லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி

From Wikipedia, the free encyclopedia

லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டிmap
Remove ads

லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி (Los Angeles County), அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்கில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு கலிபோர்னியாவில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இக்கவுண்டியின் தலைமையிடம் லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரம் ஆகும். இக்கவுண்டி 17 மாவட்டங்களைக் கொண்டது. சூலை 2024 கணக்கெடுப்பின்படி 38,20,914 குடியிருப்புகள் கொண்ட இக்கவுண்டியின் மக்கள் தொகை 97, 57,179 ஆகும். லாஸ் ஏஞ்சலீசில் உள்ள ஹாலிவுட் நிறுவனம் திரைப்படம் தயாரிப்பதில் உலகில் முன்னணி வகிக்கிறது. மேலும் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் உள்ள டிஸ்னிலாண்ட் மிகச் சிறந்த பொழுது போக்கு அம்சங்கள் கொண்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) புகழ்பெற்றது.

விரைவான உண்மைகள் லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி, நாடு ...
Remove ads

அமைவிடம்

லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் வடக்கில் கெர்ன் கவுண்டி, கிழக்கில் சான் பெர்னார்டினோ கவுண்டி, தென்கிழக்கில் ஆரஞ்ச் கவுண்டி, தெற்கில் பசிபிக் பெருங்கடல், மேற்கில் வென்சுரா கவுண்டி எல்லைகளாக உள்ளது.

புவியியல்

Thumb
லாஸ் ஏஞ்சலஸ்
வெஞ்சுரா கவுண்டி
கெர்ன் கவுண்டி
சான் பெர்னார்டினோ கவுண்டி
ஆரஞ்சு கவுண்டி
Thumb
லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி மற்றும் அருகமைந்த கவுண்டிகள்
Thumb
லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் எல்லைகள்

ஐக்கிய அமெரிக்காவின் கணக்கெடுப்பு பணியகத்தின் கணக்குப்படி, 4,751 சதுர மைல்கள் (12,310 km2) பரப்பளவு கொண்ட லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில் 85% நிலப்பரப்புகளும்; 693 சதுர மைல்கள் (1,790 km2) (15%) நீர் நிலைகள் கொண்டுள்ளது.[6]லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி பசிபிக் பெருங்கடலை ஒட்டி 70 மைல் நீளத்திற்கு எல்லையைக் கொண்டுள்ளது. மேலும் மலைத்தொடர்களும், லாஸ் ஏஞ்சலஸ் ஆறு, சான் கேப்பிரியல் ஆறு, சாண்ட கிளாரா ஆறு மற்றும் காடுகளும், பாலைவனங்களும் கொண்டுள்ளது. இதன் மேற்கில் உள்ள ஆண்டலோப் பள்ளத்தாக்கில் மொகாவி பாலைவனத்தின் நீட்சிகள் காணப்படுகிறது.

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள இக்கவுண்டியை மேற்கிலிருந்து கிழக்காக சான் கேப்பிரியல் மலைத்தொடர் பிரிக்கிறது. சான் கேப்பிரியல் மலைத்தொடரில் உயர்ந்த கொடுமுடி 10,068 அடிகள் (3,069 m) உயரத்தில் உள்ளது.

பெரும்பாலான மக்கள் லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் தெற்கிலும், தென்கிழக்கிலும் லாஸ் ஏஞ்சலீஸ் ஆற்றின் வடிநிலத்திலும், சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கிலும் மற்றும் சான் கேப்பிரியேல் பள்ளத்தாக்கிலும் அதிகம் வாழ்கின்றனர். மேலும் சாண்ட கிளாரிட்டா பள்ளத்தாக்கு மற்றும் பொமொனா பள்ளத்தாக்கு மற்றும் ஆண்டிலோப் பள்ளத்தாக்கு பகுதிகளில் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

இக்கவுண்டி பசிபிக் பெருங்கடலில் சான் கிளமெண்ட் தீவு மற்றும் சாண்டா கட்டலினியா தீவுகளைக் கொண்டுள்ளது.

Remove ads

கோடைகால ஒலிம்பிக் போட்டிகள்

லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில் ஏற்கனவே 1932 மற்றும் 1984 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.

தற்போது மூன்றாம் முறையாக லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில் உள்ள பொமோனா நகரத்தின் ஃபேர்பிளக்ஸ் விளையாட்டுத் திடலில் 2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. 1900ஆம் ஆண்டிற்கு பிறகு 2028 கோடைக்கால ஒலிம்பிக் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெறுவது சிறப்பம்சாகும்.

தட்ப வெப்பம்

லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் வடக்குப் பகுதியில் பாலவனக் காலநிலையும், கவுண்டியில் பிற பகுதிகள் அரை வறண்ட காலநிலையும், மிகுந்த வெப்பநிலையும், நடுநிலக்கடல் சார் வானிலையும் கொண்டுள்ளது. குளிர்காலத்தில் வடக்கு-மத்தியப் பகுதிகளில் உள்ள மலைத்தொடர்களில் பனி மழை பொழிகிறது.[7]

மக்கள் தொகை பரம்பல்

Thumb
லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில் இனத் தோற்றம்

2020 கணக்கெடுப்பு

மேலதிகத் தகவல்கள் இனக்குழுக்கள் / பழங்குடிகள் (NH = எசுப்பானியர் அல்லாதோர்), மக்கள் தொகை 1980 ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads