பாசிர் மாஸ் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

பாசிர் மாஸ் தொடருந்து நிலையம்
Remove ads

பாசிர் மாஸ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Pasir Mas Railway Station மலாய்: Stesen Keretapi Pasir Mas) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், பாசிர் மாஸ் மாவட்டம், பாசிர் மாஸ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பாசிர் மாஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. அத்துடன் இந்த நிலையம் கிம்மாஸ், குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களையும் இணைக்கிறது.

விரைவான உண்மைகள் பாசிர் மாஸ், பொது தகவல்கள் ...

இந்த நிலையம் பயன்படுத்தப்படாத முந்தைய ரந்தாவ் பாஞ்சாங் வழித்தடத்தின் இடைமாற்று நிலையமாகவும் உள்ளது. அசல் தொடருந்து நிலையத்திற்குப் பதிலாக ஒரு புதிய தொடருந்து நிலையம் சூலை 2008-இல் கட்டி முடிக்கப்பட்டது.[1]

Remove ads

பொது

பாசிர் மாஸ் நகரில் இருந்து கோலாலம்பூர் மாநகருக்கு தொடருந்து சேவை உள்ளது. இருப்பினும் அந்தச் சேவை கிம்மாஸ் நகரில் இருந்து தொடங்குகிறது. பாசிர் மாஸ் நகரில் இருந்து கிம்மாஸ் நகருக்குச் செல்லும் பாதையில் தெமாங்கான், தோக் உபான் போன்ற பல சிறிய தொடருந்து நிலையங்களும் நிறுத்தங்களும் உள்ளன.

இந்த பாசிர் மாஸ் தொடருந்து நிலையம், கிளாந்தானில் உள்ள மிகப்பெரிய தொடருந்து நிலையங்களில் ஒன்றான கோலா கிராய் தொடருந்து நிலையத்தையும் இணைக்கிறது. பாசிர் மாஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறிய நிலையம் ஜெரெக் (Jerek) என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையம் பெரும்பாலும் நகரப் பகுதிக்கான வணிகத் தளமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மலேசியா - தாய்லாந்து எல்லையைக் கடக்கும் ரந்தாவ் பாஞ்சாங் / சுங்கை கோலோக் பாலத்திற்கு மிக அருகில் உள்ளது.[2]

Remove ads

பாசிர் மாஸ் நகரம்

பாசிர் மாஸ் நகரின் புவியியல் அமைப்பின் காரணமாக, மலேசியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து தாய்லாந்தின் முக்கிய நுழைவாயிலாகச் செயல்படுகிறது. 1990-களின் முற்பகுதி வரை இந்த நகரம் கிளாந்தான் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக இருந்தது. பின்னர் அது தானா மேராவால் முறியடிக்கப்பட்டது.

இந்த நகரம் தாய்லாந்து நாட்டு எல்லைக்கு மிக அருகில் உள்ளது. அத்துடன் பாசிர் மாஸ் மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் விளங்குகிறது.

Remove ads

தொடருந்து சேவைகள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads