத்மாலா பரியோஜனா கட்டம் I-ன் கீழ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலம் மேம்படுத்தப்பட உள்ளது.[8]

2021 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் பொழுது நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், மதுரை கொல்லம் வழித்தடத்தை மேற்கொள்ளும் திட்டத்தினை முன்மொழிந்தார்.[9][10]

பிரதமர் நரேந்திர மோதி, கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை 744க்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.[11]

திட்டங்கள் பின்வருமாறு மேம்படுத்தப்படுகின்றது.[12][13]

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், மாநிலம் ...

மதுரை – கொல்லம் நெடுஞ்சாலையில், முதற்கட்டமாக திருமங்கலத்திலிருந்து வடுகப்பட்டி வரையிலும், வடுகப்பட்டியிலிருந்து தெற்கு வேங்கநல்லூர், ராஜபாளையம் வரையிலும் பணிகள் 2415 கோடியில் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்டமாக ராஜபாளையத்திலிருந்து செங்கோட்டை வரை 2849.22 கோடியில் பணி நடைபெற துவங்குகின்றன.[14][15]

Remove ads

முக்கிய சந்திப்புகள்

மேலதிகத் தகவல்கள் மாநிலம், மாவட்டம் ...

படங்கள்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads