யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம்map
Remove ads

யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம் (Jaffna railway station, யாழ்ப்பாணம் புகையிரத நிலையம்) என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வடக்குப் பாதை தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து யூன் 1990 முதல் இயங்காமல் இருந்தது. இந்நிலையம் போர் உக்கிரமடைந்த காலத்தில் பெரிதும் சேதமுற்றது. மே 2009 இல் போர் முடிவடைந்தததை அடுத்து இலங்கை அரசு இந்தியாவின் உதவியுடன் இப்பாதையின் புனரமைப்பை மேற்கொண்டது. கொழும்பு கோட்டையில் இருந்தான சேவைகள் யாழ்ப்பாணம் வரை 2014 அக்டோபர் 13 முதல் அதிகாரபூர்வமாக இயங்குகிறது.[1][2]

விரைவான உண்மைகள் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம்Jaffna Railway Station, பொது தகவல்கள் ...
Remove ads

வரலாறு

1902 மார்ச் 11 இல் ஆளுநர் சேர் ஜே. டபிள்யூ. ரிட்ஜ்வே என்பவரால் காங்கேசன்துறை முதல் சாவகச்சேரி வரையிலான பாதை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.[3][4] 1902 செப்டம்பர் 5 இல் 14 மைல் நீள சாவகச்சேரி-பளை வரையான பகுதி திறக்கப்பட்டது. 1904 நவம்பர் 1 இல் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரையான பகுதி ஆரம்பிக்கப்பட்டது. .1905 மார்ச் 11 இல் மதவாச்சி வரை நீடிக்கப்பட்டது.[3] 1905 ஆகத்து 1 இல் முதலாவது தொடருந்து கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது.[3][5] இதற்கான பயண நேரம் 13 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக இருந்தது.

Thumb
ஈழப்போரில் சேதமடைந்த யாழ் புகையிரத நிலையம்

யாழ் தேவி என அழைக்கப்படும் விரைவு வண்டி 1956 ஏப்ரல் 23 இல் வடக்குப் பாதையில் முதன் முதலாக சேவையில் விடப்பட்டது. இதன் மூலம் கொழும்பு-யாழ்ப்பாணப் பயண நேரம் 7 மணித்தியாலங்களால் குறைக்கப்பட்டது.[5][6] இச்சேவை மூலம் கொழும்பு கோட்டைக்கு அடுத்த படியாக யாழ்ப்பாணத் தொடருந்து நிலையம் இலங்கையின் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமாக உருவெடுத்தது.[7] யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையே தினமும் எட்டு பயணிகள் வண்டிகளும், ஆறு சரக்கு வண்டிகளும் சேவையில் ஈடுபட்டன. 1980களின் ஆரம்பத்தில் நாள்தோறும் ஆறாயிரம் பயணிகள் வரை வடக்குப் பாதையூடாக சென்று வந்தனர்.

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்பக்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads