போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையம்map
Remove ads

போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடு: PTJ), கோயம்புத்தூர் போத்தனூரில் உள்ள ஓர் இந்திய தொடருந்து நிலையமாகும். இது தெற்கு ரயில்வே மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது மற்றும் இந்திய இரயில் நிலைய வகைப்பாட்டு முறையின் கீழ் என். எஸ். ஜி-5 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் போத்தனூர் சந்திப்பு, பொது தகவல்கள் ...

 

மேலதிகத் தகவல்கள் சேலம்–பாலக்காடு வழித்தடம் ...
Remove ads

வரலாறு

மேற்குக் கடற்கரையை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் போத்தனூர்-சென்னை பாதையின் ஒரு பகுதியாக 1862 ஆம் ஆண்டில் போத்தனூரில் ரயில் நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் கோயம்புத்தூரில் ரயில் சேவை தொடங்கியது.[1] இது இன்றைய தமிழ்நாட்டின் எல்லைக்குள் செயல்படும் மூன்றாவது ரயில் நிலையமாகும்.போத்தனூரை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கும் கிளை வழித்தடம் 1873 பிப்ரவரியில் செயல்படத் தொடங்கியது. 1956 வரை, கோயம்புத்தூர் ரயில்வே பிரிவு போத்தனூரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வந்தது, தலைமையகம் ஓலவக்கோட்டுக்கு மாற்றப்பட்டது, பின்பு இது பாலக்காடு தொடருந்து கோட்டமாக மாறியது.[2] இந்த நிலையம் 2006 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் தொடருந்து கோட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது என். எஸ். ஜி-5 நிலையமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது (வருடாந்திர வருவாய் 10 முதல் 100 மில்லியன் ரூபாய் மற்றும் 1 முதல் 2 மில்லியன் பயணிகள் கையாளப்படுகிறார்கள்.[3]  

Remove ads

தொடருந்து பாதைகள்

இந்த நிலையத்தில் ஐந்து நடைமேடைகள் உள்ளன. இந்த நிலையம் ஜோலார்பேட்டை-ஷோரனூர் பாதை மற்றும் கோயம்புத்தூர்-பொள்ளாச்சி பாதை மற்றும் கோவை-மேட்டுப்பாளையம் பாதை ஆகியவற்றின் சந்திப்பாக செயல்படுகிறது.[4]

சேவைகள்

இந்த நிலையம் நீண்ட தூர ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில்களை கையாளுகிறது. [5] கோயம்புத்தூர்-பொள்ளாச்சி வழித்தடத்தின் பாதை மாற்றம் முடிந்த பிறகு, இந்த நிலையம் கோயம்புத்தூர் சந்திப்பு துணை ரயில் நிலையமாக செயல்படுகிறது.

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [6][7][8][9][10]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [11][12][13][14][15][16][17][18][19][20]

Remove ads

மேலும் காண்க

  • கோயம்புத்தூரில் போக்குவரத்து

குறிப்புகள்


வெளி இணைப்புகள்


சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads